Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Muhammad   Verse:

முஹம்மத்

Objectives of the Surah:
تحريض المؤمنين على القتال، تقويةً لهم وتوهينًا للكافرين.
நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்தும் பொருட்டும் நிராகரிப்பாளர்களை பலவீனப்படுத்தும் பொருட்டும் நம்பிக்கையாளர்களை போர்புரிவதற்கு ஆர்வமூட்டுதல்.

اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ ۟
47.1. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய மார்க்கத்தைவிட்டும் மக்களைத் தடுத்தவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கிவிட்டான்.
Arabic Tafsirs:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ— كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟
47.2. யாரெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து, அவன் தன் தூதர் முஹம்மது மீது இறக்கிய -அவர்களின் இறைவனிடமிருந்து வந்த உண்மையான- அல்குர்ஆன் மீது நம்பிக்கைகொண்டார்களோ அல்லாஹ் அவர்களின் பாவங்களைப் போக்கிவிடுவான். அவற்றிற்காக அவர்களைத் தண்டிக்க மாட்டான். அவர்களின் உலக மற்றும் மறுமை தொடர்பான எல்லா விவகாரங்களையும் அவன் சீராக்கித் தந்திடுவான்.
Arabic Tafsirs:
ذٰلِكَ بِاَنَّ الَّذِیْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِیْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ ۟
47.3. இந்த இரு பிரிவினருக்குமான மேற்கூறப்பட்ட கூலிக்கான காரணம், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வின்மீதும் அவனது தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் தமது இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இரு பிரிவினரின் செயல்களில் காணப்படும் வேறுபாட்டினால் கூலியும் வேறுபட்டுள்ளது. எனவே அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்கள், நிராகரித்தவர்கள் ஆகிய இரு அணிகளின் விடயத்திலும் அல்லாஹ் தீர்ப்புச்செய்து தெளிவாக்கியது போல் அல்லாஹ் மக்களுக்கு உதாரணங்களைக் கூறுகிறான். நிகரானதை நிகரானதுடன் சேர்த்துவிடுகிறான்.
Arabic Tafsirs:
فَاِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ— حَتّٰۤی اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَ ۙ— فَاِمَّا مَنًّا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا— ذٰلِكَ ۛؕ— وَلَوْ یَشَآءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ ۙ— وَلٰكِنْ لِّیَبْلُوَاۡ بَعْضَكُمْ بِبَعْضٍ ؕ— وَالَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ فَلَنْ یُّضِلَّ اَعْمَالَهُمْ ۟
47.4. -நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களில் போர்புரிபவர்களை நீங்கள் போர்க்களத்தில் சந்தித்தால் உங்களின் வாள்களால் அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களில் அதிகமானவர்களை கொன்று குவிக்கும்வரை போரிடுங்கள். அவர்களின் பலத்தை அடியோடு அழித்துவிடுங்கள். அவர்களில் அதிகமானவர்களை கொன்று குவித்த பின் கைதிகளின் விலங்குகளைக் கட்டுங்கள். அவர்களை சிறைபிடித்தால் அப்போது நலனுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள்மீது கிருபை செய்து அவர்களிடம் எதுவும் பெறாமல் அவர்களை விடுவித்துவிடலாம் அல்லது ஈட்டுத்தொகை அல்லது வேறு எதனையோ பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கலாம். நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்றோ அல்லது நம்பிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்தோ போர் முடிவடையும் வரை நீங்கள் போரையும் கைது செய்வதையும் தொடருங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களைக் கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதித்தல், நாட்கள் சுழன்று வருதல், சிலர் சிலரை வெற்றிகொள்தல் ஆகிய மேற்கூறப்பட்டவைகள் அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அவன் நாடினால் போர் புரியாமலேயே நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியளித்திருப்பான். ஆயினும் அவன் உங்களில் சிலரை சிலரைக்கொண்டு சோதிப்பதற்காகவே போரைக் கடமையாக்கியுள்ளான். நம்பிக்கையாளர்களில் போரிடுபவர்கள் யார்? போரிடாதவர்கள் யார்? என்பதைச் சோதிப்பதற்காக. நம்பிக்கையாளனைக்கொண்டு நிராகரிப்பாளனைச் சோதிப்பதற்காக. நம்பிக்கையாளன் கொல்லப்பட்டால் அவன் சுவனம் செல்வான். அவன் நிராகரிப்பாளனைக் கொன்றால் அந்த நிராகரிப்பாளன் நரகம் செல்வான். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிடமாட்டான்.
Arabic Tafsirs:
سَیَهْدِیْهِمْ وَیُصْلِحُ بَالَهُمْ ۟ۚ
47.5. உலக வாழ்வில் அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவான். அவர்களின் விவகாரங்களைச் சீராக்குவான்.
Arabic Tafsirs:
وَیُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ ۟
47.6. மறுமையில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதன் பண்புகளை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்தியுள்ளான். எனவே அவர்கள் அதனை அறிந்துள்ளனர். அவன் அவர்களுக்கு மறுமையில் அவர்களின் வசிப்பிடங்களை அறிமுகப்படுத்திவைப்பான்.
Arabic Tafsirs:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَنْصُرُوا اللّٰهَ یَنْصُرْكُمْ وَیُثَبِّتْ اَقْدَامَكُمْ ۟
47.7. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கும் மார்க்கத்திற்கும் உதவுவதன் மூலமும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதன் மூலமும் அல்லாஹ்வுக்கு உதவிசெய்தால் அவர்களுக்கெதிராக உங்களுக்கு வெற்றியளித்து அவன் உங்களுக்கு உதவி புரிவான். போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும்போது உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான்.
Arabic Tafsirs:
وَالَّذِیْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ۟
47.8. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு இழப்பும் அழிவும்தான் உண்டு. அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை வீணாக்கிவிடுவான்.
Arabic Tafsirs:
ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟
47.9. அவர்களுக்கு ஏற்படும் இந்த வேதனைக்கான காரணம், அவர்கள் அல்லாஹ் தன் தூதர்மீது இறக்கிய குர்ஆனை அதிலுள்ள ஏகத்துவத்தின் காரணமாக வெறுத்தார்கள் என்பதுதான். அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் வீணாக்கி விட்டான். அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்துவிட்டார்கள்.
Arabic Tafsirs:
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— دَمَّرَ اللّٰهُ عَلَیْهِمْ ؗ— وَلِلْكٰفِرِیْنَ اَمْثَالُهَا ۟
47.10. இந்த பொய்ப்பிப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு வேதனைமிக்கதாகவே இருந்தது. அல்லாஹ் அவர்களின் வசிப்பிடங்களை அழித்துவிட்டான். அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் செல்வங்களையும் அழித்துவிட்டான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நிராகரிப்பாளர்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் உண்டு.
Arabic Tafsirs:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِیْنَ لَا مَوْلٰی لَهُمْ ۟۠
47.11. இரு பிரிவினருக்கும் வழங்கப்படும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த கூலிக்கான காரணம், அல்லாஹ் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு உதவிசெய்யக்கூடியவன். நிச்சயமாக நிராகரிப்பாளனுக்கு எந்த உதவியாளனும் இல்லை.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• النكاية في العدوّ بالقتل وسيلة مُثْلى لإخضاعه.
1. எதிரிகளைக் கொலை செய்து தண்டிப்பது அவர்களைப் பணிய வைப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.

• المن والفداء والقتل والاسترقاق خيارات في الإسلام للتعامل مع الأسير الكافر، يؤخذ منها ما يحقق المصلحة.
2. இலவசமாகவோ, பிணைத்தொகை பெற்றோ விடுதலை செய்தல், அடிமையாக்குதல், கொலை செய்தல் ஆகியவை கைதிகளாகப் பிடிபட்ட நிராகரிப்பாளர்களுடன் நடந்துகொள்வதற்கு இஸ்லாத்தில் உள்ள தெரிவுகளாகும். அவற்றில் நலன்பயப்பதை எடுத்துக்கொள்ளலாம்.

• عظم فضل الشهادة في سبيل الله.
3. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதன் சிறப்பு.

• نصر الله للمؤمنين مشروط بنصرهم لدينه.
4. நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் உதவி அவர்கள் அவனுடைய மார்க்கத்திற்குச் செய்யும் உதவியைப் பொறுத்தே அமையும்.

 
Translation of the Meanings Surah: Muhammad
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close