Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: An-Nisā’   Verse:
وَّاسْتَغْفِرِ اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
4.106. அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருவீராக. தன்னிடம் மன்னிப்புக்கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Arabic Tafsirs:
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِیْنَ یَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِیْمًا ۟ۚۙ
4.107. தனது மோசடியை மறைப்பதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் எந்த ஒருவருக்காகவும் நீர் வாதிடவேண்டாம். பாவிகளான பெரும் மோசடிக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
Arabic Tafsirs:
یَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا یَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ یُبَیِّتُوْنَ مَا لَا یَرْضٰی مِنَ الْقَوْلِ ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطًا ۟
4.108. அவர்கள் பாவமான காரியங்களில் ஈடுபடும்போது மக்களுக்குப் பயந்து, வெட்கத்தால் மறைந்துகொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வை விட்டும் மறைந்துகொள்வதில்லை. அவன் அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ளான். தவறிழைத்தவனைக் காப்பாற்றி நிரபாராதியை சந்தேகிப்பது போன்ற அவனுக்கு விருப்பமில்லாததை அவர்கள் மறைவாகத் திட்டமிட்டுச் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்தறிந்தவனாகவே இருக்கிறான். எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ جَدَلْتُمْ عَنْهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۫— فَمَنْ یُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ یَوْمَ الْقِیٰمَةِ اَمْ مَّنْ یَّكُوْنُ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
109. பாவங்களில் ஈடுபடுவோரான இவர்களது விடயத்தில் கரிசனை செலுத்துவோரே! இவர்களைக் குற்றமற்றவர்கள் என்று உலகவாழ்க்கையில் நிரூபித்து தண்டனையிலிருந்து காப்பதற்காக நீங்கள் வாதாடுகிறீர்கள். மறுமைநாளில் இவர்களின் உண்மைநிலை வெளிப்பட்டுவிடும்போது இவர்களுக்காக யார் வாதாடுவார்கள்? அந்த நாளில் இவர்களுக்குப் பொறுப்பாளன் யார்? சந்தேகமின்றி எவரும் இதற்குச் சக்திபெற மாட்டார்கள்.
Arabic Tafsirs:
وَمَنْ یَّعْمَلْ سُوْٓءًا اَوْ یَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ یَسْتَغْفِرِ اللّٰهَ یَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
4.110. யார் தீய செயல் செய்கிறாரோ அல்லது பாவங்களைச் சம்பாதித்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறாரோ பின்னர் அவர் அல்லாஹ்விடம் தம் பாவங்களை ஒத்துக்கொண்டு அதற்காக கைசேதப்பட்டு, அவற்றை அடியோடு விட்டுவிட்டு அவனிடம் மன்னிப்புக் கோரினால் அவர் எப்பொழுதுமே அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் அவரது விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் காண்பார்.
Arabic Tafsirs:
وَمَنْ یَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا یَكْسِبُهٗ عَلٰی نَفْسِهٖ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.111. சிறு பாவத்திலோ பெரும் பாவத்திலோ ஈடுபடுபவர் மட்டுமே அதற்குரிய தண்டனையைப் பெறுவார். அது மற்றவர்களைப் பாதிக்காது. அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும், அவன் ஞானம்மிக்கவன்.
Arabic Tafsirs:
وَمَنْ یَّكْسِبْ خَطِیْٓئَةً اَوْ اِثْمًا ثُمَّ یَرْمِ بِهٖ بَرِیْٓـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
4.112. கவனக்குறைவினால் ஒரு தவறையோ வேண்டுமென்று ஒரு பாவத்தையோ செய்துவிட்டு அதன் பழியை குற்றமற்ற அப்பாவியின்மீது சுமத்திவிடுபவர் தனது இந்த செயலால் பெரும் பொய்யையும் தெளிவான பாவத்தையுமே சுமந்துகொண்டார்.
Arabic Tafsirs:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ یُّضِلُّوْكَ ؕ— وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَضُرُّوْنَكَ مِنْ شَیْءٍ ؕ— وَاَنْزَلَ اللّٰهُ عَلَیْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ؕ— وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَیْكَ عَظِیْمًا ۟
4.113. தூதரே! அல்லாஹ் உம்மைப் பாதுகாத்து அருள் புரியவில்லையென்றால் தமக்குத் தாமே துரோகமிழைக்கும் இவர்களில் ஒரு கூட்டத்தினர் சரியான தீர்ப்பை விட்டும் உம்மை வழிகெடுக்க முடிவுசெய்து, நீரும் நியாயமின்றி தீர்ப்பளித்திருப்பீர். உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே வழிகெடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் செயல்களின் விளைவு அவர்களின் பக்கமே திரும்பும். உமக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பிருப்பதால் அவர்களால் உமக்கு எந்தத்தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உம்மீது குர்ஆனையும், சுன்னாவையும் இறக்கியுள்ளான். இதற்கு முன்னர் நீர் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத் தந்துள்ளான். நபித்துவம் மற்றும் தவறிலிருந்து பாதுகாப்பு என்பவற்றின் மூலம் அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடை மகத்தானது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• النهي عن المدافعة والمخاصمة عن المبطلين؛ لأن ذلك من التعاون على الإثم والعدوان.
1. அசத்தியவாதிகளைப் பாதுகாப்பதற்காக வாதிடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது பாவத்திற்கும் அநியாயத்திற்கும் துணைபோவதாகும்.

• ينبغي للمؤمن الحق أن يكون خوفه من الله وتعظيمه والحياء منه فوق كل أحد من الناس.
2. உண்மையான நம்பிக்கையாளன் அனைத்து மக்களை விடவும் அல்லாஹ்வையே அதிகம் அஞ்சவும், கண்ணியப்படுத்தவும், வெட்கப்படவும் வேண்டும்.

• سعة رحمة الله ومغفرته لمن ظلم نفسه، مهما كان ظلمه إذا صدق في توبته، ورجع عن ذنبه.
3. தனக்குத்தானே அநியாயமிழைத்துக்கொண்டவர் அவர் செய்த அநீதி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தான் செய்த செயல்களுக்கு உண்மையாகவே மன்னிப்புக் கோரி தனது தவறிலிருந்து மீண்டுவிட்டால் அவருக்கும் அல்லாஹ்வின் விசாலமான அருளும் மன்னிப்யும் உண்டு.

• التحذير من اتهام البريء وقذفه بما لم يكن منه؛ وأنَّ فاعل ذلك قد وقع في أشد الكذب والإثم.
4. குற்றமற்ற அப்பாவியைச் சந்தேகித்து அவர்செய்யாததை அவர் மீது அவதூறு கூறுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவ்வாறு செய்பவர் பெரும் பொய்யிலும் பாவத்திலுமே வீழ்ந்துவிடுகிறார்.

 
Translation of the Meanings Surah: An-Nisā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close