Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: As-Sajdah   Verse:
وَلَوْ تَرٰۤی اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ ؕ— رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ ۟
32.12. பின்பு மறுமை நாளில் குற்றவாளிகள் மறுமையை நிராகரித்ததனால் இழிவடைந்தவர்களாக தங்களின் தலைகளைத் தாழ்த்தியவர்களாக காணப்படுவார்கள். அவர்கள் தாங்கள் இழிவடைந்துவிட்டதாக உணந்து, கூறுவார்கள்: “நாங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாளை கண்டு கொண்டோம். உன்னிடமிருந்து வந்த தூதர்கள் கூறியதன் உண்மையே என்பதையும் செவியேற்றோம். எனவே நாங்கள் உனக்கு விருப்பமான நற்செயல்கள் புரிவதற்கு மீண்டும் எங்களை உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்புவாயாக. நிச்சயமாக தற்போது மறுமை நாளையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” நீர் குற்றவாளிகளை இந்த நிலையில் கண்டால் மிகப் பெரும் விஷயத்தைக் கண்டவராவீர்.
Arabic Tafsirs:
وَلَوْ شِئْنَا لَاٰتَیْنَا كُلَّ نَفْسٍ هُدٰىهَا وَلٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّیْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
32.13. நாம் ஒவ்வொருவருக்கும் நேர்வழியளிக்க நாடியிருந்தால் நேர்வழி அளித்திருப்போம். ஆயினும், “மறுமை நாளில் மனித, ஜின் இனத்தாரில் நிராகரித்தவர்களைக்கொண்டு நரகத்தை நிரப்புவேன்” என்ற நீதிமிக்க, மதிநுட்பம் நிறைந்த என் வாக்கு உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை, நேரான பாதையை விட்டும் நிராகரிப்பு, வழிகேட்டின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
Arabic Tafsirs:
فَذُوْقُوْا بِمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ۚ— اِنَّا نَسِیْنٰكُمْ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
32.14. அவர்களை கண்டிக்கும் விதமாக மறுமை நாளில் அவர்களிடம் கூறப்படும்: “மறுமை நாளில் விசாரணைக்காக அல்லாஹ்வை சந்திப்பதை மறந்து உலக வாழ்வில் அலட்சியமாக இருந்ததனால் வேதனையைச் சுவையுங்கள். வேதனையை நீங்கள் அனுபவிப்பதைப் பொருட்படுத்தாமல் அதில் நிச்சயமாக நாம் உங்களை விட்டுவிட்டோம். உலகில் நீங்கள் பாவங்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக என்றும் முடிவடையாத நிரந்தர நரக வேதனையை அனுபவியுங்கள்.”
Arabic Tafsirs:
اِنَّمَا یُؤْمِنُ بِاٰیٰتِنَا الَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
32.15. நாம் நம் தூதர் மீது இறக்கிய வசனங்களை நம்பிக்கைகொள்பவர்கள் யாரெனில் அவற்றின் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக தஸ்பீஹ் செய்து அவனுக்குச் சிரம்பணிபவர்களே. அவர்கள் அவனை வணங்குவதிலிருந்தோ, அவனுக்குச் சிரம்பணிவதிலிருந்தோ எந்நிலையிலும் கர்வம் கொள்வதில்லை.
Arabic Tafsirs:
تَتَجَافٰی جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ یَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا ؗ— وَّمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
32.16. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் படுக்கையிலிருந்து அவர்களின் விலாப்புறங்கள் விலகிவிடும். அவற்றை விட்டுவிட்டு, அல்லாஹ்விடம் திரும்புவார்கள். அல்லாஹ்வின் வேதனைக்கு அஞ்சியவர்களாக அவனுடைய அருளில் ஆர்வம் கொண்டவர்களாக தமது தொழுகையிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறார்கள்.
Arabic Tafsirs:
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍ ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
32.17. அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள கண்குளிர்ச்சி மிக்கவைகளை எவரும் அறிய மாட்டார்கள். அதன் மகத்துவத்தினால் அது அல்லாஹ் மட்டுமே அறிந்த கூலியாகும்.
Arabic Tafsirs:
اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا ؔؕ— لَا یَسْتَوٗنَ ۟
32.18. யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருக்கின்றாரோ அவர் அவனுக்குக் கட்டுப்படாதவரைப் போன்றவர் அல்ல. இரு பிரிவினரும் அல்லாஹ்விடம் கூலியில் சமமாக மாட்டார்கள்.
Arabic Tafsirs:
اَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰی ؗ— نُزُلًا بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
32.19. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்குத் தயார் செய்யப்பட்ட கூலி சுவனங்களாகும். அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்குக் கூலியாக அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் சங்கையாக அவற்றில் அவர்கள் தங்கியிருப்பார்கள்.
Arabic Tafsirs:
وَاَمَّا الَّذِیْنَ فَسَقُوْا فَمَاْوٰىهُمُ النَّارُ ؕ— كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِیْدُوْا فِیْهَا وَقِیْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟
32.20. அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து அவனுக்கு அடிபணியாதவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மறுமை நாளில் அவர்களுக்காகவே தயார் செய்யப்பட்டதாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற நாடும்போதெல்லாம் மீண்டும் அதன் பக்கமே திருப்பப்படுவார்கள். அவர்களிடம் கண்டிக்கும் விதத்தில் கூறப்படும்: “உலகில் தூதர்கள் வந்து உங்களை எச்சரித்த போது நீங்கள் பொய்பித்த நரக வேதனையை அனுபவியுங்கள்.”
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• إيمان الكفار يوم القيامة لا ينفعهم؛ لأنها دار جزاء لا دار عمل.
1. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கைகொள்வதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஏனெனில் அது கூலி கொடுக்கப்படும் இடமே அன்றி செயல்படும் களம் அல்ல.

• خطر الغفلة عن لقاء الله يوم القيامة.
2. மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திப்பதைவிட்டும் அலட்சியமாக இருப்பதால் ஏற்படும் விபரீதம்.

• مِن هدي المؤمنين قيام الليل.
3. இரவில் நின்று வணங்குவது நம்பிக்கையாளர்களின் வழிகாட்டலில் உள்ளதாகும்.

 
Translation of the Meanings Surah: As-Sajdah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close