Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Qiyāmah   Verse:
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
75.20,21. ஒருபோதும் இல்லை. நீங்கள் வாதிடுவதுபோல மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது சாத்தியமற்ற விடயமல்ல. ஆரம்பத்தில் உங்களைப் படைத்தவன் நீங்கள் இறந்தபிறகு நிச்சயமாக மீண்டும் உங்களைப் படைக்கும் ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். மாறாக விரைவாக அழிந்துவிடும் உலக வாழ்க்கையின்மீது நீங்கள் கொண்ட மோகமே நீங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பதற்கான காரணமாகும்.
Arabic Tafsirs:
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
21. அல்லாஹ் உங்களுக்கு ஏவிய வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அவன் உங்களைத் தடுத்த காரியங்களை விட்டும் தவிர்ந்து நடக்கும்படி சொல்லும் மறுமை வாழ்வை நீங்கள் விட்டதுமாகும்.
Arabic Tafsirs:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
75.22. அந்நாளில் சீதேவிகள், நம்பிக்கையாளர்களின் முகங்கள் பொலிவாக இருக்கும்.
Arabic Tafsirs:
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
75.23. அவர்கள் தம் இறைவனைப் பார்த்து அதன் மூலம் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள்.
Arabic Tafsirs:
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ بَاسِرَةٌ ۟ۙ
75.24. அந்நாளில் மூதேவிகள், நிராகரிப்பாளர்களின் முகங்கள் கடுகடுத்ததாக இருக்கும்.
Arabic Tafsirs:
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
75.25. பெரும் தண்டனையும் நோவினைமிக்க வேதனையும் தங்கள் மீது இறங்கப்போகிறது என்பதை அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள்.
Arabic Tafsirs:
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
75.26. தாங்கள் இறந்துவிட்டால் வேதனை செய்யப்பட மாட்டோம் என்று இணைவைப்பாளர்கள் எண்ணுவது போலல்ல விடயம். அவர்களில் யாருக்கேனும் உயிர் நெஞ்சின் மேற்பகுதியை அடைந்துவிட்டால்
Arabic Tafsirs:
وَقِیْلَ مَنْ ٚ— رَاقٍ ۟ۙ
75.27. மக்களில் சிலர் சிலரிடம் கூறுவார்கள்: “இவர் குணமடையும்பொருட்டு இவருக்கு மந்திரிப்பவர் யார்?”
Arabic Tafsirs:
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
75.28. மரண வலியில் இருப்பவர் அப்போது தாம் உலகை விட்டுப் பிரிந்து மரணிக்கப் போகின்றோம் என்பதை உறுதியாக அறிந்துகொள்வார்.
Arabic Tafsirs:
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
75.29. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை தொடங்கும் தருவாயில் துன்பங்கள் ஒன்றுசேர்ந்துவிடும்.
Arabic Tafsirs:
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمَسَاقُ ۟ؕ۠
75.30. இது நடந்துவிட்டால் இறந்தவர் தன் இறைவனின்பால் இழுத்துச் செல்லப்படுவார்.
Arabic Tafsirs:
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
75.31. நிராகரிப்பாளன் தூதர் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவுமில்லை; அல்லாஹ்வுக்காக தொழவுமில்லை.
Arabic Tafsirs:
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
75.32. ஆனால் தூதர் கொண்டுவந்ததை பொய்யெனக் கூறி அதனைப் புறக்கணித்தான்.
Arabic Tafsirs:
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
75.33. பின்னர் இந்த நிராகரிப்பாளன் கர்வத்துடன் நடந்தவாறே தன் குடும்பத்தை நோக்கிச் செல்கிறான்.
Arabic Tafsirs:
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
75.34. எனவே அல்லாஹ் நிராகரிப்பாளனுக்கு அவனது வேதனை அவனை நெருங்கிவிட்டதாக எச்சரித்தான்.
Arabic Tafsirs:
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
75.35. பின்னர் மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக அதே வசனத்தை திரும்பக் கூறினான். அவன் கூறுகிறான்: (பின்னரும், அழிவு உனக்கு நெருக்கமாகிவிட்டது, நெருக்கமாகிவிட்டது).
Arabic Tafsirs:
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
75.36. அல்லாஹ் மனிதனுக்கு எந்த சட்டதிட்டத்தையும் கட்டளையிடாமல் அவனை அப்படியே விட்டுவிடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?
Arabic Tafsirs:
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
75.37. இந்த மனிதன் ஒருநாள் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்தாக இருக்கவில்லையா?
Arabic Tafsirs:
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
75.38. அவ்வாறு இருந்ததன் பின் அவன் உறைந்த இரத்தக்கட்டியாகி விடுகிறான். பின்னர் அல்லாஹ் அவனைப் படைத்தான். அவனது படைப்பை செம்மையாக ஆக்கினான்.
Arabic Tafsirs:
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالۡاُنۡثٰى ۟ؕ
75.39. அவனுடைய இனத்திலிருந்தே அவன் ஆண், பெண் என்ற இரு வகையினரை ஏற்படுத்தவில்லையா?
Arabic Tafsirs:
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
75.40. இவ்வாறு மனிதனை விந்து மற்றும் அட்டையிலிருந்து படைத்தவன் அவன் இறந்தபிறகு விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் அவனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றல் பெற்றவன் இல்லையா? ஏனில்லை. நிச்சயமாக அவன் அதற்கு ஆற்றலுடையவன்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• خطر حب الدنيا والإعراض عن الآخرة.
1. உலகின்மீது மோகம்கொண்டு மறுமையைப் புறக்கணிப்பதன் விபரீதம்.

• ثبوت الاختيار للإنسان، وهذا من تكريم الله له.
2. மனிதனுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இது அல்லாஹ் மனிதனுக்கு அளித்த கண்ணியமாகும்.

• النظر لوجه الله الكريم من أعظم النعيم.
3. அல்லாஹ்வின் திருமுகத்தைப் பார்ப்பது மிகப் பெரும் இன்பங்களில் ஒன்றாகும்.

 
Translation of the Meanings Surah: Al-Qiyāmah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close