Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Tâ Hâ   Verset:
كَذٰلِكَ نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ— وَقَدْ اٰتَیْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۟ۖۚ
20.99. -தூதரே!- மூஸா, ஃபிர்அவ்ன் மற்றும் அவ்விருவருடைய சமூகங்களை பற்றிய சம்பவங்களை நாம் உமக்குக் கூறியதுபோல உமக்கு ஆறுதலாக அமையும்பொருட்டு முந்தைய தூதர்கள் மற்றும் சமூகங்களின் செய்திகளையும் நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். நாம் உமக்கு நம்மிடமிருந்து அறிவுரை பெற்றுக்கொள்பவர்கள் அறிவுரை பெறக்கூடிய குர்ஆனை வழங்கியுள்ளோம்.
Les exégèses en arabe:
مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ یَحْمِلُ یَوْمَ الْقِیٰمَةِ وِزْرًا ۟ۙ
20.100. உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதிலுள்ளதன்படி செயல்படாமல் யார் புறக்கணிக்கிறாரோ அவர் மறுமை நாளில் பெரும் பாவங்களைச் சுமந்தவராகவும் வேதனைமிக்க தண்டனைக்கு உரியவராகவும் வருவார்.
Les exégèses en arabe:
خٰلِدِیْنَ فِیْهِ ؕ— وَسَآءَ لَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ حِمْلًا ۟ۙ
20.101. அந்த வேதனையில் அவர் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார். அவர்கள் மறுமை நாளில் சுமக்கும் சுமை மிகவும் மோசமானது.
Les exégèses en arabe:
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ زُرْقًا ۟
20.102. மீண்டும் எழுப்பப்படுவதற்காக வானவர் இரண்டாது முறையாக சூர் ஊதும் நாளில் நாம் நிராகரிப்பாளர்களை ஒன்றுதிரட்டுவோம். அப்போது அங்கு அவர்கள் சந்திக்கும் மறுமையின் பயங்கரத்தின் கடுமையினால் அவர்களின் நிறங்கள் மாறி கண்கள் நீலம் பூத்திருக்கும்.
Les exégèses en arabe:
یَّتَخَافَتُوْنَ بَیْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا ۟
20.103. அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பின்வருமாறு பேசிக் கொள்வார்கள்: “நாம் மரணத்தின் பின் பத்து இரவுகள்தான் மண்ணறை வாழ்வில் தங்கியிருப்போம்.”
Les exégèses en arabe:
نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ اِذْ یَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِیْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا یَوْمًا ۟۠
20.104. அவர்கள் தங்களிடையே இரகசியமாகப் பேசுவதை நாம் அறிவோம். அதில் எதுவும் நம்மை விட்டு தப்பி விடாது. அப்போது அவர்களில் அறிவில் சிறந்தவர் கூறுவார்: “நீங்கள் ஒருநாள்தான் மண்ணறையில் தங்கியிருந்தீர்கள். அதைவிட அதிகமாக அல்ல.”
Les exégèses en arabe:
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ یَنْسِفُهَا رَبِّیْ نَسْفًا ۟ۙ
20.105. -தூதரே!- மறுமை நாளில் மலைகளின் நிலை என்னவாகும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் மலைகளைத் அதன் வேர்களிலிருந்து பிடுங்கி விடுவான். அவை புழுதியாகி விடும்.
Les exégèses en arabe:
فَیَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۟ۙ
20.106. அவற்றைச் சுமந்திருக்கும் பூமியை கட்டடங்களோ, தாவரங்களோ அற்ற வெட்ட வெளியாக்கி விடுவான்.
Les exégèses en arabe:
لَّا تَرٰی فِیْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا ۟ؕ
20.107. -அதனைப் பார்க்கக் கூடியவரே!- பூமி நன்கு வெட்ட வெளியாக இருப்பதனால் நீர் அதில் எவ்வித வளைவையோ, மேடு, பள்ளத்தையோ காண மாட்டீர்.
Les exégèses en arabe:
یَوْمَىِٕذٍ یَّتَّبِعُوْنَ الدَّاعِیَ لَا عِوَجَ لَهٗ ۚ— وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا ۟
20.108. அந்த நாளில் மனிதர்கள் அழைப்பாளரின் சப்தத்தைப் பின்தொடர்ந்து மஹ்ஷர் பெருவெளியை நோக்கிச் செல்வார்கள். அவரைப் பின்பற்றாமல் யாரும் இருந்துவிட முடியாது. அளவிலாக் கருணையாளனின் மீதுள்ள பயத்தால் சப்தங்களெல்லாம் அமைதியாகி விடும். அந்த நாளில் சிறுமுணுமுணுப்பைத்தவிர வேறு எந்த சப்தத்தையும் நீர் கேட்க முடியாது.
Les exégèses en arabe:
یَوْمَىِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَرَضِیَ لَهٗ قَوْلًا ۟
20.109. அந்த மாபெரும் நாளில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளித்து அவர்களின் வார்த்தையை விரும்புவானோ அவர்களின் பரிந்துரையைத்தவிர வேறு யாருடைய பரிந்துரையும் பயனளிக்காது.
Les exégèses en arabe:
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یُحِیْطُوْنَ بِهٖ عِلْمًا ۟
20.110. மக்கள் எதிர்நோக்கவிருக்கும் மறுமையைப் பற்றியும் உலகில் அவர்கள் பின்னால் விட்டு வந்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிவான். அடியார்கள் அனைவரும் அல்லாஹ்வின் உள்ளமையையோ, பண்புகளையோ, சூழ்ந்தறிய முடியாது.
Les exégèses en arabe:
وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَیِّ الْقَیُّوْمِ ؕ— وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا ۟
20.111. அடியார்களின் முகங்கள் தாழ்ந்துவிடும். என்றும் மரணிக்காத நிலையானவனுக்காக அவைகள் பணிந்துவிடும். அவன் அடியார்களின் அனைத்து விவகாரங்களையும் நிர்வகித்து நடைமுறைப்படுத்துபவன். தம்மைத் தாமே அழிவில் ஆழ்த்தி, பாவங்களைச் சுமந்தோர் நஷ்டமடைந்துவிட்டார்கள்.
Les exégèses en arabe:
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا یَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ۟
20.112. எவர் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிவாரோ அவர் அதற்கான கூலியை நிறைவாகப் பெறுவார். தான் செய்யாத பாவத்திற்காக தண்டிக்கப்பட்டோ, தன் நற்செயல்களுக்கான கூலி குறைக்கப்பட்டோ அநீதி இழைக்கப்படுவேன் என அவர் அஞ்ச மாட்டார்.
Les exégèses en arabe:
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِیًّا وَّصَرَّفْنَا فِیْهِ مِنَ الْوَعِیْدِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ اَوْ یُحْدِثُ لَهُمْ ذِكْرًا ۟
20.113. முந்தைய சமூகங்களின் சம்பவங்களை நாம் இறக்கியது போன்றே இந்த குர்ஆனையும் தெளிவான அரபி மொழியில் இறக்கியுள்ளோம். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லது குர்ஆன் அவர்களுக்கு அறிவுரையையும் படிப்பினையையும் வழங்க வேண்டும் என்பதற்காக எல்லா வகையான எச்சரிக்கைகளையும் பயமுறுத்தல்களையும் நாம் அதில் தெளிவுபடுத்தி விட்டோம்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• القرآن العظيم كله تذكير ومواعظ للأمم والشعوب والأفراد، وشرف وفخر للإنسانية.
1. கண்ணியமிக்க குர்ஆன் முழுவதும் தனி மனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் அறிவுரையாகவும் நினைவூட்டலாகவும் இருக்கின்றது. அது மனித சமூகத்தின் கண்ணியமாகும், பெருமையுமாகும்.

• لا تنفع الشفاعة أحدًا إلا شفاعة من أذن له الرحمن، ورضي قوله في الشفاعة.
2. அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்து அவருடைய வார்த்தையை பொருந்திக்கொண்டானோ அவரது பரிந்துரையைத் தவிர வேறு எவருக்கும் பரிந்துரை பலனளிக்காது.

• القرآن مشتمل على أحسن ما يكون من الأحكام التي تشهد العقول والفطر بحسنها وكمالها.
3. அல்குர்ஆன் மிக அழகிய சட்டதிட்டங்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. பகுத்தறிவும் இயல்பும் அவை சிறந்தவை, பரிபூரணமானவை என்பதற்குச் சாட்சி பகர்கின்றன.

• من آداب التعامل مع القرآن تلقيه بالقبول والتسليم والتعظيم، والاهتداء بنوره إلى الصراط المستقيم، والإقبال عليه بالتعلم والتعليم.
4. குர்ஆனை ஏற்று, கற்று, கட்டுப்பட்டு, மதித்து நடப்பதும் அதன் பிரகாசத்தின் மூலம் நேர்வழியை அடைவதும், அதனைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்துவதும் அல்குர்ஆனுடன் பேண வேண்டிய ஒழுங்கங்களில் உள்ளவையாகும்.

• ندم المجرمين يوم القيامة حيث ضيعوا الأوقات الكثيرة، وقطعوها ساهين لاهين، معرضين عما ينفعهم، مقبلين على ما يضرهم.
5. தமக்குப் பயனளிப்பவற்றை விட்டுப் புறக்கணித்தவர்களாகவும் தமக்கு தீங்கிழைப்பவற்றில் கவனம் செலுத்தியவர்களாகவும் அதிகமான நேரங்களை வீணாக்கி, அவற்றை மறதியிலும் வீண் விளையாட்டிலும் கழித்த பாவிகள் மறுமையில் கைசேதப்படுதல்.

 
Traduction des sens Sourate: Tâ Hâ
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture