Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Al Baqarah   Verset:
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ— قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ— فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ— وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ— فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ— قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ— قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ— كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
2.249. தாலூத் படைகளுடன் ஊரைவிட்டுக் புறப்பட்டபோது அவர்களிடம் கூறினார்: அல்லாஹ் ஒரு ஆற்றைக்கொண்டு உங்களைச் சோதிப்பான். அதிலிருந்து நீரை அருந்துபவர் என் வழிமுறையைச் சார்ந்தவர் அல்ல. அவர் என்னுடன் சேர்ந்து போரிடக்கூடாது. அதிலிருந்து யார் நீர் அருந்தவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர்; போரில் என்னுடன் பங்குகொள்வார். ஆயினும் நிர்ப்பந்தத்தில் ஒரு பிடி அளவுக்கு நீர் அருந்திக் கொள்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. கடுமையான தாகம் இருந்தபோதும் அவர்களில் அருந்தாது பொறுமையாக இருந்த சிலரைத்தவிர படையினர் அனைவரும் அதிலிருந்து நீர் அருந்திவிட்டனர். தாலூத்தும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அந்த ஆற்றைக் கடந்தபோது அவர்களில் சிலர் கூறினார்கள்: இன்று ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் போரிட எங்களிடம் சக்தி இல்லை. அப்போது மறுமைநாளில் அல்லாஹ்வை உறுதியாகச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட, குறைந்த எண்ணிக்கையுடைய எத்தனையோ சிறுகூட்டங்கள் அல்லாஹ்வை நிராகரித்த பெரும் எண்ணிக்கையுடைய கூட்டங்களை அவனுடைய அனுமதிகொண்டு அவனுடைய உதவியால் வென்றிருக்கின்றன. அல்லாஹ்வின் உதவி ஈமானைக்கொண்டே கிடைக்குமே அன்றி அதிக எண்ணிக்கையைக் கொண்டு அல்ல. அல்லாஹ் தன் அடியார்களில் பொறுமையாளர்களுக்கு ஆதரவளிப்பவனாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கின்றான்.
Les exégèses en arabe:
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
2.250. ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் இவர்கள் வெளிப்பட்டபோது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: எங்கள் இறைவா! எங்கள் உள்ளத்தில் பொறுமையைப் பொழிவாயாக. எதிரியிடம் தோற்று புறங்காட்டி ஓடிவிடாத அளவுக்கு எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. உன் ஆற்றலையும் ஆதரவையும் கொண்டு உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.
Les exégèses en arabe:
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫— وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
2.251. அல்லாஹ்வின் அனுமதிகொண்டு தாலூத்தின் படைகள் ஜாலூத்தின் படைகளைத் தோற்கடித்தது. தாவூத் ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினான். தான் நாடிய பல்வேறு கலைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தான். இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நன்மைதரக்கூடிய விஷயங்களை அவருக்கு ஒன்றுசேர்த்து வழங்கினான். மக்களில் சிலர் செய்யும் குழப்பத்தை சிலரைக் கொண்டு தடுக்கும் வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தவில்லையெனில் குழப்பவாதிகளின் ஆதிக்கத்தால் பூமி சீர்குலைந்துபோயிருக்கும். ஆயினும் அல்லாஹ் படைப்புகள் அனைத்தின்மீதும் பேரருள்புரிபவனாக இருக்கின்றான்.
Les exégèses en arabe:
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ— وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟
2.252. தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய நாம் உமக்கு எடுத்துரைக்கும் வசனங்கள் தெளிவான அல்லாஹ்வின் வசனங்களாகும். நிச்சயமாக நீர் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவராவீர்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• من حكمة القائد أن يُعرِّض جيشه لأنواع الاختبارات التي يتميز بها جنوده ويعرف الثابت من غيره.
1. படைத்தளபதி தன் படையினரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலைகுலையாமல் உறுதியாக இருப்பவர்களை அவரால் வேறுபடுத்தி அறியமுடியும்.

• العبرة في النصر ليست بمجرد كثرة العدد والعدة فقط، وإنما معونة الله وتوفيقه أعظم الأسباب للنصر والظَّفَر.
2. வெற்றி ஆள்பலத்தைக் கொண்டோ ஆயுதபலத்தைக்கொண்டோ கிடைக்காது. அவன் உடன் இருத்தலும், அல்லாஹ்வின் உதவியும் அருளுமே வெற்றிக்கான மிகப்பிரதான காரணிகளாகும்.

• لا يثبت عند الفتن والشدائد إلا من عَمَرَ اليقينُ بالله قلوبَهم، فمثل أولئك يصبرون عند كل محنة، ويثبتون عند كل بلاء.
3. கஷ்டங்களிலும் சோதனைகளிலும் அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்டவர்கள்தாம் நிலைகுலையாமல் உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள்தாம் ஒவ்வொரு கஷ்டத்திலும் பொறுமையை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு சோதனையிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

• الضراعة إلى الله تعالى بقلب صادق متعلق به من أعظم أسباب إجابة الدعاء، ولا سيما في مواطن القتال.
4. உண்மையான உள்ளத்தோடு அல்லாஹ்விடம் மன்றாடுதல் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முக்கியமான காரணியாகும், குறிப்பாக போர்ச் சமயங்களில்.

• من سُنَّة الله تعالى وحكمته أن يدفع شر بعض الخلق وفسادهم في الأرض ببعضهم.
5. பூமியில் சிலர் செய்யும் தீங்குகளையும் குழப்பங்களையும் அல்லாஹ் வேறு சிலரால் தடுக்கிறான். இது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

 
Traduction des sens Sourate: Al Baqarah
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture