Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Ahqāf   Verse:
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ— حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ— وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ— حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ— قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ— اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
46.15. தன் பெற்றோர் வாழும் போதும் மரணித்த பின்பும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு உபகாரம் செய்யுமாறு நாம் மனிதனுக்கு கடுமையான முறையில் ஏவினோம். குறிப்பாக அவனை சிரமத்துடன் சுமந்து பெற்றெடுத்த அவனது தாயுடன். அவள் அவனை சுமந்த காலமும் பால்குடி மறக்கடிக்கும் காலமும் முப்பது மாதங்களாகும். அவன் தன்னுடைய அறிவு மற்றும் உடல் ரீதியான முழுமையான பலத்தைப் பெற நாற்பது வருடங்கள் ஆகிறது. அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என்மீதும் என் தாய், தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்கு நான் நன்றிசெலுத்துவதற்கும் நீ விரும்பும் நற்செயல்களைச் செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக. என்னிடமிருந்து அதனை ஏற்றுக்கொள்வாயாக! என் பிள்ளைகளைச் சீர்படுத்துவாயாக. நிச்சயமாக நான் என் பாவங்களிலிருந்து உன் பக்கம் மீண்டு விட்டேன். உனக்கு வழிப்பட்டு உனது கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகிவிட்டேன்.
Arabic Tafsirs:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ نَتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَتَجَاوَزُ عَنْ سَیِّاٰتِهِمْ فِیْۤ اَصْحٰبِ الْجَنَّةِ ؕ— وَعْدَ الصِّدْقِ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟
46.16. நாம் அவர்களிடமிருந்து அவர்களின் நற்செயல்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் செய்த தீய செயல்களை மன்னித்துவிடுகின்றோம். அவற்றிற்காக நாம் அவர்களைக் குற்றம் பிடிப்பதில்லை. அவர்கள்தாம் சுவனவாசிகளில் உள்ளவர்களாவர். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இந்த வாக்குறுதி உண்மையானதாகும். அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.
Arabic Tafsirs:
وَالَّذِیْ قَالَ لِوَالِدَیْهِ اُفٍّ لَّكُمَاۤ اَتَعِدٰنِنِیْۤ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِیْ ۚ— وَهُمَا یَسْتَغِیْثٰنِ اللّٰهَ وَیْلَكَ اٰمِنْ ۖۗ— اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ— فَیَقُوْلُ مَا هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
46.17. அந்த மனிதன் தன் பெற்றோரிடம் கூறினான்: “உங்கள் இருவருக்கும் கேடுதான். நான் மரணித்தபிறகு என் சவக்குழியிலிருந்து மீண்டும் வெளிப்படுத்தப்படுவேன் என்று மிரட்டுகிறீர்களா? பல தலைமுறைகள் கடந்துவிட்டன. அவற்றில் ஏராளமான மனிதர்கள் இறந்தனர். ஆனால் அவர்களில் யாரும் மீண்டும் உயிருடன் எழுப்பப்படவில்லையே!” அவனுடைய தாய், தந்தையரோ தங்கள் மகனுக்கு நம்பிக்கைகொள்வதற்கு நேர்வழிகாட்டுமாறு அல்லாஹ்விடம் உதவிதேடுகிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் மகனிடம் கூறினார்கள்: “நீ உயிர்கொடுத்து மீண்டும் எழுப்பப்படுவதன் மீது நம்பிக்கைகொள்ளவில்லையெனில் உனக்கு அழிவுதான் உண்டாகும். எனவே அதன் மீது நம்பிக்கைகொள். நிச்சயமாக மீண்டும் எழுப்பும் அல்லாஹ்வின் வாக்குறுதி எவ்வித சந்தேகமுமற்ற உண்மையாகும்.” அவன் மீண்டும் அதேபோன்று மறுத்தவனாகக் கூறினான்: “மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம் என்று கூறப்படும் விஷயம் முன்னோர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்து, எழுதப்பட்டு கூறப்பட்டதாகும். அது அல்லாஹ்விடமிருந்து உறுதியாக்கப்பட்ட ஒன்றல்ல.
Arabic Tafsirs:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ؕ— اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟
46.18. இவர்களுக்கு முன்வாழ்ந்த மனித, ஜின் சமூகங்களோடு இவர்கள் மீதும் வேதனை உறுதியாகிவிட்டது. நிச்சயமாக நரகில் நுழைவதன் மூலம் அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாக இருந்தார்கள்.
Arabic Tafsirs:
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ۚ— وَلِیُوَفِّیَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
46.19. -சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற- இருபிரிவினருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. சுவனவாசிகளின் படித்தரங்கள் உயர்ந்ததாக இருக்கும். நரகவாசிகளின் படித்தரங்கள் தாழ்ந்ததாக இருக்கும். அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை முழுமையாக வழங்கிடுவான். மறுமை நாளில் அவர்களின் நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Arabic Tafsirs:
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ— اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ— فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠
46.20. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும்போது அவர்களை இழிவுபடுத்தும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உலக வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த தூய்மையானவற்றையெல்லாம் நீங்கள் வீணடித்து அதிலுள்ள இன்பங்களை அனுபவித்தீர்கள். இன்றைய தினம் அநியாயமாக நீங்கள் பூமியில் கர்வம் கொண்டதனாலும் நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாததனாலும் உங்களை இழிவுபடுத்தும் வேதனையை உங்களுக்குக் கூலியாக வழங்கப்படும்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• بيان مكانة بِرِّ الوالدين في الإسلام، بخاصة في حق الأم، والتحذير من العقوق.
1. தாய், தந்தையருடன் குறிப்பாக தாயின் உரிமைகளில் நல்ல முறையில் நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தலும் நோவினை செய்வதை விட்டும் எச்சரித்தலும்.

• بيان خطر التوسع في ملاذّ الدنيا؛ لأنها تشغل عن الآخرة.
2. உலக இன்பங்களில் மூழ்குவதன் விபரீதத்தை விளக்குதல். ஏனெனில் அது மறுமையை விட்டும் பராமுகமாக்கிவிடும்.

• بيان الوعيد الشديد لأصحاب الكبر والفسوق.
3. கர்வம் கொள்பவர்கள் மற்றும் பாவிகளுக்கான கடுமையான எச்சரிக்கையை விளக்குதல்.

 
Translation of the Meanings Surah: Al-Ahqāf
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close