Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Versetto: (21) Sura: Al-Hadîd
سَابِقُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَالْاَرْضِ ۙ— اُعِدَّتْ لِلَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ؕ— ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
57.21. -மனிதர்களே!- நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் பாவமன்னிப்புத் தேடுதல் மற்றும் ஏனைய வணக்கங்களான நற்செயல்களின்பால் விரையுங்கள். அதன் மூலம் நீங்கள் வானம் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தைப் பெறலாம். தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்பவர்களுக்காக இச்சுவனத்தை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான். இந்தக் கூலி அல்லாஹ்வின் அருளாகும். அவன் தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது மகத்தான அருளுடையவனாவான்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• الزهد في الدنيا وما فيها من شهوات، والترغيب في الآخرة وما فيها من نعيم دائم يُعينان على سلوك الصراط المستقيم.
1. உலகிலும் அதன் இச்சைகளிலும் பற்றற்று இருப்பது, மறுமையிலும் அங்குள்ள நிரந்தர இன்பத்திலும் நாட்டம்கொள்வது ஆகிய இரண்டும் நேர்வழியில் செல்வதற்கு உதவக்கூடிய காரணிகளாக இருக்கின்றன.

• وجوب الإيمان بالقدر.
2. விதியை நம்புவதன் அவசியம்.

• من فوائد الإيمان بالقدر عدم الحزن على ما فات من حظوظ الدنيا.
3. உலகில் இழந்தவற்றை எண்ணி மனிதன் கவலைகொள்ளமல் இருப்பது விதியின்மீது நம்பிக்கைகொண்டதன் பயனில் உள்ளதாகும்.

• البخل والأمر به خصلتان ذميمتان لا يتصف بهما المؤمن.
4. கஞ்சத்தனமும் அதன்படி செயல்பட ஏவுவது போன்ற இரண்டு பண்புகளும் மோசமான பண்புகளாகும். நம்பிக்கையாளன் இவ்விரண்டையும்கொண்டு வர்ணிக்கப்பட மாட்டான்.

 
Traduzione dei significati Versetto: (21) Sura: Al-Hadîd
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi