Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Verse: (69) Surah: Al-Mā’idah
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
5.69. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள்-அவர்கள்தான் சில நபிமார்களின் விசுவாசிகள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரில் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்தி நற்செயல்கள் செய்தார்களோ அவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சம்கொள்ளமாட்டார்கள். உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• العمل بما أنزل الله تعالى سبب لتكفير السيئات ودخول الجنة وسعة الأرزاق.
1. அல்லாஹ் இறக்கியதன்படி செயல்படுவது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் சுவனம் செல்வதற்கும் வாழ்வாதாரம் விசாலமாக வழங்கப்படுவதற்கும் காரணமாக அமைகிறது.

• توجيه الدعاة إلى أن التبليغ المُعتَدَّ به والمُبْرِئ للذمة هو ما كان كاملًا غير منقوص، وفي ضوء ما ورد به الوحي.
2. குறைவின்றிப் பரிபூரணமான முறையிலும் வஹியின் ஒளியிலும் அமைந்த அழைப்புப் பணியே ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என அழைப்பாளர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

• لا يُعْتد بأي معتقد ما لم يُقِمْ صاحبه دليلًا على أنه من عند الله تعالى.
3. அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரத்தை நிலைநாட்டாதவரை எக்கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

 
Translation of the Meanings Verse: (69) Surah: Al-Mā’idah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close