Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: An-Najm   Verse:

அந்நஜ்ம்

Objectives of the Surah:
إثبات صدق الوحي وأنه من عند الله.
வஹீ உண்மை, அது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்பதை நிரூபித்தல்

وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
53.1. உதிர்ந்து விழும் நட்சத்திரத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Arabic Tafsirs:
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ
53.2. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நேரான பாதையைவிட்டும் தவறவுமில்லை; அவர் வழிகெட்டவராகவும் இல்லை. ஆனால் அவர் நேர்வழி பெற்றவராக இருக்கின்றார்.
Arabic Tafsirs:
وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕۚ
53.3. தம் மன இச்சைக்கேற்ப அவர் இந்தக் குர்ஆனைக் கூறுவதில்லை.
Arabic Tafsirs:
اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ
53.4. இந்தக் குர்ஆன் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் அறிவித்த வஹியேயாகும்.
Arabic Tafsirs:
عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ
53.5. கடும் வல்லமையுடைய வானவர் ஜிப்ரீல்தான் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார்.
Arabic Tafsirs:
ذُوْ مِرَّةٍ ؕ— فَاسْتَوٰی ۟ۙ
53.6. ஜிப்ரீல் அழகிய தோற்றமுடையவர். அவர் தூதருக்கு முன்னால் அல்லாஹ் அவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் தோன்றினார்.
Arabic Tafsirs:
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ
53.7. ஜிப்ரீல் உயர்ந்த அடிவானத்தில் இருக்கும்போது
Arabic Tafsirs:
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ
53.8. பின்னர் ஜிப்ரீல் நபியை நெருங்கினார். பின்னர் அவரிடம் மிகவும் அதிகமாக நெருங்கினார்.
Arabic Tafsirs:
فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ
53.9. அவரின் நெருக்கம் இரு வில்லுகள் அல்லது அதைவிடவும் நெருக்கமான அளவாக இருந்தது.
Arabic Tafsirs:
فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ
53.10. ஜிப்ரீல் அல்லாஹ்வின் அடியார் முஹம்மதுக்கு வஹியாக அறிவிக்க வேண்டியதை அறிவித்தார்.
Arabic Tafsirs:
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟
53.11. முஹம்மதின் உள்ளம் தன் பார்வை கண்டதைக்குறித்து பொய்யுரைக்கவில்லை.
Arabic Tafsirs:
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟
53.12. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் இராப்பயணம் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவருக்குக் காட்டியதைக் குறித்து நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
Arabic Tafsirs:
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ
53.13. முஹம்மது ஜிப்ரீலை இரவில் அழைத்துச் சென்றபோது மற்றொரு முறை அவரை அவரது தோற்றத்தில் கண்டார்,
Arabic Tafsirs:
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟
53.14. இறுதி எல்லையிலுள்ள இலந்தை மரத்திற்கு அருகே. அது ஏழாவது வானத்தில் இருக்கின்ற மிகப் பெரும் ஒரு மரமாகும்.
Arabic Tafsirs:
عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ
53.15. அந்த மரத்திற்கு அருகில்தான் ஜன்னத்துல் மஃவா எனும் சுவனம் இருக்கின்றது.
Arabic Tafsirs:
اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ
53.16. அல்லாஹ்வின் கட்டளையின்படி அந்த இலந்தை மரத்தை மகத்தான பொருளொன்று மூடிய போது அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறிய மாட்டார்.
Arabic Tafsirs:
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟
53.17. அவரது பார்வை வலப்புறமோ, இடப்புறமோ சாயவில்லை. அதற்கு விதிக்கப்பட்டதை மீறவுமில்லை.
Arabic Tafsirs:
لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟
53.18. முஹம்மது விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் தன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய மாபெரும் சான்றுகளைக் கண்டார். அவர் சுவனத்தையும் நரகத்தையும் அவற்றைத் தவிர உள்ளவற்றையும் கண்டார்.
Arabic Tafsirs:
اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ
53.19,20. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்குகின்ற சிலைகளான லாத், உஸ்ஸா
Arabic Tafsirs:
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟
20. மூன்றாவது மனாத் ஆகியவற்றைக் குறித்து எனக்கு அறிவியுங்கள், அவை உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தி பெறுகின்றனவா?
Arabic Tafsirs:
اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الۡاُنۡثٰى‏ ۟
53.21. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகள், அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா?
Arabic Tafsirs:
تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟
53.22. உங்களின் மன இச்சைக்கேற்ப நீங்கள் செய்த இந்த பங்கீடு அநீதியான பங்கீடாயிற்றே!
Arabic Tafsirs:
اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ— وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ
53.23. இந்த சிலைகள் அர்த்தமற்ற வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவற்றிற்கு வணக்கத்திற்குத் தகுதியான எந்தப் பண்பும் இல்லை. அவை நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களேயாகும். அல்லாஹ் அதற்கு எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. இணைவைப்பாளர்கள் யூகங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக்காட்டிய அவர்களின் மன இச்சைகளையுமே பின்பற்றுகிறார்கள். தூதரின் மூலம் அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்துவிட்டது. ஆயினும் அவர்கள் அதைக் கொண்டு நேர்வழியடையவில்லை.
Arabic Tafsirs:
اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ
53.24. அல்லது மனிதனுக்கு அல்லாஹ்விடத்தில் சிலைகளின் பரிந்துரை முதலான தான் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுமா?
Arabic Tafsirs:
فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠
53.25. இல்லை, அவனுக்கு அவன் விரும்பியதெல்லாம் இல்லை. மறுமையும் இம்மையும் அல்லாஹ்வுக்கே உரியது. அவையிரண்டிலிருந்தும் அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு தடுத்துக் கொள்கிறான்.
Arabic Tafsirs:
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟
53.26. வானங்களிலுள்ள எத்தனையோ வானவர்களின் பரிந்துரை எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் யாருக்கேனும் பரிந்துரை செய்ய விரும்பினால் அல்லாஹ்வின் அனுமதிக்குப் பிறகே அதுவும் அவர்களில் அவன் நாடியவர்களுக்கே பரிந்துரை செய்ய முடியும். பரிந்துரை செய்பவரையும் பொருந்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனக்கு இணைகளாக ஏற்படுத்தப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதிக்க மாட்டான். அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்ற பரிந்துரைசெய்யப்படும் எவரையும் பொருந்திக்கொள்ள மாட்டான்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• كمال أدب النبي صلى الله عليه وسلم حيث لم يَزغْ بصره وهو في السماء السابعة.
1. நபியவர்களின் பரிபூரண ஒழுக்கம். எனவேதான் ஏழாம் வானத்திலும் அவரது பார்வை திரும்பவில்லை.

• سفاهة عقل المشركين حيث عبدوا شيئًا لا يضر ولا ينفع، ونسبوا لله ما يكرهون واصطفوا لهم ما يحبون.
2.இணைவபை்பாளர்களின் மடமையான சிந்தனை. தீங்கிழைக்கவோ, பிரயோசனம்தரவோ முடியாதவற்றை வணங்கினார்கள். தாம் வெறுப்பவற்றை அல்லாஹ்வுக்கு இணைத்துக்கூறியும் தாம் விரும்புபவற்றைத் தமக்கு தேர்ந்தெடுத்தனர்.

• الشفاعة لا تقع إلا بشرطين: الإذن للشافع، والرضا عن المشفوع له.
3. பரிந்துரை செய்வதற்கான இரு நிபந்தனைகள்: 1. பரிந்துரை செய்பவருக்கான அனுமதி. 2. பரிந்துரை செய்யப்படுபவரைக் குறித்து திருப்தியடைதல்.

 
Translation of the Meanings Surah: An-Najm
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close