Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - Index of Translations

XML CSV Excel API
Please review the Terms and Policies

Translation of the Meanings Surah: An-Nahl   Verse:
اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا یُفْسِدُوْنَ ۟
தாமும் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (பிறரையும்) தடுத்தவர்கள் -அவர்களுக்கு, அவர்கள் விஷமம் செய்து கொண்டு இருந்த காரணத்தால் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்துவோம்.
Arabic Tafsirs:
وَیَوْمَ نَبْعَثُ فِیْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا عَلَیْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِیْدًا عَلٰی هٰۤؤُلَآءِ ؕ— وَنَزَّلْنَا عَلَیْكَ الْكِتٰبَ تِبْیَانًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً وَّبُشْرٰی لِلْمُسْلِمِیْنَ ۟۠
(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்பி, (நிராகரித்த) இவர்களுக்கு எதிரான சாட்சியாளராக உம்மைக் கொண்டு வரும் நாளில் (அந்த வேதனையை அடைவார்கள்). (நபியே!) எல்லாவற்றையும் மிக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.
Arabic Tafsirs:
اِنَّ اللّٰهَ یَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِیْتَآئِ ذِی الْقُرْبٰی وَیَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْیِ ۚ— یَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டு அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் ஞானம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.
Arabic Tafsirs:
وَاَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عٰهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَیْمَانَ بَعْدَ تَوْكِیْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَیْكُمْ كَفِیْلًا ؕ— اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். சத்தியங்களை அவற்றை உறுதிபடுத்திய பின்பு முறிக்காதீர்கள். அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை அறிவான்.
Arabic Tafsirs:
وَلَا تَكُوْنُوْا كَالَّتِیْ نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا ؕ— تَتَّخِذُوْنَ اَیْمَانَكُمْ دَخَلًا بَیْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِیَ اَرْبٰی مِنْ اُمَّةٍ ؕ— اِنَّمَا یَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖ ؕ— وَلَیُبَیِّنَنَّ لَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ مَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
தான் நெய்த நூலை (அது) உறுதி பெற்ற பின்பு (பல) உதிரிகளாக பிரித்த வளைப் போன்று ஆகிவிடாதீர்கள். ஒரு சமுதாயத்தை விட (வேறு) ஒரு சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்காக (பலவீனர்களுடன் நீங்கள் செய்த) உங்கள் சத்தியங்களை ஏமாற்றமாக, வஞ்சகமாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. நிச்சயமாக அல்லாஹ் உங்களை இதன் மூலம் சோதிக்கிறான். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றை மறுமை நாளில் (அவன்) உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவான்.
Arabic Tafsirs:
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
அல்லாஹ் நாடியிருந்தால் (இஸ்லாமைப் பின்பற்றுகிற) ஒரே ஒரு சமுதாயமாக உங்களை ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி நிச்சயமாக (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
Arabic Tafsirs:
 
Translation of the Meanings Surah: An-Nahl
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - Index of Translations

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

Close