Check out the new design

Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Jerin ginshikan taken fassarorin


Fassarar Ma'anoni Sura: Al'haqah   Aya:

அல்ஹாக்கா

Daga cikin abubuwan da surar ta kunsa.:
إثبات أن وقوع القيامة والجزاء فيها حقٌّ لا ريب فيه.
மறுமை நிகழுவதும், அதில் கூலி வழங்கப்படுவதும் எவ்வித சந்தேகமுமற்ற உண்மை என்பதை நிரூபித்தல்

اَلْحَآقَّةُ ۟ۙ
69.1. அனைவர் மீதும் நிகழக் கூடிய மீண்டும் எழுப்பும் தருணத்தை அல்லாஹ் நினைவு கூருகிறான்.
Tafsiran larabci:
مَا الْحَآقَّةُ ۟ۚ
69.2. பின்னர் “நிகழக்கூடியது என்றால் என்ன?” என்ற இந்தக் கேள்வியின் மூலம் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றான்.
Tafsiran larabci:
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ
69.3. உண்மையில் இவ்வாறு நிகழுக்கூடியது என்ன? என்பதைக் குறித்து உமக்கு அறிவித்தது எது?
Tafsiran larabci:
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟
69.4. ஸாலிஹ் நபியின் சமூகமான ஸமூதும் ஹூதின் சமூகமான ஆதும் தன் பயங்கரத்தால் மக்களை திடுக்கிடச் செய்யும் மறுமை நாளை பொய்ப்பித்தார்கள்.
Tafsiran larabci:
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
69.5. அல்லாஹ் ஸமூத் சமூகத்தை பயங்கரமான, பெரும் சப்தத்தைக் கொண்டு அழித்தான்.
Tafsiran larabci:
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ
69.6. அவன் ஆத் சமூகத்தை கடும் குளிர் காற்றினால் அழித்தான்.
Tafsiran larabci:
سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ— حُسُوْمًا فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ— كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ
69.7. அவன் ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள்மீது அக்காற்றை வீசச் செய்தான். அது அவர்கள் அனைவரையும் அடியுடன் அழித்தது. அவர்கள் பூமியில் அடியோடு விழுந்துவிட்ட பழைய இத்துப் போன பேரீச்சம் மரத்தின் அடிப்பகுதியைப் போன்று தங்களின் வீடுகளில் செத்துமடிந்தவர்களாக கிடந்திருப்பதை நீர் கண்டிருப்பீர்.
Tafsiran larabci:
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
69.8. அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைக்குப் பிறகு அவர்களில் யாரேனும் எஞ்சியிருப்பதாக உமக்குத் தென்படுகிறார்களா?
Tafsiran larabci:
Daga cikin fa'idodin ayoyin a wannan shafi:
• الصبر خلق محمود لازم للدعاة وغيرهم.
1. பொறுமை அழைப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவசியமான மிகச் சிறந்த பண்பாகும்.

• التوبة تَجُبُّ ما قبلها وهي من أسباب اصطفاء الله للعبد وجعله من عباده الصالحين.
2. திருந்துவது (தௌபா) அதற்கு முன்புள்ளவற்றை அழித்துவிடுகிறது. அடியானை அல்லாஹ் தேர்ந்தெடுப்பதற்கும் அவனை தனது நல்லடியார்களில் ஒருவனாக மாற்றுவதற்கான காரணிகளில் ஒன்றாகும்.

• تنوّع ما يرسله الله على الكفار والعصاة من عذاب دلالة على كمال قدرته وكمال عدله.
3. அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின்மீது பலவகையான வேதனையை அனுப்புவது அவனின் பரிபூரண ஆற்றலுக்கும் நீதிக்கும் சான்றாகும்.

 
Fassarar Ma'anoni Sura: Al'haqah
Teburin jerin sunayen surori Lambar shafi
 
Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Jerin ginshikan taken fassarorin

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa