Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Adh-Dhāriyāt   Verse:

அத்தாரியாத்

Objectives of the Surah:
تعريف الجن والإنس بأن مصدر رزقهم من الله وحده؛ ليخلصوا له العبادة.
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதற்காக ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தின் மூலாதாரம் அல்லாஹ்தான் என்பதை அறிமுகம் செய்தல்

وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
51.1. புழுதியைக் கிளப்பக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Arabic Tafsirs:
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
51.2. ஏராளமான நீரை சுமந்து செல்லும் மேகங்களைக் கொண்டும்
Arabic Tafsirs:
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
51.3. கடலில் இலகுவாகச் செல்லும் கப்பல்களைக் கொண்டும்
Arabic Tafsirs:
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ
51.4. அல்லாஹ் பங்கிடுமாறு ஏவிய அடியார்களின் விவகாரங்களைப் பங்கிடும் வானவர்களைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arabic Tafsirs:
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ
51.5. நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த விசாரணையும் கூலி வழங்கப்படுவதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
Arabic Tafsirs:
وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ
51.6. நிச்சயமாக அடியார்களை விசாரனை செய்வது சந்தேகம் இல்லாமல் மறுமை நாளில் நிகழ்ந்தே தீரும்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الاعتبار بوقائع التاريخ من شأن ذوي القلوب الواعية.
1. வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு படிப்பினை பெறுவது விழிப்பான உள்ளமுடையோரின் பண்பாகும்.

• خلق الله الكون في ستة أيام لِحِكَم يعلمها الله، لعل منها بيان سُنَّة التدرج.
2. தான் அறிந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் பிரபஞ்சத்தை ஆறு நாட்களில் படைத்தான். படிப்படியாக செய்யும் வழிமுறைளைத் தெளிவுபடுத்துவதும் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

• سوء أدب اليهود في وصفهم الله تعالى بالتعب بعد خلقه السماوات والأرض، وهذا كفر بالله.
3. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபிறகு அல்லாஹ் களைப்படைந்துவிட்டான் என்று வர்ணித்த யூதர்களின் ஒழுக்கமின்மை. இது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும்.

 
Translation of the Meanings Surah: Adh-Dhāriyāt
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close