Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Ghāfir   Verse:
اَلْیَوْمَ تُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ؕ— لَا ظُلْمَ الْیَوْمَ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
40.17. இன்று ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். நலவிற்கு நலவும் தீங்கிற்கு தீமையும் கிடைக்கும். இன்றைய நாளில் எந்த அநீதியும் இழைக்கப்படாது. ஏனெனில் நிச்சயமாக தீர்ப்பளிப்பவன் நீதிபதியாகிய நீதியாளனான அல்லாஹ் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைக் குறித்து சூழ்ந்தறிந்துள்ளதால் அவர்களை விசாரணை செய்வதில் விரைவானவன்.
Arabic Tafsirs:
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَی الْحَنَاجِرِ كٰظِمِیْنَ ؕ۬— مَا لِلظّٰلِمِیْنَ مِنْ حَمِیْمٍ وَّلَا شَفِیْعٍ یُّطَاعُ ۟ؕ
40.18. -தூதரே!- மறுமை நாளைக் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த மறுமை நாள் நெருங்கிவிட்டது. அது வந்தே தீரும். வர இருக்கும் அனைத்தும் அண்மையிலேதான் உள்ளன. அந்த நாளின் பயங்கரத்தால் இதயங்கள் அவர்களின் தொண்டைக்குழியை அடைந்துவிடுமளவுக்கு மேலெழும்பும். அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்தானோ அவர்களைத் தவிர யாராலும் அந்நாளில் பேச முடியாது. இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டவர்களுக்கு நண்பரோ, உறவினரோ, பரிந்துரையாளர் அவருக்காக பரிந்து பேச ஏற்படுத்தப்பட்டாலும் பரிந்துரை பேசக்கூடியவரோ இருக்க மாட்டார்.
Arabic Tafsirs:
یَعْلَمُ خَآىِٕنَةَ الْاَعْیُنِ وَمَا تُخْفِی الصُّدُوْرُ ۟
40.19. அல்லாஹ், பார்ப்பவர்களின் கண்களை விட்டும் மறைவாகச் செய்யும் திருட்டுத்தனங்களையும் உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
وَاللّٰهُ یَقْضِیْ بِالْحَقِّ ؕ— وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَقْضُوْنَ بِشَیْءٍ ؕ— اِنَّ اللّٰهَ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟۠
40.20. அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பவன். நன்மைகளைக் குறைத்தோ, தீமைகளை அதிகரித்தோ எவர் மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அல்லாஹ்வைவிடுத்து இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் எந்த தீர்ப்பும் அளிக்காது. ஏனெனில் நிச்சயமாக அவை எதற்கும் உரிமையற்றவை. நிச்சயமாக அவன் தன் அடியார்களின் வார்த்தைகளை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் பார்க்கக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ؕ— كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ— وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
40.21. இந்த இணைவைப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அந்த சமூகங்கள் இவர்களைவிட பலம்மிக்கவையாகவும் பூமியில் கட்டடங்களைக்கொண்டு அடையாளங்களை விட்டுச் சென்றவையாகவும் இருந்தன. இவர்களோ எந்த ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களை தடுக்கும் எவரும் இருக்கவில்லை.
Arabic Tafsirs:
ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ؕ— اِنَّهٗ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
40.22. அவர்களுக்கு ஏற்பட்ட அந்த தண்டனை, அல்லாஹ்விடமிருந்து தெளிவான ஆதாரங்களோடும் சான்றுகளோடும் தங்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்ததனாலாகும். அவர்கள் பலமானவர்களாக இருந்தபோதும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். நிச்சயமாக அவன் தன்னை நிராகரித்து தன் தூதர்களை பொய்ப்பிப்பவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன், வலிமை மிக்கவன்.
Arabic Tafsirs:
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
40.23. தனது சமூகத்தின் பொய்ப்பிப்பை நபியவர்கள் சந்தித்த போது அவரது பணியின் முடிவு வெற்றியே என்ற நற்செய்தியை அளிக்கும் பொருட்டு ஃபிர்அவ்னுடன் மூஸாவுக்கு நிகழ்ந்த சம்பவத்தை குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நாம் மூஸாவை நம்முடைய தெளிவான சான்றுகளுடனும் உறுதியான ஆதாரத்துடனும் திட்டமாக நாம் அனுப்பினோம்.
Arabic Tafsirs:
اِلٰی فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ۟
40.24. ஃபிர்அவ்ன், அவனது அமைச்சர் ஹாமான் மற்றும் காரூனின் பக்கம் (அனுப்பினோம்). அவர்கள் கூறினார்கள்: “மூஸா ஒரு சூனியக்காரர், மேலும் தான் தூதர் என்ற வாதிடுவதில் பொய் கூறுபவர் .”
Arabic Tafsirs:
فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْیُوْا نِسَآءَهُمْ ؕ— وَمَا كَیْدُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
40.25. தாம் உண்மையாளர் என்று அறிவிக்கக்கூடிய ஆதாரத்தோடு மூஸா அவர்களிடம் வந்தபோது ஃபிர்அவ்ன் கூறினான்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண்மக்களை கொன்றுவிடுங்கள். அவர்களை இழிவுபடுத்தும்பொருட்டு அவர்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவிடுங்கள். நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு ஏவி நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சி எவ்வித அடையாளமுமின்றி அழிந்துவிடும்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• التذكير بيوم القيامة من أعظم الروادع عن المعاصي.
1. மறுமை நாளை ஞாபகமூட்டுவது பாவங்களை விட்டும் தடுக்கும் மிகப்பெரும் எச்சரிக்கையாகும்.

• إحاطة علم الله بأعمال عباده؛ خَفِيَّة كانت أم ظاهرة.
2. தன் அடியார்களின் செயல்கள் வெளிப்படையாக இருந்தாலும் மறைமுகமாக இருந்தாலும் அல்லாஹ்வின் அறிவு அவற்றைச் சூழ்ந்துள்ளது.

• الأمر بالسير في الأرض للاتعاظ بحال المشركين الذين أهلكوا.
3.அழிக்கப்பட்ட இணைவைப்பாளர்களின் முடிவைக் கொண்டு படிப்பினை பெறுவதற்காக பூமியில் பிரயாணம் செய்யுமாறு கட்டளையிடல்.

 
Translation of the Meanings Surah: Ghāfir
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close