Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ * - ભાષાંતરોની અનુક્રમણિકા

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

શબ્દોનું ભાષાંતર સૂરહ: યૂનુસ   આયત:
فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ۚؕ— لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟
ஆக, ஓர் ஊர் (வாசிகள்) நம்பிக்கை கொண்டு அவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு பலனளித்திருக்கக்கூடாதா! எனினும் ‘யூனுஸ்’ உடைய சமுதாயம், நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவான தண்டனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும், ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்.
અરબી તફસીરો:
وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِی الْاَرْضِ كُلُّهُمْ جَمِیْعًا ؕ— اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰی یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
உம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆக, (நபியே!) நீர் மக்களை, - அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதற்காக - நிர்ப்பந்திப்பீரா?
અરબી તફસીરો:
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَیَجْعَلُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
ஓர் ஆன்மாவிற்கு, அது நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர சாத்தியமாகாது. சிந்தித்து புரியாதவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்.
અરબી તફસીરો:
قُلِ انْظُرُوْا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَا تُغْنِی الْاٰیٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
(நபியே!) கூறுவீராக! “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள். நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு வசனங்களும், எச்சரிப்பாளர்களும் பலனளிக்க மாட்டார்கள்.”
અરબી તફસીરો:
فَهَلْ یَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَیَّامِ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ ؕ— قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
ஆக, அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? “நீங்கள் (உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்” என்று (நபியே) கூறுவீராக.
અરબી તફસીરો:
ثُمَّ نُنَجِّیْ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚ— حَقًّا عَلَیْنَا نُنْجِ الْمُؤْمِنِیْنَ ۟۠
பிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் நாம் பாதுகா(த்துவிட்டு நிராகரிப்பாளர்களை அழி)ப்போம். இவ்வாறே, (உம்மையும் உம்முடன்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்போம். இது நம்மீது கடமையாகும்.
અરબી તફસીરો:
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ شَكٍّ مِّنْ دِیْنِیْ فَلَاۤ اَعْبُدُ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ ۖۚ— وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
(நபியே!) கூறுவீராக! “மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகிறீர்களோ அவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்ற (ஆற்றல் உடைய) அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். இன்னும், நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.”
અરબી તફસીરો:
وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ— وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
இன்னும், (நபியே!) நீர் ஓர் இறையை வணங்குவதில் உறுதியானவராக (இணைவைப்பை விட்டும் முற்றிலும் விலகியவராக) மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இன்னும், இணைவைப்பவர்களில் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்!
અરબી તફસીરો:
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكَ وَلَا یَضُرُّكَ ۚ— فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِیْنَ ۟
இன்னும், அல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் (நபியே!) நீர் அழைக்காதீர்! ஆக, நீர் (அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடு) செய்து விட்டால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
અરબી તફસીરો:
 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: યૂનુસ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તેનું અનુવાદ શૈખ ઉમર શરીફ બિન્ અબ્દુસ્ સલામ દ્વારા કરવામાં આવ્યું છે.

બંધ કરો