Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Mujādalah   Verse:

அல்முஜாதலா

Objectives of the Surah:
إظهار علم الله الشامل وإحاطته البالغة، تربيةً لمراقبته، وتحذيرًا من مخالفته.
அல்லாஹ்வின் கண்காணிப்பில் வாழ்வதற்குப் பயிற்றுவிக்கும் பொருட்டும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதிலிருந்து எச்சரிக்கும் பொருட்டும் அவனது பரந்த அறிவையும் நன்கு உயர்ந்த சூழ்ந்தறியும் ஆற்றலையும் வெளிப்படுத்தல்.

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِیْ تُجَادِلُكَ فِیْ زَوْجِهَا وَتَشْتَكِیْۤ اِلَی اللّٰهِ ۖۗ— وَاللّٰهُ یَسْمَعُ تَحَاوُرَكُمَا ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
58.1. -தூதரே!- தன் கணவன் (அவ்ஸ் இப்னு அஸ்ஸாமித்) தன்னை அவரது தாயோடு ஒப்பிட்டுக் கூறியதால் அவரைக்குறித்து உம்மை நாடி வந்து தன் கணவர் அவளுடன் நடந்த விதத்தை அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருந்த (கவ்லா பின்த் ஸஃலபா என்ற) அந்தப் பெண்ணின் பேச்சை அல்லாஹ் செவியேற்றுவிட்டான். உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் செவியேற்கிறான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவனாகவும் அவர்களின் செயல்களை பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
اَلَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآىِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ ؕ— اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـِٔیْ وَلَدْنَهُمْ ؕ— وَاِنَّهُمْ لَیَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا ؕ— وَاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟
58.2. நீ என்னிடத்தில் எனது தாயின் முதுகைப் போன்றவள் என தம் மனைவியரிடம் கூறி தமது மனைவிமாரிடமிருந்து விலகிக்கொள்வோர் தங்களின் இந்த கூற்றில் பொய்யுரைக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் மனைவியர் அவர்களின் தாய்மார்கள் அல்ல. அவர்களைப் பெற்றவர்களே அவர்களின் தாய்மார்களாவர். அதனைக் கூறும்போது நிச்சயமாக அவர்கள் மிகவும் இழிவான, பொய்யான வார்த்தையையே கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொருப்பவன், மன்னிக்கக்கூடியவன். எனவேதான் அந்தப் பாவத்திலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்துவதற்காக பரிகாரத்தை அவர்களுக்கு அவன் ஏற்படுத்தியுள்ளான்.
Arabic Tafsirs:
وَالَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ؕ— ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
58.3. யாரெல்லாம் இந்த மோசமான வார்த்தையைக் கூறிவிட்டு பின்னர் அவ்வாறு தாய்மார்களாக ஒப்பிடப்பட்டவர்களோடு உறவுகொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் உறவு முன்னால் ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இந்த மேற்கூறப்பட்ட கட்டளை நீங்கள் உங்கள் மனைவியரை தாய்மார்களோடு ஒப்பிட்டுக் கூறக்கூடாது என்பதை ஏவுவதற்காகத்தான். அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ مِنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ۚ— فَمَنْ لَّمْ یَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّیْنَ مِسْكِیْنًا ؕ— ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
58.4. உங்களில் உரிமையிட அடிமையைப் பெறாதவர், தாய்மார்களாக ஒப்பிடப்பட்ட தம் மனைவியருடன் உடலுறவு கொள்வதற்கு முன்னால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு தொடராக இரு மாதங்கள் சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நாம் இட்ட இந்த கட்டளை நீங்கள் அல்லாஹ்தான் கட்டளையிட்டான் என்பதை ஏற்றுக்கொண்டு அந்த ஏவலின்படி செயல்படவும் அவனது தூதரைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். நாம் உங்களுக்கு விதித்த இந்த சட்டங்கள் தன் அடியார்களுக்கு ஏற்படுத்திய அல்லாஹ்வின் வரம்புகளாகும். எனவே அவற்றை மீறிவிடாதீர்கள். அல்லாஹ்வின் சட்டங்களையும், அவன் ஏற்படுத்திய வரம்புகளையும் நிராகரிப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
Arabic Tafsirs:
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟ۚ
58.5. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் இதற்கு முன்னர் எதிர்த்த முந்தைய சமூகங்களைப்போன்று இழிவுபடுத்தப்படுவார்கள். நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் சான்றுகளையும் நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு.
Arabic Tafsirs:
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ— اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟۠
58.6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் நாளில் அவர்களில் யாரையும் விட்டுவைக்க மாட்டான். அவர்கள் உலகில் செய்த மோசமான செயல்களை அவர்களுக்கு அறிவிப்பான். அவன் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்களின் செயல்களில் எதுவும் அவனுக்குத் தவறாது. அவர்கள் மறந்த செயல்களையும் அவர்களின் பதிவேடுகளில் எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்பார்கள். அவை சிறியதோ, பெரியதோ எதையும் விட்டுவைக்காது. அனைத்தையும் கணக்கிட்டு விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• لُطْف الله بالمستضعفين من عباده من حيث إجابة دعائهم ونصرتهم.
1. பிரார்த்தனைகளுக்கு பதிலளித்தல், உதவி செய்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பலவீனமான தன் அடியார்களின்மீது கருணை காட்டுகிறான்.

• من رحمة الله بعباده تنوع كفارة الظهار حسب الاستطاعة ليخرج العبد من الحرج.
2.தனது அடியார்களின் மீதான அல்லாஹ்வின் கருணைதான் அடியான் சங்கடப்படக்கூடாது என்பதற்காக ழிஹாருக்கு சக்திக்கேற்ப பரிகாரங்களை வகைப்படுத்தியுள்ளான்.

• في ختم آيات الظهار بذكر الكافرين؛ إشارة إلى أنه من أعمالهم، ثم ناسب أن يورد بعض أحوال الكافرين.
3. ழிஹாருடைய வசனங்களின் முடிவில் நிராகரிப்பாளர்களைக் குறிப்பிடுவதன் மூலம் இச்செயல் அவர்களுக்குரியது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னர் நிராகரிப்பாளர்களின் சில நிலமைகளைக் குறிப்பிடுவதும் அதற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

 
Translation of the Meanings Surah: Al-Mujādalah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close