Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Az-Zukhruf   Verse:
وَالَّذِیْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ ۚ— فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ۚ— كَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟
43.11. அவன்தான் வானத்திலிருந்து உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் போதுமான அளவு நீரை இறக்கினான். அதனைக்கொண்டு தாவரங்களற்ற வறண்ட பூமியை நாம் உயிர்ப்பித்தோம். வறண்ட அந்த பூமியை தாவரத்தின் மூலம் அல்லாஹ் உயிர்ப்பித்தது போன்றே மீண்டும் எழுப்புவதற்காக உங்களை உயிர்ப்பிப்பான்.
Arabic Tafsirs:
وَالَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَ ۟ۙ
43.12. அவன்தான் இரவு, பகல் ஆண், பெண் போன்ற அனைத்து விதமான சோடிகளையும் படைத்துள்ளான். நீங்கள் பயணம் செய்வதற்காக கப்பல்களையும் கால்நடைகளையும் அவன் உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். நீங்கள் கடலில் கப்பல்களிலும் நிலத்தில் கால்நடைகளிலும் பயணம் செய்கிறீர்கள்.
Arabic Tafsirs:
لِتَسْتَوٗا عَلٰی ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَیْتُمْ عَلَیْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ
43.13. இவையனைத்தையும் அவன் உங்களுக்காக ஏற்படுத்தித் தந்துள்ளான். அது நீங்கள் அவற்றின் மீது பயணம் செய்து அவற்றின் முதுகுகளின் மேல் நீங்கள் உறுதியாக இருந்ததும் அவற்றை வசப்படுத்தித் தந்த உங்கள் இறைவனை நினைவுகூர்ந்து நாவால் பின்வருமாறு கூறுவதற்காகத்தான்: “எங்களுக்கு இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்தவன் மிகவும் தூய்மையானவன். அதனால்தான் அதனை நாம் கட்டுப்படுத்துகிறோம். அல்லாஹ் அதனை வசப்படுத்தித் தந்திராவிட்டால் நாங்கள் அதற்கு சக்திபெற்றவர்களல்ல.
Arabic Tafsirs:
وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ۟
43.14. நிச்சயமாக நாங்கள் இறந்த பிறகு விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் எங்கள் இறைவனின் பக்கம் மட்டுமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்.”
Arabic Tafsirs:
وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِیْنٌ ۟ؕ۠
43.15. “வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள்” என்று எண்ணி இணைவைப்பாளர்கள் சில படைப்புகளை அவனுக்குப் பிறந்தவை எனக்கூறினர். நிச்சயமாக இவ்வாறான வார்த்தையை கூறும் மனிதன் தெளிவான நிராகரிப்பாளனாகவும் வழிகேடனாகவும் இருக்கின்றான்.
Arabic Tafsirs:
اَمِ اتَّخَذَ مِمَّا یَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِیْنَ ۟
43.16. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் தான் படைத்தவற்றிலிருந்து பிள்ளைகளில் தனக்காக பெண் மக்களை ஆக்கிக் கொண்டு உங்களுக்காக ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்துள்ளான் என்று கூறுகிறீர்களா? நீங்கள் எண்ணும் இந்தப் பங்கீடு எவ்வகையானதோ?
Arabic Tafsirs:
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟
43.17. தனது இறைவனுக்கு உண்டென்று இவர்கள் இணைத்துக் கூறும் பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் யாருக்காவது நற்செய்தி கூறப்பட்டால் கடுமையான கவலையினாலும் துக்கத்தினாலும் அவனது முகம் கருத்துவிடுகிறது. அவனுக்கு கோபம் பொங்குகிறது. நன்மாராயம் கூறப்படும் போது தனக்குக் கவலையளிக்கும் ஒன்றை எவ்வாறு அவன் தன் இறைவனுடன் இணைத்துக் கூற முடியும்?
Arabic Tafsirs:
اَوَمَنْ یُّنَشَّؤُا فِی الْحِلْیَةِ وَهُوَ فِی الْخِصَامِ غَیْرُ مُبِیْنٍ ۟
43.18. அலங்காரத்தில் வளர்க்கப்பட்டு விவாதத்தில் பெண்மையின் காரணத்தால் வாதத்தில் தெளிவாக வாதாட முடியாதவர்களையா இவர்கள் தங்கள் இறைவனுடன் இணைத்துக் கூறுகிறார்கள்?
Arabic Tafsirs:
وَجَعَلُوا الْمَلٰٓىِٕكَةَ الَّذِیْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ— اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ— سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَیُسْـَٔلُوْنَ ۟
43.19. அளவிலாக் கருணையாளனின் அடியார்களான வானவர்களை அவர்கள் பெண்களாக பெயர்சூட்டி விட்டார்கள். அல்லாஹ் அந்த வானவர்களைப் படைத்தபோது இவர்கள் அங்கு இருந்து, நிச்சயமாக அவர்கள் பெண்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்களா? வானவர்கள் அவர்களின் இந்த சாட்சியத்தை பதிவுசெய்வார்கள். மறுமை நாளில் அதுகுறித்து அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் பொய்யுரைத்ததனால் அதன் மூலம் அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
Arabic Tafsirs:
وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ؕ— مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۗ— اِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟ؕ
43.20. அவர்கள் விதியை ஆதாரமாகக் காட்டி கூறுகிறார்கள்: “நாங்கள் வானவர்களை வணங்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம். நாம் அவ்வாறு செய்வதை அவன் நாடியிருப்பது அவனது விருப்பத்தின் அடையாளமாகும்.” இவ்வாறு கூறும் அவர்களிடம் எந்த அறிவும் இல்லை. அவர்கள் பொய்தான் கூறுகிறார்கள்.
Arabic Tafsirs:
اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ۟
43.21. அல்லது நாம் இந்த இணைவைப்பாளர்களுக்கு குர்ஆனுக்கு முன்னர் ஒரு வேதம் வழங்கி அதில் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை வணங்குவதற்கு ஆகுமாக்கியுள்ளோமா? அந்த வேதத்தை அவர்கள் உறுதியாக பற்றிக் கொண்டு அதனை ஆதாரமாக முன்வைக்கின்றார்களா?
Arabic Tafsirs:
بَلْ قَالُوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ۟
43.22. இல்லை. அவ்வாறு நிகழவேயில்லை. மாறாக அவர்கள் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை ஆதாரமாகக் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் முன்னோர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம். அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தார்கள். நிச்சயமாக நாங்களும் அவற்றை வணங்குவதில் அவர்களின் அடிச்சுவட்டையே பின்பற்றுகிறோம்.”
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• كل نعمة تقتضي شكرًا.
1. அருட்கொடைகள் ஒவ்வொன்றும் நன்றிசெலுத்துவதை வலியுறுத்துகின்றன.

• جور المشركين في تصوراتهم عن ربهم حين نسبوا الإناث إليه، وكَرِهوهنّ لأنفسهم.
2. இணைவைப்பாளர்கள் தாங்கள் வெறுக்கும் பெண்மக்களை தனது இறைவனுக்கு இணைத்து இறைவன் பற்றிய தமது சிந்தனையில் அநீதியிழைத்துள்ளனர்.

• بطلان الاحتجاج على المعاصي بالقدر.
3. பாவங்கள் புரிபவர்கள் விதியைக் காரணமாகக் காட்டி வாதிடுவது தவறாகும்.

• المشاهدة أحد الأسس لإثبات الحقائق.
4. நேரில் பார்த்தல் உண்மையை நிரூபிப்பதற்கான அடிப்படைகளில் ஒன்றாகும்.

 
Translation of the Meanings Surah: Az-Zukhruf
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close