Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ * - ભાષાંતરોની અનુક્રમણિકા

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

શબ્દોનું ભાષાંતર સૂરહ: યૂનુસ   આયત:
وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ— اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟
இன்னும், உம் பக்கம் (உமது தெளிவான அத்தாட்சிகளை கண்களால்) பார்ப்பவரும் அவர்களில் உண்டு. (ஆனால், அவர்கள் அவற்றை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.) ஆக, குருடர்களை, - அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் - நீர் நேர்வழி செலுத்துவீரா? (அது உம்மால் முடியுமா?)
અરબી તફસીરો:
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்.
અરબી તફસીરો:
وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ— قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
இன்னும், அவன் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், - பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) அவர்கள் தங்கி இருக்கவில்லை என்பது போன்று (அவர்களுக்கு) தோன்றும். தங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்பித்தவர்கள் திட்டமாக நஷ்டமடைந்தார்கள். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
અરબી તફસીરો:
وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟
(நபியே!) இன்னும், நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (தண்டனைகளில்) சிலவற்றை (அவர்கள் மீது இறக்கி உம் வாழ்விலேயே) உமக்குக் காண்பிப்போம்; அல்லது, (அதற்கு முன்) உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம். ஆக, (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்தவற்றிற்கு எல்லாம் அல்லாஹ் சாட்சியாளன் ஆவான். (அவர்களின் செயல்கள் அவனுக்கு மறைந்தவை அல்ல. ஆகவே, அவன் அவர்களுக்கு தகுந்த கூலி கொடுப்பான்.)
અરબી તફસીરો:
وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ— فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
இன்னும், (சென்று போன) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் இருந்தார். ஆக, அவர்களுடைய தூதர் (மறுமையில் அவர்களுக்கு முன்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
અરબી તફસીરો:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
இன்னும், (நபியே! உம்மையும் முஃமின்களையும் நோக்கி) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (தண்டனையின்) இந்த வாக்கு எப்போது (வரும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
અરબી તફસીરો:
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ— اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அவர்களுடைய தவணை வந்தால் (அதிலிருந்து) சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; இன்னும், முந்தவும் மாட்டார்கள்.”
અરબી તફસીરો:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟
(மேலும்) கூறுவீராக: (இணைவைப்பவர்களே!) “அவனுடைய தண்டனை இரவில்; அல்லது, பகலில் உங்களுக்கு வந்தால் (அதை உங்களால் தடுக்க முடியுமா)? என்பதை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்.” (நபியே!) (இக்)குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
અરબી તફસીરો:
اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ— آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
(இணைவைப்பாளர்களே!) அங்கே (அந்த தண்டனை உங்களுக்கு) நிகழ்ந்தால் அதை நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? (அப்போது அவர்களை நோக்கி கூறப்படும்:) “இப்போதுதானா (உங்களுக்கு நம்பிக்கை வருகிறது)? நீங்களோ அதை அவசரமாக தேடிக் கொண்டிருந்தீர்கள்!”
અરબી તફસીરો:
ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ— هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟
பிறகு, அநியாயம் செய்தவர்களை நோக்கி, “நிரந்தரமான தண்டனையை சுவையுங்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்காகவே தவிர நீங்கள் (இப்போது இத்தகைய) கூலி கொடுக்கப்படுகிறீர்களா?” என்று கூறப்படும்.
અરબી તફસીરો:
وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ— قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕ— وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠
(நபியே!) இன்னும், “அது உண்மைதானா?” என்று அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கிறார்கள். கூறுவீராக! “ஆம். என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உண்மைதான்! இன்னும், நீங்கள் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்”
અરબી તફસીરો:
 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: યૂનુસ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તેનું અનુવાદ શૈખ ઉમર શરીફ બિન્ અબ્દુસ્ સલામ દ્વારા કરવામાં આવ્યું છે.

બંધ કરો