Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: At Tawbah   Verset:
یُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِیْهَا نَعِیْمٌ مُّقِیْمٌ ۟ۙ
9.21. அவர்களின் இறைவன் தன் கருணையைக் கொண்டும், திருப்தியைக் கொண்டும் அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான். இனி அவர்கள் விஷயத்தில் அவன் கோபம் கொள்ள மாட்டான். என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் அடங்கிய சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள் எனவும் நற்செய்தி கூறுகிறான்.
Les exégèses en arabe:
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
9.22. அந்த சுவனங்களில் அவர்கள் முடிவில்லாமல் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்குக் கூலியாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மார்க்கத்தை அவனுக்கு மட்டுமே உரித்தாக்குபவர்களுக்கு நிச்சயமாக அவனிடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது.
Les exégèses en arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَكُمْ اَوْلِیَآءَ اِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَی الْاِیْمَانِ ؕ— وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
9.23. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுபவர்களே! உங்களின் தந்தையரும் உடன் பிறந்த சகோதரர்களும் ஏனைய உறவினர்களும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை விட நிராகரிப்பைத் தேர்ந்தெடுத்தால் அவர்களிடம் முஸ்லிம்களின் இரகசியத்தை வெளிப்படுத்தி அவர்களுடன் ஆலோசனை செய்து, அவர்களை நேசர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தும் யாரேனும் அவர்களிடம் நட்பு கொண்டு அன்பை வெளிப்படுத்தினால் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு விட்டார். பாவத்தின் காரணமாக தன்னை அழிவில் போட்டு தனக்குத் தானே அநீதி இழைத்துக் கொண்டார்.
Les exégèses en arabe:
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِیْرَتُكُمْ وَاَمْوَالُ ١قْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَیْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِیْ سَبِیْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
9.24. தூதரே! நீர் கூறுவீராக: -“நம்பிக்கையாளர்களே!- உங்களின் தந்தையரும் ஆண்மக்களும், சகோதரர்களும், மனைவியரும், உறவினரும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், நீங்கள் இலாபத்தை விரும்பி நஷ்டத்தை அஞ்சும் உங்களின் வியாபாரமும், நீங்கள் தங்கியிருக்க விரும்பும் உங்களின் வீடுகளும் அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வதை விடவும் உங்களுக்குப் பிரியமானவையாக இருந்தால் அல்லாஹ் உங்கள் மீது இறக்கும் வேதனையை எதிர்பாருங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் அவனுக்குப் பொருத்தமான நற்செயல் செய்யும் வாய்ப்பினை வழங்க மாட்டான்.”
Les exégèses en arabe:
لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ ۙ— وَّیَوْمَ حُنَیْنٍ ۙ— اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟ۚ
9.25. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஆள் பலம், ஆயுத பலம் ஆகியவற்றில் குறைவாக இருந்த போதும் நீங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருந்து வெளிப்படையான காரணிகளைக் கடைப்பிடித்து, உங்களது அதிக எண்ணிக்கையின் மூலம் பெருமை கொள்ளாதிருந்த போது உங்களின் எதிரிகளான இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு பல போர்களில் உதவி புரிந்துள்ளான். மாறாக அதிக எண்ணிக்கை வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை. ஆனால் ஹுனைன் போரில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களைக் கவர்ந்துவிட்டது. “நாம் அதிகமாக இருப்பதனால் இன்று நாம் தோல்வியுறமாட்டோம் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனாலும் உங்களைக் கவர்ந்த அதிக எண்ணிக்கை உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அதனால் உங்களின் எதிரிகள் உங்களை மிகைத்தார்கள். பூமி விசாலமாக இருந்த போதும் அது உங்களுக்கு நெருக்கடி மிகுந்ததாகத் தோன்றியது. பின்னர் நீங்கள் தோல்வியடைந்து எதிரிகளுக்கு புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.
Les exégèses en arabe:
ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا ۚ— وَعَذَّبَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— وَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
9.26. நீங்கள் உங்கள் எதிரியை விட்டு ஓடிய பிறகு அல்லாஹ் தன் தூதரின் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் நிம்மதியை இறக்கினான். அவர்கள் போரில் உறுதியாக நின்றார்கள். நீங்கள் காணாத வானவர்களையும் அவன் இறக்கினான். கொன்றும், சொத்துக்களை எடுத்தும், ஆண்களையும் பெண்களையும் கைது செய்தும் அவன் நிராகரிப்பாளர்களைத் தண்டித்தான். இவர்களுக்கு வழங்கப்பட்ட இத்தண்டனை, நிராகரித்து தங்களின் தூதரைப் பொய்யாக்கி அவர் கொண்டுவந்ததைப் புறக்கணித்தவர்களுக்குரிய தண்டனையாகும்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• مراتب فضل المجاهدين كثيرة، فهم أعظم درجة عند الله من كل ذي درجة، فلهم المزية والمرتبة العلية، وهم الفائزون الظافرون الناجون، وهم الذين يبشرهم ربهم بالنعيم.
1. முஜாஹிதுகள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அனைவரையும் விட அவர்களே அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்கள்தாம் வெற்றியாளர்கள். பாதுகாப்புப் பெற்றவர்கள். அவர்களுக்குத்தான் அருட்கொடைகள் உண்டு என்று இறைவன் நற்செய்தி கூறுகிறான்.

• في الآيات أعظم دليل على وجوب محبة الله ورسوله، وتقديم هذه المحبة على محبة كل شيء.
2. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையுமே நேசிப்பதும், இந்நேசத்தை ஏனைய அனைத்தையும் விட முற்படுத்துவதும் கடமை என்பதற்கு இவ்வசனங்கள் மிகப் பெரும் ஆதாரமாகும்.

• تخصيص يوم حنين بالذكر من بين أيام الحروب؛ لما فيه من العبرة بحصول النصر عند امتثال أمر الله ورسوله صلى الله عليه وسلم وحصول الهزيمة عند إيثار الحظوظ العاجلة على الامتثال.
3. போர்களில் ஹுனைன் போர் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் அதில் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைகளைச் செயல்படுத்தும் போது வெற்றியும் அவனுடைய கட்டளையை விட குறுகிய இலாபங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் போது தோல்வியும் கிடைக்கும் என்ற படிப்பினை அடங்கியுள்ளது.

• فضل نزول السكينة، فسكينة الرسول صلى الله عليه وسلم سكينة اطمئنان على المسلمين الذين معه وثقة بالنصر، وسكينة المؤمنين سكينة ثبات وشجاعة بعد الجَزَع والخوف.
4. அமைதி இறங்குவதன் சிறப்பு. நபியவர்களுக்கு ஏற்பட்ட அமைதி தன்னுடன் உள்ள முஸ்லிம்களின் நிலை பற்றிய திருப்தியும் வெற்றியின் மீது நம்பிக்கையுமாகும். முஃமின்களுக்கு எற்பட்ட அமைதி பதட்டம் மற்றும் அச்சத்தின் பின் ஏற்பட்ட உறுதியும் துணிவுமாகும்.

 
Traduction des sens Sourate: At Tawbah
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture