Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Verse: (123) Surah: Al-An‘ām
وَكَذٰلِكَ جَعَلْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ اَكٰبِرَ مُجْرِمِیْهَا لِیَمْكُرُوْا فِیْهَا ؕ— وَمَا یَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
6.123. மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களின் தலைவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்ததைப் போல ஒவ்வொரு ஊரிலுள்ள தலைவர்களையும் பெரியவர்களையும் ஷைத்தானின் பாதையை நோக்கி அழைப்பதற்கும் தூதர்களையும் அவர்களைப் பின்போற்றுவோரையும் எதிர்ப்பதற்கும், தந்திரங்கள் செய்வோராகவும் சூழ்ச்சி செய்வோராகவும் நாம் ஆக்கினோம். உண்மையில் அவர்களின் சூழ்ச்சிகளும் திட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். ஆயினும் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றுவதனாலும் அறியாமையினாலும் அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடியாது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الأصل في الأشياء والأطعمة الإباحة، وأنه إذا لم يرد الشرع بتحريم شيء منها فإنه باق على الإباحة.
1. அனைத்துப் பொருட்களும் உணவுகளும் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையே. அவற்றில் மார்க்கம் தடைசெய்தவற்றைத் தவிர ஏனையவை அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

• كل من تكلم في الدين بما لا يعلمه، أو دعا الناس إلى شيء لا يعلم أنه حق أو باطل، فهو معتدٍ ظالم لنفسه وللناس، وكذلك كل من أفتى وليس هو بكفء للإفتاء.
2. மார்க்கத்தில் அறியாத விஷயத்தைப் பேசுபவன் அல்லது சத்தியமா அசத்தியமா என அறியாத ஒன்றின் பக்கம் மக்களை அழைப்பவன் வரம்பு மீறியவனாகவும் தன் மீதும் மக்கள் மீதும் அநீதி இழைத்தவனாகவும் கருதப்படுவான். இது மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு தகுதியின்றி தீர்ப்பு வழங்குபவருக்கும் பொருந்தும்.

• منفعة المؤمن ليست مقتصرة على نفسه، بل مُتَعدِّية لغيره من الناس.
3.ஒரு நம்பிக்கையாளனின் பயன் அவனோடு மாத்திரம் சுருங்கியதல்ல. மாறாக ஏனைய மனிதர்களுக்கும் அவன் பயனுள்ளவனாவான்.

 
Translation of the Meanings Verse: (123) Surah: Al-An‘ām
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close