Check out the new design

Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Jerin ginshikan taken fassarorin


Fassarar Ma'anoni Aya: (5) Sura: Alhajj
یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَیْرِ مُخَلَّقَةٍ لِّنُبَیِّنَ لَكُمْ ؕ— وَنُقِرُّ فِی الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ۚ— وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْلَا یَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَیْـًٔا ؕ— وَتَرَی الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟
22.5. மனிதர்களே! மரணித்த பிறகு மீண்டும் உங்களை நாம் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்ற எங்கள் வல்லமையில் நீங்கள் சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் படைக்கப்பட்ட விதத்தைக் கவனித்துப் பாருங்கள். உங்களின் தந்தை ஆதமை நாம் மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் அவருடைய சந்ததியினரை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஆண் செலுத்தும் விந்திலிருந்து படைத்தோம். பின்னர் விந்து இரத்தக்கட்டியாக மாற்றமடைகிறது. பின்னர் இரத்தக்கட்டி சதைப்பிண்டமாக மாற்றமடைகிறது. பின்னர் சதைப்பிண்டம் முழுமையான படைப்பாக மாறி கருவறையில் தங்கியிருந்து உயிருள்ள குழந்தையாக வெளிப்படுகிறது. அல்லது முழுமையடையாத படைப்பாக கற்பப்பையிலிருந்து வெளிப்பட்டுவிடுகிறது. உங்களைப் படிப்படியாக படைக்கும் நம்முடைய வல்லமையை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இவற்றை எடுத்துரைக்கின்றோம். நாம் நாடிய சிசுக்களை குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் வரை ஒன்பது மாதங்கள் கருவறையில் தங்கச் செய்கின்றோம். பின்னர் உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து உங்களைக் குழந்தைகளாக வெளிப்படுத்துகின்றோம். பின்னர் நீங்கள் முழுமையான உடல் பலத்தையும் அறிவாற்றலையும் அடைகிறீர்கள். உங்களில் சிலர் இதற்கு முன்னரே மரணிப்போரும் இருக்கிறார்கள். சிலர் உடலும் அறிவும் பலவீனமடையும் முதுமை வரை வாழ்கிறார்கள். எந்த அளவுக்கெனில் குழந்தையைவிட மோசமானவர்களாக, தான் அறிந்தவற்றை அறியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். நீர் பூமியை தாவரங்களற்ற வறண்ட பூமியாக காண்கிறீர். நாம் அதன்மீது மழை பொழியச் செய்தவுடன் வித்துக்கள் வெடித்து செடிகொடிகள் செழித்து வளர்கின்றன. பார்ப்பதற்கு அழகான பலவகையான தாவரங்களை அது முளைக்கச் செய்கிறது.
Tafsiran larabci:
Daga cikin fa'idodin ayoyin a wannan shafi:
• وجوب الاستعداد ليوم القيامة بزاد التقوى.
1. தக்வா எனும் முன்னேற்பாடுகளைச் செய்து மறுமை நாளுக்காக தயாராவது கட்டாயமாகும்.

• شدة أهوال القيامة حيث تنسى المرضعة طفلها وتسقط الحامل حملها وتذهب عقول الناس.
2. மறுமையின் பயங்கரங்கள் கடுமையானவை. எந்தளவுக்கெனில் பாலூட்டும் தாய் தனது குழந்தையை மறந்து விடுவாள். கர்ப்பிணி தனது கருவை ஈன்றுவிடுவாள். மனிதர்களின் புத்தி நீங்கிவிடும்.

• التدرج في الخلق سُنَّة إلهية.
3. படிப்படியாக படைப்பது இறை நியதியாகும்.

• دلالة الخلق الأول على إمكان البعث.
4. ஆரம்பமாகப் படைத்தது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது சாத்தியம் என்பதற்கான ஆதாரமாகும்.

• ظاهرة المطر وما يتبعها من إنبات الأرض دليل ملموس على بعث الأموات.
5. மழை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பூமியின் விளைச்சல் மரணித்தவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதற்கான பௌதீக ஆதாரமாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (5) Sura: Alhajj
Teburin jerin sunayen surori Lambar shafi
 
Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Jerin ginshikan taken fassarorin

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa