Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Al-‘Ankabût   Versetto:
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫— وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚ
29.39. காரூன் மூஸாவின் சமூகத்திற்கு எதிராக வரம்புமீறியபோது நாம் அவனையும் அவனது வீட்டையும் பூமியில் புதையச் செய்துவிட்டோம். ஃபிர்அவ்னையும் அவனுடைய அமைச்சர் ஹாமானையும் கடலில் மூழ்கடித்து அழித்தோம். மூஸா அவர்களிடம் தெளிவான தனது நம்பகத் தன்மைக்கான சான்றுகளைக் கொண்டு வந்தார். ஆனால் அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் எகிப்தில் கர்வம் கொண்டார்கள். அவர்களால் நம் வேதனையிலிருந்து தப்ப முடியவில்லை.
Esegesi in lingua araba:
فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖ ۚ— فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَیْهِ حَاصِبًا ۚ— وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّیْحَةُ ۚ— وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَ ۚ— وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا ۚ— وَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
29.40. முன்பு கூறப்பட்ட ஒவ்வொருவரையும் நம் அழிக்கும் வேதனையால் நாம் தண்டித்தோம். அவர்களில் லூத்துடைய சமூகத்தின் மீது சுடப்பட்ட கல்மழையைப் பொழியச் செய்தோம். அவர்களில் ஸாலிஹ் மற்றும் ஷுஐபின் சமூகங்களைப் பேரிடி தாக்கியது. அவர்களில் காரூனை பூமியில் புதையச் செய்தோம். அவர்களில் நூஹின் சமூகம், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியவர்களை மூழ்கடித்து அழித்தோம். பாவமின்றி அவர்களைத் தண்டித்து அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள், தண்டனைக்கு உரியவர்களாக ஆனார்கள்.
Esegesi in lingua araba:
مَثَلُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ۚ— اِتَّخَذَتْ بَیْتًا ؕ— وَاِنَّ اَوْهَنَ الْبُیُوْتِ لَبَیْتُ الْعَنْكَبُوْتِ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
29.41. தங்களுக்குப் பயனளிக்கும் அல்லது பரிந்துரை செய்யும் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வை விடுத்து, சிலைகளை வணங்கும் இணைவைப்பாளர்களுக்கு உதாரணம் சிலந்தியைப் போன்றதாகும். தன் மீதான அத்துமீறலில் இருந்து அது தன்னைக் காத்துக்கொள்வதற்காக ஒரு வீட்டை அமைத்துக்கொண்டது. வீடுகளில் மிகவும் பலவீனமானது சிலந்தியின் வீடுதான். அது சிலந்தியை விட்டும் எந்தவொரு எதிரியையும் தடுக்காது. அவ்வாறுதான் அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ, பரிந்துரை செய்யவோ சக்தி பெறாது. இணைவைப்பாளர்கள் இதனை அறிந்திருந்தால் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளைத் தாம் வணங்கும் தெய்வங்களாக ஆக்கியிருக்க மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
29.42. நிச்சயமாக அல்லாஹ் அவனை விடுத்து அவர்கள் வணங்கக்கூடியவற்றை அறிவான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், நிர்ணயத்தில், திட்டத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
Esegesi in lingua araba:
وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۚ— وَمَا یَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ ۟
29.43. மக்களை விழிப்பூட்டி அவர்களுக்கு சத்தியத்தை காண்பித்து அதன்பக்கம் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதாரணங்களை நாம் அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றோம். அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதன் நோக்கங்களையும் அறிந்தவர்கள்தாம் அதனை மிகச்சரியாக புரிந்து கொள்வார்கள்.
Esegesi in lingua araba:
خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟۠
29.44. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்துள்ளான். அவற்றை அவன் வீணாக, அசத்தியத்திற்காக படைக்கவில்லை. நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் படைப்புகளைக்கொண்டு படைப்பாளனை அறிந்துகொள்வார்கள். நிச்சயமாக நிராகரிப்பாளர்களோ பிரபஞ்சத்திலும் தங்களுக்குள்ளும் காணப்படும் சான்றுகளை, படைப்பாளனின் வல்லமையை, மகத்துவத்தை கண்டுகொள்ளாமல் கடந்துவிடுகிறார்கள்.
Esegesi in lingua araba:
اُتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ؕ— اِنَّ الصَّلٰوةَ تَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ— وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا تَصْنَعُوْنَ ۟
29.45. -தூதரே!- அல்லாஹ் உமக்கு வஹியின் மூலம் அறிவிக்கும் குர்ஆனை மக்களுக்குப் படித்துக் காட்டுவீராக. தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவீராக. பரிபூரணமான முறையில் நிறைவேற்றப்படும் தொழுகை தொழக்கூடியவனை பாவங்கள் மற்றும் தீய காரியங்களில் விழுந்துவிடாமல் தடுக்கிறது ஏனெனில் அது உள்ளங்களில் ஏற்படுத்தும் ஒளி மனிதனை பாவங்களைவிட்டும் தடுக்கிறது, நற்செயல்களின்பால் வழிகாட்டுகிறது அனைத்தையும்விட அல்லாஹ்வை நினைவுகூர்வதே பெரிதானதாகும். நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக நலவாக இருந்தால் நன்மையையும் தீமையாக இருந்தால் தீமையையும் வழங்குவான்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• أهمية ضرب المثل: (مثل العنكبوت) .
1. "சிலந்தி உதாரணம் போன்று" உதாரணம் கூறுவதன் முக்கியத்துவம்.

• تعدد أنواع العذاب في الدنيا.
2. உலகில் அளிக்கப்படும் வேதனை பலவகையானவை.

• تَنَزُّه الله عن الظلم.
3. அநியாயம் செய்வதைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

• التعلق بغير الله تعلق بأضعف الأسباب.
4. அல்லாஹ் அல்லாதவற்றை நம்பியிருப்பது பலவீனமான காரணிகளை நம்பியிருப்பதாகும்.

• أهمية الصلاة في تقويم سلوك المؤمن.
5. நம்பிக்கையாளனின் நடத்தையைச் சீராக்குவதில் தொழுகையின் முக்கியத்துவம்.

 
Traduzione dei significati Sura: Al-‘Ankabût
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi