Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: At-Tawbah   Verse:
فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ ؕ— اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ بِهَا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
9.55. -தூதரே!- நயவஞ்சகர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ உம்மைக் கவர்ந்துவிட வேண்டாம். அவர்களின் செல்வங்கள் மற்றும் பிள்ளைகளால் ஏற்படும் விளைவு தீயவையாகும். அதனை அடைவதற்கு சிரமப்படுதல் அவைகளில் ஏற்படும் சோதனைகள் என்பவற்றினால் அல்லாஹ் அவர்களுக்கு அவற்றை வேதனையாக ஆக்கியுள்ளான். அதே நிலையிலேயே அவர்களின் உயிர்களும் பிரிந்தவுடன் அவர்கள் நரகத்தின் அடித்தளத்தில் நிரந்தரமாக வேதனை செய்யப்படுவார்கள்.
Arabic Tafsirs:
وَیَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْ ؕ— وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ یَّفْرَقُوْنَ ۟
9.56. -நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று தங்களை வெளிப்படுத்தினாலும் அவர்களது உள்ரங்கத்தில் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். ஆனாலும் இணைவைப்பாளர்கள் கொலை செய்யப்பட்டும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டது போன்று தாங்களும் தண்டிக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் தப்புவதற்காக வெளிரங்கத்தில் முஸ்லிம்களாக உள்ளனர்.
Arabic Tafsirs:
لَوْ یَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَیْهِ وَهُمْ یَجْمَحُوْنَ ۟
9.57. இந்த நயவஞ்சகர்கள் தம்மைப் பாதுகாக்கும் ஏதேனும் கோட்டையையோ மறைந்து கொள்வதற்கு மலைகளில் குகைகளையோ ஒளிந்துகொள்வதற்கு பதுங்குமிடத்தையோ பெற்றால் அதில் அடைக்கலம் புகுந்துவிடுவார்கள். மேலும் அதில் விரைந்து நுழைந்தும் விடுவார்கள்.
Arabic Tafsirs:
وَمِنْهُمْ مَّنْ یَّلْمِزُكَ فِی الصَّدَقٰتِ ۚ— فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ یُعْطَوْا مِنْهَاۤ اِذَا هُمْ یَسْخَطُوْنَ ۟
9.58. -தூதரே!-நயவஞ்சகர்களில் சிலர் தர்மப் பொருள்களில் தாங்கள் நாடியதைப் பெறாததனால் உம்மைக் குறைகூறுகிறார்கள். நீர் அவர்கள் விரும்பியதை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் உம்மைக் கொண்டு திருப்தியடைகிறார்கள். அவர்கள் கேட்பதை நீர் வழங்காவிட்டால் வெறுப்பை வெளியிடுகின்றனர்.
Arabic Tafsirs:
وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ ۙ— وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَیُؤْتِیْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَرَسُوْلُهٗۤ ۙ— اِنَّاۤ اِلَی اللّٰهِ رٰغِبُوْنَ ۟۠
9.59. தூதரே! தர்மப் பொருள்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறும் இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு விதித்ததை ஏற்றுக் கொண்டு, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்கு வழங்குவான். அல்லாஹ் வழங்கியதிலிருந்து தூதரும் எங்களுக்கு வழங்குவார். நாங்கள் அல்லாஹ்விடமே - அவன் எங்களுக்கு வழங்குவான் என்று - ஆர்வம் கொண்டுள்ளோம்” என்று கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அது அவர்கள் குறைகூறுவதைவிடச் சிறந்ததாக அமைந்திருக்கும்.
Arabic Tafsirs:
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِیْنِ وَالْعٰمِلِیْنَ عَلَیْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِی الرِّقَابِ وَالْغٰرِمِیْنَ وَفِیْ سَبِیْلِ اللّٰهِ وَابْنِ السَّبِیْلِ ؕ— فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
9.60. நிச்சயமாக கடமையான தர்மங்கள், தொழில் அல்லது உத்தியோகம் இருந்தும் போதுமான வருமானமின்றி கவனிப்பாரற்றுள்ள ஏழைகளுக்கும், எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளாத அவர்களது நிலமை அல்லது பேச்சின் மூலம் தெளிவாக வசதியற்றவர்கள் என மக்களால் அறியப்பட்ட வறியவர்களுக்கும், ஆட்சியாளர் ஸகாத்தை சேகரிப்பதற்காக நியமித்தவர்களுக்கும், ஸகாத்தை வழங்குவதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிராகரிப்பாளர்களுக்கும் அல்லது ஈமான் உறுதியாவதற்காக பலவீனமான நம்பிக்கையாளர்களுக்கும் அல்லது ஸகாத்தை பெறுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கிழைப்பதை தவிர்ந்து கொள்வோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வீண்விரயத்திற்காகவோ பாவம் செய்வதற்கோ அல்லாமல் கடன் பெற்ற ஆனால் கடனை அடைக்க முடியாத கடனாளிக்கும் அல்லாஹ்வின் பாதையில் போராடுவோரை தயார்படுத்துவதற்காகவும் பிரயாணச் செலவின்றி தவிக்கும் பிரயாணிக்கும் உரியனவாகும். ஸகாத்தை இவர்களுக்கு மாத்திரம் செலவிடுவதே இறைகட்டளையாகும். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை நன்கறிந்தவனும் அவனது திட்டமிடலிலும் சட்டதிட்டங்களிலும் ஞானமுடையவனுமாவான்.
Arabic Tafsirs:
وَمِنْهُمُ الَّذِیْنَ یُؤْذُوْنَ النَّبِیَّ وَیَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ؕ— قُلْ اُذُنُ خَیْرٍ لَّكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَیُؤْمِنُ لِلْمُؤْمِنِیْنَ وَرَحْمَةٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ؕ— وَالَّذِیْنَ یُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
9.61. நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருக்கு வார்த்தைகளினால் தொல்லை கொடுக்கிறார்கள். அவரது சகிப்புத் தன்மையை காணும் போது, “இவர் யார் என்ன கூறினாலும் அதனை நம்பிவிடுகிறார். உண்மை எது பொய் எது எனப் பிரித்தறிய முடியாதவர்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூதர் நன்மையான விஷயங்களைத்தான் கேட்கிறார். அல்லாஹ்வையும் உண்மையாளர்களான நம்பிக்கையாளர்கள் கூறுவதையும் உண்மைப்படுத்துகிறார். அவர்களுடன் கருணையுடன் நடந்துகொள்கிறார். அல்லாஹ்வின் தூதருக்குத் ஏதேனும் ஒரு வகையில் தொல்லை கொடுப்பவருக்கும் வேதனைமிக்க கடும் தண்டனை உண்டு.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الأموال والأولاد قد تكون سببًا للعذاب في الدنيا، وقد تكون سببًا للعذاب في الآخرة، فليتعامل العبد معهما بما يرضي مولاه، فتتحقق بهما النجاة.
1. சில வேளை செல்வங்களும் பிள்ளைகளும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனைக்குக் காரணமாக அமையலாம். எனவே அடியான் தன் அதிபதியைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அவற்றைக் கையாள வேண்டும். அப்போதுதான் அவற்றினால் வெற்றி கிடைக்கும்.

• توزيع الزكاة موكول لاجتهاد ولاة الأمور يضعونها على حسب حاجة الأصناف وسعة الأموال.
2. ஸகாத்தைப் பங்கிடுவது ஆட்சிப் பொறுப்பாளர்களின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது. குர்ஆனில் கூறப்பட்ட எட்டு பிரிவினரின் தேவை, சேகரிக்கப்பட்ட ஸகாத் பொருட்களின் அளவு என்பவற்றுக்கேற்ப அவர்கள் அவற்றைப் பங்கிடுவார்கள்.

• إيذاء الرسول صلى الله عليه وسلم فيما يتعلق برسالته كفر، يترتب عليه العقاب الشديد.
3. நபியவர்களின் தூதுப் பணி சம்பந்தப்படும் விடயத்தில் அவர்களுக்கு தொல்லை கொடுப்பது இறைநிராகரிப்பாகும். அதற்கு கடுமையான தண்டனை உண்டு.

• ينبغي للعبد أن يكون أُذن خير لا أُذن شر، يستمع ما فيه الصلاح والخير، ويُعرض ترفُّعًا وإباءً عن سماع الشر والفساد.
4. அடியான் தீயவற்றைக் கேட்காது நல்லவற்றையே கேட்கவேண்டும். நலவு உள்ளவற்றையே செவிமடுக்க வேண்டும். தீயவற்றைக் கேட்காமல் புறக்கணித்து விடவேண்டும்.

 
Translation of the Meanings Surah: At-Tawbah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close