Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Qalam   Verse:
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟
68.43. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு, هகசேதம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். அவர்கள் உலகில் இன்று போலல்லாமல் ஆரோக்கியமாக இருந்தபோது அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
Arabic Tafsirs:
فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ— سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
68.44. -தூதரே!- என்னையும் உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைப் பொய்ப்பிப்போரையும் விட்டுவிடுவீராக. நாம் அவர்களே இது அவர்களுக்கான சூழ்ச்சி மற்றும் விட்டுப் பிடித்தல் என்பதை அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை வேதனையின்பால் இட்டுச் செல்வோம்.
Arabic Tafsirs:
وَاُمْلِیْ لَهُمْ ؕ— اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
68.45. அவர்கள் பாவங்களில் உழல்வதற்காக சில காலம் வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக பொய்ப்பிப்பாளர்கள், நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நான் செய்யும் சூழ்ச்சி கடுமையானது. அவர்கள் என்னிடமிருந்து தப்பவோ என் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறவோ முடியாது.
Arabic Tafsirs:
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ
68.46. -தூதரே!- நீர் அவர்களை எதன்பால் அழைக்கின்றீரோ அதற்காக அவர்களிடம் கூலி வேண்டுகிறீரா? அதனால் அவர்கள் பெரும் சுமையை சுமக்கின்றார்களா? இதுதான் அவர்கள் உம்மைப் புறக்கணிப்பதற்கான காரணமா? உண்மை அதற்கு மாற்றமானது. நீர் அவர்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. பிறகு எந்த விஷயம் உம்மைப் பின்பற்றுவதைவிட்டும் அவர்களைத் தடுக்கிறது?.
Arabic Tafsirs:
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
68.47. அல்லது அவர்களிடம் மறைவானவற்றின் ஞானம் இருந்து அதிலிருந்து அவர்கள் உமக்கு எதிராக அவர்கள் விரும்பக்கூடிய ஆதாரங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்களா?
Arabic Tafsirs:
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ— اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ
68.48. -தூதரே!- உம் இறைவன் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்களைப் படிப்படியாக தண்டிப்பதாக தீர்மானித்துள்ளதால் நீர் பொறுமையாக இருப்பீராக. தனது கூட்டத்தை வெறுப்பதில் மீனுடையவர் யூனுஸைப் போன்று அவசரப்பட்டுவிடாதீர். அவர் கடலின் இருளிலும் மீன் வயிற்றின் இருளிலும் துன்பத்திற்குள்ளானவராக தம் இறைவனை அழைத்தார்.
Arabic Tafsirs:
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟
68.49. நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் அவரைச் சூழ்ந்திருக்காவிட்டால் மீன் அவரை வெட்ட வெளியில் வீசியிருக்கும். அவர் பழிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.
Arabic Tafsirs:
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
68.50. அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எனவேதான் அவரை நல்லடியார்களில் ஒருவராக ஆக்கினான்.
Arabic Tafsirs:
وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ
68.51. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பிப்பவர்கள் உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைச் செவியுறும்போது தங்களின் மிகக் கூரான பார்வைகளால் உம்மை வீழ்த்திவிடுவதைப்போன்று பார்க்கிறார்கள். -தங்களின் மனஇச்சையைப் பின்பற்றியவாறும் சத்தியத்தைப் புறக்கணித்தவாறும்- அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக இந்த குர்ஆனைக் கொண்டுவந்துள்ள தூதர் ஒரு பைத்தியக்காரர்தான்.”
Arabic Tafsirs:
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
68.52. உம்மீது இறக்கப்பட்ட குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு அறிவுரையாகவும் நினைவூட்டலாகவுமே இருக்கின்றது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الصبر خلق محمود لازم للدعاة وغيرهم.
1. பொறுமை அழைப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவசியமான மிகச் சிறந்த பண்பாகும்.

• التوبة تَجُبُّ ما قبلها وهي من أسباب اصطفاء الله للعبد وجعله من عباده الصالحين.
2. திருந்துவது (தௌபா) அதற்கு முன்புள்ளவற்றை அழித்துவிடுகிறது. அடியானை அல்லாஹ் தேர்ந்தெடுப்பதற்கும் அவனை தனது நல்லடியார்களில் ஒருவனாக மாற்றுவதற்கான காரணிகளில் ஒன்றாகும்.

• تنوّع ما يرسله الله على الكفار والعصاة من عذاب دلالة على كمال قدرته وكمال عدله.
3. அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின்மீது பலவகையான வேதனையை அனுப்புவது அவனின் பரிபூரண ஆற்றலுக்கும் நீதிக்கும் சான்றாகும்.

 
Translation of the Meanings Surah: Al-Qalam
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close