Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Munāfiqūn   Verse:
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا یَسْتَغْفِرْ لَكُمْ رَسُوْلُ اللّٰهِ لَوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَیْتَهُمْ یَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
63.5. இந்த நயவஞ்சகர்களிடம் “அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நீங்கள் செய்த செயல்களுக்கு வருத்தம் தெரிவியுங்கள், அவர் அல்லாஹ்விடம் உங்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்” என்று கூறப்பட்டால் பரிகாசமாக தங்களின் தலைகளைத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல், கட்டுப்படாமல் கர்வம் கொண்டவர்களாக தமக்கு இடப்பட்ட கட்டளையைப் புறக்கணிப்பதை நீர் காண்பீர்.
Arabic Tafsirs:
سَوَآءٌ عَلَیْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ ؕ— لَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
63.6. -தூதரே!- நீர் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவதும் கோராமலிருப்பதும் ஒன்றுதான். அல்லாஹ் அவர்களின் பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் பாவத்தில் நிலைத்திருப்பவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான்.
Arabic Tafsirs:
هُمُ الَّذِیْنَ یَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰی مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰی یَنْفَضُّوْا ؕ— وَلِلّٰهِ خَزَآىِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَفْقَهُوْنَ ۟
63.7. அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரிடம் இருக்கும் ஏழைகளும் மதீனாவைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளும் நபியவர்களை விட்டும் பிரிந்து செல்லவேண்டுமென்றால் உங்களின் செல்வங்களை அவர்களுக்காக செலவு செய்யாதீர்கள்.” வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அவற்றை வழங்குகிறான். ஆனால் நயவஞ்சகர்கள் நிச்சயமாக வாழ்வாதாரத்தின் கருவூலம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது என்பதை அறியமாட்டார்கள்.
Arabic Tafsirs:
یَقُوْلُوْنَ لَىِٕنْ رَّجَعْنَاۤ اِلَی الْمَدِیْنَةِ لَیُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ؕ— وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِیْنَ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟۠
63.8. அவர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை கூறுகிறான்: “நாங்கள் மதீனாவிற்கு திரும்பிச் சென்றால் கண்ணியமானவர்களாகிய -நானும் என் சமூகத்தினரும்- இழிவானவர்களான முஹம்மதையும் அவரது தோழர்களையும் வெளியேற்றிவிடுவோம்.” கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியது. அப்துல்லாஹ் இப்னு உபை, அவனது சகாக்களக்குரியதல்ல. ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதே என்பதை நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள்.
Arabic Tafsirs:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
63.9. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் செல்வங்களோ, பிள்ளைகளோ தொழுகையை விட்டும் இன்னபிற இஸ்லாமியக் கடமைகளை விட்டும் உங்களைத் திருப்பிவிட வேண்டாம். யாருடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை, இன்னபிறவற்றிலிருந்து அவரைத் திருப்பி விடுகிறதோ அவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்து உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர்.
Arabic Tafsirs:
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ— فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
63.10. உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து “என் இறைவன் எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா? நான் அல்லாஹ்வின் பாதையில் என் செல்வங்களைச் செலவு செய்து நல்லமல்கள் சாலிஹான அவனுடைய நல்லடியார்களில் ஒருவனாக ஆகியிருப்பேனே!” எனக் கூறும் சமயம் வருமுன் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து செலவுசெய்துகொள்ளுங்கள்.
Arabic Tafsirs:
وَلَنْ یُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
63.11. ஒருவரின் தவணை வந்து அவரது வாழ்நாள் நிறைவடைந்து விட்டால் அல்லாஹ் அவருக்கு ஒருபோதும் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்யக்கூடியதை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் கிடைக்கும்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الإعراض عن النصح والتكبر من صفات المنافقين.
1. அறிவுரையைப் புறக்கணிப்பது, கர்வம்கொள்வது நயவஞ்சகர்களின் பண்புகளாகும்.

• من وسائل أعداء الدين الحصار الاقتصادي للمسلمين.
2. முஸ்லிம்களுக்கான பொருளாதாரத் தடை மார்க்க எதிரிகளின் வழிமுறைகளில் ஒன்றாகும்.

• خطر الأموال والأولاد إذا شغلت عن ذكر الله.
3. அல்லாஹ்வின் நினைவை விட்டும் மறக்கடிக்கும் செல்வங்கள் மற்றும் பிள்ளைகளின் விபரீதம்.

 
Translation of the Meanings Surah: Al-Munāfiqūn
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close