Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Al Anfâl   Verset:
وَمَا لَهُمْ اَلَّا یُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ یَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِیَآءَهٗ ؕ— اِنْ اَوْلِیَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
8.34. மஸ்ஜிதுல் ஹராமில் தொழவிடாமல், தவாப் செய்யவிடாமல் மக்களைத் தடுத்ததன் மூலம் தண்டிக்கப்படுவதற்கானவற்றை அவர்கள் செய்திருக்கும் போது, அவர்களுக்கு வேதனை வருவதை எதுதான் தடுக்க முடியும்? இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் நேசர்களாக இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களே அவனுடைய நேசர்களாவர். அல்லாஹ்வின் நேசர்களாக இல்லாத நிலமையில் தங்களை அவனுடைய நேசர்கள் என்று கூறும் அதிகமான இணைவைப்பாளர்கள் (அதனை) அறியமாட்டார்கள்.
Les exégèses en arabe:
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَیْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِیَةً ؕ— فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
8.35. மஸ்ஜிதுல் ஹராமில் சீட்டியடிப்பதும் கைதட்டுவதுமே இணைவைப்பாளர்களின் தொழுகையாகும். -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நீங்கள் நிராகரித்ததனால் பத்ருடைய நாளில் கொல்லப்பட்டது, கைதிகளாகப் பிடிக்கப்பட்டது போன்ற வேதனையைச் சுவையுங்கள்.
Les exégèses en arabe:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِیَصُدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— فَسَیُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَیْهِمْ حَسْرَةً ثُمَّ یُغْلَبُوْنَ ؕ۬— وَالَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ یُحْشَرُوْنَ ۟ۙ
8.36. அல்லாஹ்வை நிராகரித்தோர் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுப்பதற்காக செலவு செய்கின்றனர். இதற்குப் பின்பும் செலவளிப்பார்கள். அவர்கள் நினைத்தது நிறைவேறப் போவதேயில்லை. பின்னர் தமது சொத்துக்களை அவர்கள் செலவு செய்ததன் விளைவு கைசேதமே. எனெனில் சொத்துக்களையும் இழந்து அவற்றைச் செலவளித்த நோக்கத்தையும் அடையமுடிவில்லை. பின்னர் அவர்களை நம்பிக்கையாளர்கள் வெற்றி கொள்வதன் மூலம் தோல்விக்குள்ளாவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அதில் நுழையும் அவர்கள் அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
Les exégèses en arabe:
لِیَمِیْزَ اللّٰهُ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ وَیَجْعَلَ الْخَبِیْثَ بَعْضَهٗ عَلٰی بَعْضٍ فَیَرْكُمَهٗ جَمِیْعًا فَیَجْعَلَهٗ فِیْ جَهَنَّمَ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
8.37. அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக செலவு செய்த இந்த நிராகரிப்பாளர்கள் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம், மோசமான நிராகரிப்பாளர்களையும் தூய்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்துவதற்காகவும் கெட்டவற்றை தீய மனிதர்கள், செல்வங்கள் மற்றும் செயல்கள் போன்றவற்றை ஒன்றோடோன்று சேர்த்து குவியலாக்கி அவற்றை நரகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும்தான். இவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்ததனால் நஷ்டமடைந்தவர்களாவர்.
Les exégèses en arabe:
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّنْتَهُوْا یُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ ۚ— وَاِنْ یَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِیْنَ ۟
8.38. -தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த உம் சமூகத்தாரிடம் கூறுவீராக: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர்கள் நிராகரிக்காமல், நம்பிக்கைகொண்டவர்களை அவனுடைய பாதையை விட்டுத் தடுக்காமல் அவர்கள் விலகிக் கொண்டால் அல்லாஹ் அவர்கள் முன்னர் செய்த பாவங்களை மன்னித்துவிடுவான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது முந்தைய பாவங்களை அழித்துவிடக் கூடியதாகும் அவர்கள் நிராகரிப்பின் பக்கம் மீண்டும் திரும்பினால், முந்தைய சமூகங்களுக்கான அல்லாஹ்வின் வழிமுறையே செல்லுபடியாகும். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்த போது அல்லாஹ் அவர்களை துரிதமாகத் தண்டித்தான்.
Les exégèses en arabe:
وَقَاتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ كُلُّهٗ لِلّٰهِ ۚ— فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
8.39. -நம்பிக்கையாளர்களே!- இணைவைப்பும், அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு முஸ்லிம்களைத் தடுப்பதும் நீங்கி, மார்க்கமும் கட்டுப்படுதலும் யாதொரு இணையுமற்ற அல்லாஹ்வுக்கே மட்டுமே உரித்தாகும் வரை உங்களின் எதிரிகளான நிராகரிப்பாளர்களுடன் போரிடுங்கள். அவர்கள் இணைவைப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல் ஆகிவற்றை விட்டும் விலகிவிட்டால் நீங்களும் அவர்களை விட்டு விடுங்கள். ஏனெனில் அல்லாஹ் அவர்களது செயல்களைக் கவனித்துக்கொண்டுள்ளான். எந்த மறைவானதும் அவனுக்கு மறைவானதல்ல.
Les exégèses en arabe:
وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ؕ— نِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟
8.40. நிராகரிப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை அவர்கள் புறக்கணித்துவிட்டால் - -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்யக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். தன்னைச் சார்ந்தோருக்கு அவனே மிகச் சிறந்த பொறுப்பாளன், தனக்கு உதவுவோருக்கு மிகச் சிறந்த உதவியாளன். அவன் யாரை பொறுப்பெடுத்துக் கொண்டானோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். அவன் யாருக்கு உதவி செய்தானோ அவர் உதவி பெற்றுவிட்டார்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• الصد عن المسجد الحرام جريمة عظيمة يستحق فاعلوه عذاب الدنيا قبل عذاب الآخرة.
1. மஸ்ஜிதுல் ஹராமை விட்டு மக்களைத் தடுப்பது மிகப் பெரிய குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மறுவுலகில் தண்டனை பெற முன் இவ்வுலகிலேயே தண்டனைக்குத் தகுதியானவர்கள்.

• عمارة المسجد الحرام وولايته شرف لا يستحقه إلّا أولياء الله المتقون.
2. மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பது பெரும் பேறாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடிய அவனுடைய நேசர்களே அதற்குத் தகுதியானவர்களாவர்.

• في الآيات إنذار للكافرين بأنهم لا يحصلون من إنفاقهم أموالهم في الباطل على طائل، وسوف تصيبهم الحسرة وشدة الندامة.
3. அசத்தியப் பாதையில் தாம் செலவு செய்யும் செல்வங்களால் எதையும் பெற மாட்டார்கள். அதனால் இழப்பிற்கும் கடுமையான வருத்தத்திற்கும் அவர்கள் ஆளாவார்கள் என நிராகரிப்பாளர்களுக்கு மேற்கூறிய வசனங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

• دعوة الله تعالى للكافرين للتوبة والإيمان دعوة مفتوحة لهم على الرغم من استمرار عنادهم.
4. நிராகரிப்பாளர்கள் பிடிவாதத்தில் நிலைத்திருந்தாலும் கூட பாவமன்னிப்புக் கோருவதற்கும் நம்பிக்கை கொள்வதற்குமான, அவர்களுக்கான அல்லாஹ்வின் அழைப்பு திறந்தே உள்ளது.

• من كان الله مولاه وناصره فلا خوف عليه، ومن كان الله عدوًّا له فلا عِزَّ له.
5. யாருக்கு அல்லாஹ் பாதுகாவலனாகவும் உதவியாளனாகவும் இருக்கின்றானோ அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. யாருக்கு அல்லாஹ் பகைவனாகிவிட்டானோ அவனுக்கு எந்த கண்ணியமும் இல்லை.

 
Traduction des sens Sourate: Al Anfâl
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture