Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Ibrahim   Verset:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
14.6. -தூதரே!- மூஸா தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, தம் சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர் கூறினார்: “ சமூகமே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி, அவர்களின் தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தான். அவர்கள் உங்களை கொடிய வேதனையில் ஆழ்த்தியிருந்தார்கள். பிர்அவ்னின் ஆட்சியைப் பிடித்துக்கொள்ளும் ஒருவன் உங்களிடையே பிறந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் உங்களின் ஆண் மக்களைக் கொலை செய்து கொண்டும் உங்களை இழிவுபடுத்தவும் அவமானப்படுத்தவும் உங்களின் பெண் மக்களை உயிருடன் விட்டுவைத்துக் கொண்டும் இருந்தான். அவர்களின் இந்த செயல்களில் உங்களின் பொறுமைக்கு மாபெரும் சோதனை இருந்தது. நீங்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால் பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி உங்களுக்கு வெகுமதியளித்தான்.
Les exégèses en arabe:
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِیْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِیْ لَشَدِیْدٌ ۟
14.7.மூஸா அவர்களிடம் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுக்கு உறுதியாக அறிவித்ததை நினைவுகூருங்கள்: “அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றிசெலுத்தினால் அவன் தன் அருட்கொடைகளையும் சிறப்பையும் உங்களுக்கு இன்னும் அதிகமாக வழங்குவான். நீங்கள் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டால் நிச்சயமாக தனது அருள்களை மறுத்து அவற்றுக்கு நன்றி செலுத்தாதோருக்கு அவனுடைய வேதனை கடுமையானது.”
Les exégèses en arabe:
وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ— فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟
14.8. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: சமூகமே, “நீங்களும் உங்களுடன் சேர்ந்து பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வை நிராகரித்தாலும் அதனால் நீங்கள்தாம் பாதிக்கப்படுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; தன் உள்ளமையை கொண்டு புகழுக்குரியவன். நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அவனுக்கு எந்த பயனையும் அளித்து விடுவதில்லை; நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்த தீங்கையும் அளித்து விடுவதில்லை.”
Les exégèses en arabe:
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬— وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ— لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ— جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
14.9. -நிராகரிப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் நிராகரித்த நூஹின் சமூகம், ஹூத் உடைய சமூகம் ஆத், ஸாலிஹின் சமூகம், ஸமூத் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த சமூகங்கள் அவற்றின் எண்ணிக்கையை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான் - ஆகியவை அழிக்கப்பட்ட செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் தூதர்களின் மீதுள்ள வெறுப்பினால் தமது கரங்களை வாயிலிட்டு விரல்களைக் கடித்துக் கொண்டனர். மேலும் தங்களின் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் கொண்டு வந்ததை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் எங்களை அழைக்கும் விஷயத்தில் நாங்கள் கடும் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”
Les exégèses en arabe:
قَالَتْ رُسُلُهُمْ اَفِی اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَدْعُوْكُمْ لِیَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرَكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ؕ— تُرِیْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
14.10. அவர்களின் தூதர்கள் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்திருக்கும் நிலையில், அவனை மட்டுமே வணக்கத்தில் ஏகத்துவப்படுத்த வேண்டும் என்பதிலும் சந்தேகமா? உங்களின் முந்தைய பாவங்களை மன்னிப்பதற்காகவும் உங்களது உலக வாழ்வில் குறிக்கப்பட்ட உங்கள் தவணைகளைப் பூர்த்தி செய்யும் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும், தன்னை நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் அழைக்கின்றான்.” அவர்களின் சமூகத்தினர் அவர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களை திசைதிருப்பப் பார்க்கிறீர்கள். “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து எங்களின் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள்” என்ற உங்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை எங்களிடம் கொண்டு வாருங்கள்.”
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• من وسائل الدعوة تذكير المدعوين بنعم الله تعالى عليهم، خاصة إن كان ذلك مرتبطًا بنعمة كبيرة، مثل نصر على عدوه أو نجاة منه.
1. அழைக்கப்படுவோர் மீது அல்லாஹ் புரிந்துள்ள - குறிப்பாக தமது எதிரிக்கெதிரான உதவி அல்லது எதிரியிடமிருந்து தப்பித்தல் போன்ற பெரும் - அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவதும் தஃவாவின் வழிமுறைகளில் உள்ளவையாகும்.

• من فضل الله تعالى أنه وعد عباده مقابلة شكرهم بمزيد الإنعام، وفي المقابل فإن وعيده شديد لمن يكفر به.
2. தன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் அவற்றை அதிகப்படுத்துவதாக வாக்களிக்கிறான். இது அவனுடைய அருளாகும். அதற்கு மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான வேதனை இருக்கிறது.

• كفر العباد لا يضر اللهَ البتة، كما أن إيمانهم لا يضيف له شيئًا، فهو غني حميد بذاته.
3. அடியார்களின் நிராகரிப்பால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அதேபோன்று அடியார்களின் நம்பிக்கையால் அவனுக்கு எந்த பயனும் ஏற்பட்டு விடுவதில்லை. அவன் தன் உள்ளமையில் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

 
Traduction des sens Sourate: Ibrahim
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture