Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Ahzāb   Verse:
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪— وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
33.7. -தூதரே!- நாம் தூதர்களிடம், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது; அவர்கள் மீது இறக்கப்பட்ட வஹியை எடுத்துரைத்துவிட வேண்டும் என்று நாம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்களிலும் குறிப்பாக உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றும்படி நாம் அவர்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கினோம்.
Arabic Tafsirs:
لِّیَسْـَٔلَ الصّٰدِقِیْنَ عَنْ صِدْقِهِمْ ۚ— وَاَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟۠
33.8. அல்லாஹ் தூதர்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குறுதி வாங்கியதற்கான காரணம், நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்தும் விதமாக உண்மையான தூதர்களிடம் அவர்களின் உண்மையை விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னையும் தன் தூதர்களையும் நிராகரிப்பவர்களுக்கு மறுமை நாளில் நரக நெருப்பு என்னும் வேதனை மிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான்.
Arabic Tafsirs:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ
33.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். உங்களுடன் போரிடுவதற்காக நிராகரிப்பாளர்களின் படையினர் ஒன்று சேர்ந்து மதீனா வந்தபோது நயவஞ்சகர்களும் யூதர்களுக்கும் அவர்களுக்குத் துணைநின்றார்கள். நாம் அவர்களுக்கு எதிராக காற்றையும் நீங்கள் காணாத வானவர்கள் படையையும் அனுப்பிகோம். நிராகரிப்பாளர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَنَاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ۟ؕ
33.10. நிராகரிப்பாளர்கள் பள்ளத்தாக்கின் மேற்புறமிருந்தும் அதன் கீழ்ப்புறமிருந்து கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் வழியாகவும் உங்களிடம் வந்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதிரிகளின் மீது பார்வை குவிந்து பயத்தினால் இதயங்கள் தொண்டைக்குழியை அடைந்துவிட்டன. நீங்கள் அல்லாஹ்வைக்குறித்து விதவிதமான எண்ணங்கள் கொண்டிருந்தீர்கள். சில சமயங்களில் அவன் உதவி புரிவான் என்று எண்ணினீர்கள். சில சமயங்களில் அவனிடமிருந்து நிராசையை எண்ணினீர்கள்.
Arabic Tafsirs:
هُنَالِكَ ابْتُلِیَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِیْدًا ۟
33.11. அகழிப் போரின் இந்த சமயத்தில் நம்பிக்கையாளர்கள் அவர்கள் எதிர்கொண்ட எதிரிகளின் தாக்குதல்களால் சோதிக்கப்பட்டார்கள். கடும் பயத்தினால் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள். இந்த சோதனையினால் நம்பிக்கையாளனும் நயவஞ்சகர்களும் தெளிவாகிவிட்டார்கள்.
Arabic Tafsirs:
وَاِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا ۟
33.12. அப்போது நயவஞ்சகர்களும் உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருந்த பலவீனமான நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எதிரிகளுக்கு எதிராக உதவி செய்து பூமியில் அதிகாரம் அளிப்பேன்” என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அளித்த வாக்குறுதி அடிப்படையற்ற பொய்யேயாகும்.
Arabic Tafsirs:
وَاِذْ قَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ یٰۤاَهْلَ یَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ— وَیَسْتَاْذِنُ فَرِیْقٌ مِّنْهُمُ النَّبِیَّ یَقُوْلُوْنَ اِنَّ بُیُوْتَنَا عَوْرَةٌ ۛؕ— وَمَا هِیَ بِعَوْرَةٍ ۛۚ— اِنْ یُّرِیْدُوْنَ اِلَّا فِرَارًا ۟
33.13. -தூதரே!- நயவஞ்சகர்களில் ஒருபிரிவினர் மதீனாவாசிகளிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “யஸ்ரிப்வாசிகளே! (இஸ்லாத்திற்கு முன் மதீனாவின் பெயர்) அகழிக்கு அருகில் ஸல்உ என்ற மலையில் நீங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே உங்களின் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்.” அவர்களில் ஒரு பிரிவினர் தூதரிடம், தங்களின் வீடுகள் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்று கூறி தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதி கோரினார்கள். அவர்கள் கூறியவாறு அவர்களுடைய வீடுகள் எதிரிகளுக்காக திறந்திருக்கவில்லை. நிச்சயமாக இவ்வாறு பொய்யான சாக்குப்போக்குக் கூறி அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்ல விரும்புகிறார்கள்.
Arabic Tafsirs:
وَلَوْ دُخِلَتْ عَلَیْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُىِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا یَسِیْرًا ۟
33.14. எதிரிகள் அனைத்து திசைகளிலிருந்தும் மதீனாவில் நுழைந்து அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவதன் பக்கமும் திரும்பிவிடுமாறு அவர்களிடம் கூறினால் அதனைச் செய்துவிடுவார்கள். குறைவானவர்களைத் தவிர எவரும் மதம் மாறி நிராகரிப்பை நோக்கி மீண்டு செல்லாமல் இருக்கமாட்டார்கள்.
Arabic Tafsirs:
وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا یُوَلُّوْنَ الْاَدْبَارَ ؕ— وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا ۟
33.15. இந்த நயவஞ்சகர்கள் உஹதுப் போரில் பின்வாங்கி ஓடிய பிறகு, இனி நாங்கள் எதிரிகளுடன் போரிட்டால் உறுதியாக நின்று போர் புரிவோம். ஒருபோதும் பயந்து பின்வாங்கி ஓடிவிட மாட்டோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தார்கள். ஆயினும் அவர்கள் வாக்குறுதியை மீறினார்கள். அடியான் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதி குறித்து கேட்கப்படக்கூடியவனாக இருக்கின்றான். அது குறித்து அவன் விசாரணை செய்யப்படுவான்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• منزلة أولي العزم من الرسل.
1. உறுதிமிக்க தூதர்களின் அந்தஸ்து தெளிவாகிறது.

• تأييد الله لعباده المؤمنين عند نزول الشدائد.
2. கஷ்டங்களின்போது அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களுக்கு உதவிபுரிகிறான்.

• خذلان المنافقين للمؤمنين في المحن.
3. சோதனைகளின் போது நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களைக் கைவிடுதல்.

 
Translation of the Meanings Surah: Al-Ahzāb
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close