Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Yâ-Sîn   Versetto:
اَوَلَمْ یَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَیْدِیْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ ۟
36.71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக கால்நடைகளைப் படைத்துள்ளோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அந்த கால்நடைகளுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். தங்களின் நலன்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
Esegesi in lingua araba:
وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا یَاْكُلُوْنَ ۟
36.72. நாம் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்தி கட்டுப்பட்டவையாக ஆக்கியுள்ளோம். அவற்றில் சிலவற்றின் முதுகுகளில் அவர்கள் சவாரி செய்கிறார்கள். தங்களின் சுமைகளை ஏற்றிச்செல்கிறார்கள். சிலவற்றின் மாமிசத்தை உண்கிறார்கள்.
Esegesi in lingua araba:
وَلَهُمْ فِیْهَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ— اَفَلَا یَشْكُرُوْنَ ۟
36.73. அவற்றின் முதுகுகளில் சவாரி செய்வது, அவற்றின் இறைச்சியை உண்பது என்பவற்றைத் தவிர அவர்களுக்கு அவற்றில் இன்னும் பல பயன்களும் இருக்கின்றன. உதாரணமாக அவற்றின் தோல்கள், உரோமங்கள், முடி, பெறுமதி. அதிலிருந்து அவர்கள் விரிப்புகளையும் ஆடைகளையும் செய்கிறார்கள். அதிலே அவர்களுக்கு குடிபானமும் இருக்கிறது. அவற்றின் பாலை அருந்தவும் செய்கிறார்கள். அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைகளுக்கும் இது அல்லாத எனையவற்றுக்கும் அவர்கள் நன்றிசெலுத்த மாட்டார்களா?
Esegesi in lingua araba:
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
36.74. இணைவைப்பாளர்கள் தங்களுக்கு உதவி செய்யும்பொருட்டு அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவை அவர்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாத்து உதவும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அவற்றை வணங்கி வழிபடுகின்றனர்.
Esegesi in lingua araba:
لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ۟
36.75. அவர்கள் ஏற்படுத்திய அந்த தெய்வங்கள் தமக்குத் தாமே உதவிசெய்து கொள்ளவோ, தங்களை வணங்குபவர்களுக்கு உதவிசெய்யவோ சக்தி பெற மாட்டா. அவர்களும், அவர்கள் வணங்கிய சிலைகளும் வேதனையில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட்டு விலகி விடுவார்கள்.
Esegesi in lingua araba:
فَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ— اِنَّا نَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
36.76. -தூதரே!- “நிச்சயமாக நீர் தூதர் அல்ல, அல்லது நிச்சயமாக நீர் ஒரு கவிஞர்” என்று அவர்களின் கூறும் வார்த்தைகளும் எனைய அவதூறுகளும் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அவற்றில் மறைத்து வைத்திருப்பதையும் வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை. அதற்கேற்ப நாம் அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.
Esegesi in lingua araba:
اَوَلَمْ یَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟
36.77. மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் மனிதன் நிச்சயமாக நாம் அவனை விந்திலிருந்து படைத்தோம் என்பதைக் கவனிக்கவில்லையா? பின்னர் அவன் பல நிலைகளைக் கடந்து குழந்தையாகி வளர்ச்சியடைகிறான். பின்னர் அவன் கடும் தர்க்கம் புரிபவனாகி விடுகிறான். இதனை அவன் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது சாத்தியம் என்பதற்கான ஆதாரமாகக் கருதவில்லையா?
Esegesi in lingua araba:
وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِیَ خَلْقَهٗ ؕ— قَالَ مَنْ یُّحْیِ الْعِظَامَ وَهِیَ رَمِیْمٌ ۟
36.78. உக்கிப்போன எலும்புகளை வைத்து, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதும் இந்த நிராகரிப்பாளன் அறியாமையில் ஆழ்ந்துவிட்டான். ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து படைக்கப்பட்டதை மறந்த நிலையில் அவன், ”இந்த எலும்புகளை மீண்டும் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.
Esegesi in lingua araba:
قُلْ یُحْیِیْهَا الَّذِیْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ ؕ— وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِیْمُ ۟ۙ
36.79. -தூதரே!- நீர் அவனிடம் பதில் கூறுவீராக: “அந்த உக்கிப்போன எலும்புகளை முதன் முறையாகப் படைத்தவனே அவற்றை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். முதன் முறையாகப் படைத்தவனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது இயலாத ஒன்றல்ல. அவன் தன் ஒவ்வொரு படைப்பைக் குறித்தும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Esegesi in lingua araba:
١لَّذِیْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ۟
36.80. -மனிதர்களே!- அவனே உங்களுக்காக ஈரமான, பச்சை நிற மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான். அதிலிருந்து நீங்கள் தீயை மூட்டுகிறீர்கள். -பச்சை மர நீரின் ஈரம் அதில் உள்ள எரியும் நெருப்பு- ஆகியவற்றுக்கிடையில் இந்த இரண்டு எதிரெதிர் விஷயங்களையும் ஒன்றிணைத்தவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்.
Esegesi in lingua araba:
اَوَلَیْسَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ ؔؕ— بَلٰی ۗ— وَهُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
36.81. பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்தவன் மரணிக்கச் செய்ததன் பின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் இல்லையா? ஆம் நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன்தான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்தவன். அவற்றைக் குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Esegesi in lingua araba:
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـًٔا اَنْ یَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
36.82. நிச்சயமாக அல்லாஹ் ஏதேனும் ஒன்றை உருவாக்க நாடினால் ஆகு என்றுதான் கூறுகிறான். அவன் நாடிய அந்த விடயம் ஆகிவிடுகிறது. இவ்வாறுதான் அவன் நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். இவை அல்லாதவற்றையும் செய்கிறான்.
Esegesi in lingua araba:
فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
36.83. அல்லாஹ் இயலாதவன் என இணைவைப்பாளர்கள் இணைத்து கூறுவதை விட்டும் அவன் பரிசுத்தமானவன். படைப்புகள் அனைத்தின் அதிகாரமும் அவன் கைவசமே உள்ளது. அவன் தான் நாடியவாறு அவற்றைச் செயல்படுத்துகிறான். ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அவன் கைவசமே உள்ளது. மறுமை நாளில் நீங்கள் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• من فضل الله ونعمته على الناس تذليل الأنعام لهم، وتسخيرها لمنافعهم المختلفة.
1. அல்லாஹ் மனிதர்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்று, அவர்களுக்கு கால்நடைகளை கட்டுப்பட்டதாக ஆக்கி அவர்களது பல்வேறு பயன்பாடுகளுக்காக வசப்படுத்தியமையாகும்.

• وفرة الأدلة العقلية على يوم القيامة وإعراض المشركين عنها.
2. மறுமை நாள் பற்றி பகுத்தறிவு ரீதியான போதுமான ஆதாரங்கள் இருந்தும் அவற்றை இணைவைப்பாளர்கள் புறக்கணித்தல்.

• من صفات الله تعالى أن علمه تعالى محيط بجميع مخلوقاته في جميع أحوالها، في جميع الأوقات، ويعلم ما تنقص الأرض من أجساد الأموات وما يبقى، ويعلم الغيب والشهادة.
3. அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அவனின் அறிவு படைப்புகள் அனைத்தையும், அவற்றின் அனைத்து நிலைகளையும் அனைத்து நேரங்களையும் சூழ்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பூமி எந்த அளவு குறைக்கின்றது, எந்த அளவு விட்டுவைக்கிறது என்பதை அவன் அறிவான். வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் அறிவான்.

 
Traduzione dei significati Sura: Yâ-Sîn
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi