Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Fussilat   Verse:
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ— قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
41.21. நிராகரிப்பாளர்கள் தங்களின் தோல்களிடம் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக நாங்கள் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து ஏன் சாட்சி கூறினீர்கள்?” தோல்கள் கூறும்: “எல்லா பொருள்களையும் பேச வைத்தவன்தான் எங்களையும் பேச வைத்தான். அவன்தான் முதன்முதலாக உங்களைப் படைத்தான். மறுமைநாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
Arabic Tafsirs:
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟
41.22. உங்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சி கூறாமலிருப்பதற்கு நீங்கள் பாவங்கள் செய்துகொண்டிருந்தபோது அவைகளுக்குத் தெரியாமல் மறைந்து செய்யவில்லை. ஏனெனில் மரணத்திற்குப் பின் விசாரணை செய்யப்பட்டு கூலி வழங்கப்படுவதையோ தண்டனை வழங்கப்படுவதையோ நீங்கள் நம்பாமல் இருந்தீர்கள். மாறாக நீங்கள் செய்யக்கூடியவற்றில் பலதை அல்லாஹ் அறியமாட்டான், அது அவனை விட்டும் மறைந்துவிடும் என்று எண்ணினீர்கள். அதனால் ஏமாற்றமடைந்தீர்கள்.
Arabic Tafsirs:
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
41.23. உங்கள் இறைவனைக் குறித்து நீங்கள் கொண்ட அத்தீய எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. இதன் காரணமாக நீங்கள் இவ்வுலகையும் மறுவுலகையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்.
Arabic Tafsirs:
فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ؕ— وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟
41.24. யாருக்கு எதிராக அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் சாட்சி கூறியதோ அவர்கள் பொறுமையாக இருந்தாலும் நரகமே அவர்களின் தங்குமிடமாகும், ஒதுங்குமிடமுமாகும். தண்டனையை அகற்றி அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் என நாடினாலும் அவனது திருப்தியை அவர்கள் பெறவோ சுவனத்தில் நுழையவோமாட்டார்கள்.
Arabic Tafsirs:
وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ— اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠
41.25. இந்த நிராகரிப்பாளர்களின் மீது எப்போதும் அவர்களுடனேயே இருக்க ஷைத்தானியத் தோழர்களை தயார்படுத்தியுள்ளோம். உலகில் அவர்களின் தீய செயல்களையும் அவர்களுக்குப் பின்னாலுள்ள மறுமையின் விடயத்தையும் இவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுகிறார்கள். மறுமை நாளை நினைவுபடுத்தாமலும் அதற்காக அமல்கள் செய்யாமலும் அவர்களை மறக்கடிக்கச் செய்வார்கள். முன்சென்ற மனித, ஜின்களின் மீது உறுதியான அதே வேதனை இவர்களின் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக அவர்கள் நரகில் நுழைந்து மறுமை நாளில் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாகிவிடுவார்கள்.
Arabic Tafsirs:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟
41.26. ஆதாரத்தை ஆதாரத்தால் எதிர்கொள்ள முடியாமல் போனபோது நிராகரிப்பாளர்கள் தங்களிடையே உபதேசித்தவர்களாகக் கூறினார்கள்: “முஹம்மது உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். அதிலுள்ளவற்றிற்குக் கட்டுப்படாதீர். நீங்கள் மிகைக்கும்பொருட்டு, அவர் அதனை ஓதும்போது கூச்சலிடுங்கள். அதனால் அதனை ஓதுவதையும் அதன் பக்கம் அழைப்பதையும் அவர் விட்டுவிடுவார். நாம் அவரிலிருந்து விடுதலை பெறலாம்.
Arabic Tafsirs:
فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
41.27. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பிப்பவர்களை நாம் மறுமை நாளில் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்குத் தண்டனையாக மிக மோசமாக கூலியை நிச்சயம் நாம் வழங்கிடுவோம்.
Arabic Tafsirs:
ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ— لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ— جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
41.28. மேற்கூறப்பட்டதுதான் அல்லாஹ்வை நிராகரித்த, தூதர்களை பொய்ப்பித்த அவனுடைய எதிரிகளுக்கு வழங்கப்படும் கூலியாகும். அது நரகமாகும். அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்ததற்கும் தெளிவான பலமான அவனது அத்தாட்சிகளை நம்பிக்கைகொள்ளாததற்கும் கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.
Arabic Tafsirs:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟
41.29. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! மனிதர்கள் மற்றும் ஜின்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காட்டுவாயாக. (இப்லீஸ்: இவன்தான் நிராகரிப்பை முதன்முதலில் தொடங்கி அதற்கு அழைப்பு விடுத்தவன். ஆதமின் மகன்: இவன்தான் கொலை செய்வதை முதலில் ஆரம்பித்தவன்) நரகவாசிகளில் கடும் வேதனையை அனுபவித்து தாழ்ந்தவர்களாகும் பொருட்டு அவர்கள் இருவரையும் எங்கள் பாதங்களுக்குக் கீழே வைத்து நசுக்கி விடுகின்றோம்.”
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• سوء الظن بالله صفة من صفات الكفار.
1. அல்லாஹ்வைக் குறித்து தீய எண்ணம் கொள்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

• الكفر والمعاصي سبب تسليط الشياطين على الإنسان.
2. நிராகரிப்பும் பாவங்களும் மனிதர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணமாகும்.

• تمنّي الأتباع أن ينال متبوعوهم أشدّ العذاب يوم القيامة.
3. தலைவர்களைப் பின்பற்றிய தொண்டர்கள் மறுமை நாளில் தங்களின் தலைவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள்.

 
Translation of the Meanings Surah: Fussilat
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close