Check out the new design

Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Jerin ginshikan taken fassarorin


Fassarar Ma'anoni Sura: Houd   Aya:
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ— وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
11.89. சமூகமே! என் மீதுள்ள வெறுப்பு நான் கொண்டுவந்ததை நிராகரிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டாம். நூஹின் சமூகம் அல்லது ஹூத் உடைய சமூகம் அல்லது ஸாலிஹ் உடைய சமூகம் ஆகியோர் மீது ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்கள் மீதும் வேதனை ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். லூத்தின் சமூகம் காலத்திலும் இடத்திலும் உங்களைவிட்டும் தூரமாக இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்.
Tafsiran larabci:
وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ— اِنَّ رَبِّیْ رَحِیْمٌ وَّدُوْدٌ ۟
11.90. உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் பாவங்களிலிருந்து அவன் பக்கமே திரும்புங்கள். என் இறைவன் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களின் மீது மிகுந்த கருணையாளனாகவும், அன்பானவனாகவும் இருக்கின்றான்.
Tafsiran larabci:
قَالُوْا یٰشُعَیْبُ مَا نَفْقَهُ كَثِیْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِیْنَا ضَعِیْفًا ۚ— وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ؗ— وَمَاۤ اَنْتَ عَلَیْنَا بِعَزِیْزٍ ۟
11.91. ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் கொண்டு வந்தவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரிவதில்லை. உமது கண் பார்வையில் ஏற்பட்ட பலவீனம் அல்லது குருட்டுத் தன்மை ஆகியவற்றால் எங்களில் பலவீனமுற்றவராகவே நாங்கள் உம்மைக் காண்கிறோம். உம் குலத்தினர் மட்டும் எங்களின் மார்க்கத்தில் இல்லையென்றால் உம்மைக் கல்லால் அடித்துக் கொன்றிருப்போம். நாங்கள் உம்மைக் கொலை செய்வதை அஞ்சுமளவுக்கு நீர் ஒன்றும் பலமானவரும் அல்ல. உம் குலத்தார் மீதுள்ள கண்ணியத்தினால்தான் நாங்கள் கொல்லாமல் உம்மை விட்டுவைத்துள்ளோம்.
Tafsiran larabci:
قَالَ یٰقَوْمِ اَرَهْطِیْۤ اَعَزُّ عَلَیْكُمْ مِّنَ اللّٰهِ ؕ— وَاتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِیًّا ؕ— اِنَّ رَبِّیْ بِمَا تَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
11.92. ஷுஐப் தனது சமூகத்திடம் கூறினார்: “சமூகமே! உங்கள் இறைவனான அல்லாஹ்வை விட என் குலத்தார்தான் உங்களிடம் கண்ணியமானவர்களா? நீங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றை சூழ்ந்துள்ளான். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவ்வுலகில் உங்களை அழிப்பதன் மூலமும் மறுமையில் வேதனைக்குட்படுத்துவதன் மூலம் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.”
Tafsiran larabci:
وَیٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ؕ— سَوْفَ تَعْلَمُوْنَ ۙ— مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ ؕ— وَارْتَقِبُوْۤا اِنِّیْ مَعَكُمْ رَقِیْبٌ ۟
11.93. சமூகமே! நீங்கள் விரும்பும் வழியில் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் விரும்பும் வழியில் என்னால் இயன்றதைச் நானும் செய்வேன். இழிவுபடுத்தக்கூடிய வேதனை தண்டனையாக யார்மீது இறங்கும் என்பதையும் நம்மில் யார் தனது கூற்றில் பொய்யர் என்பதையும் நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Tafsiran larabci:
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا شُعَیْبًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
11.94. ஷுஐபுடைய சமுதாயத்தை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். அவர்களின் சமூகத்திலுள்ள அநியாயக்காரர்களை அழிவை ஏற்படுத்தும் பயங்கர சப்தம் தாக்கியது.உடனே அவர்கள் செத்துமடிந்தார்கள். முகங்குப்புற தமது முகங்களில் மண் ஒட்டுமளவு வீழ்ந்து கிடந்தார்கள்.
Tafsiran larabci:
كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ— اَلَا بُعْدًا لِّمَدْیَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ۟۠
11.95. அவர்கள் இதற்கு முன்னர் அங்கு வசிக்காதவர்களைப்போல் ஆகிவிட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், ஸமூத் சமூகத்தினர் மீது இறைவனின் கோபத்தை இறக்கி அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டது போன்று மத்யன்வாசிகளும் அவனது கோபம் இறங்கி அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டு விட்டார்கள்.
Tafsiran larabci:
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
11.96. மூஸாவை அல்லாஹ் ஒருவனே என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகளையும் அவர் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கான ஆதாரங்களையும் அளித்து நாம் அனுப்பினோம்.
Tafsiran larabci:
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَ ۚ— وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِیْدٍ ۟
11.97. அவரை பிர்அவ்னிடமும் அவன் சமூகத்துப் பெரியவர்களிடமும் அனுப்பினோம். இந்த பெரியவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து பிர்அவ்னின் கட்டளையைப் பின்பற்றினார்கள். பிர்அவ்னின் கட்டளை பின்பற்றதக்களவு நேர்மையானதல்ல.
Tafsiran larabci:
Daga cikin fa'idodin ayoyin a wannan shafi:
• ذمّ الجهلة الذين لا يفقهون عن الأنبياء ما جاؤوا به من الآيات.
1. இறைத்தூதர்கள் கொண்டுவந்த சான்றுகளைப் புரிந்துகொள்ளாத மூடர்கள் இழிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

• ذمّ وتسفيه من اشتغل بأوامر الناس، وأعرض عن أوامر الله.
2. அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டுவிட்டு மனிதர்களின் கட்டளைகளைச் செயற்படுத்துவோர் மடமைத்தனமானவர்களாவர், இழிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

• بيان دور العشيرة في نصرة الدعوة والدعاة.
3. அழைப்புப் பணி மற்றும் அழைப்பாளர்களுக்கு உதவி செய்வதில் குடும்பத்தின் பங்கு தெளிவாகிறது.

• طرد المشركين من رحمة الله تعالى.
4. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப்பட்டுள்ளார்கள்.

 
Fassarar Ma'anoni Sura: Houd
Teburin jerin sunayen surori Lambar shafi
 
Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Jerin ginshikan taken fassarorin

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa