Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Ar-Rūm   Verse:
وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِیْبِیْنَ اِلَیْهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ
30.33. நோயினாலோ, வறுமையினாலோ, வரட்சியினாலோ இணைவைப்பாளர்களை ஏதேனும் துன்பம் தாக்கிவிட்டால் தங்களின் துன்பத்தைப் போக்குமாறு தம் இறைவனிடம் மட்டுமே மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்கிறார்கள். பின்பு அவர்களின் மீது அவன் கருணை காட்டி அவர்களின் துன்பத்தைப் போக்கிவிட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் பிரார்த்தனையில் அல்லாஹ்வுக்கு மீண்டும் இணைகளை ஏற்படுத்துவதில் மீண்டு விடுகிறார்கள்.
Arabic Tafsirs:
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ— فَتَمَتَّعُوْا ۥ— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
30.34. -துன்பத்தை அகற்றுதல் உட்பட- அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் மறுத்து இவ்வுலகில் தங்களிடம் இருக்கின்றவற்றை அனுபவித்தால் நிச்சயமாக விரைவில் மறுமை நாளில் தாங்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம் என்பதை தங்களின் கண்களால் கண்டுகொள்வார்கள்.
Arabic Tafsirs:
اَمْ اَنْزَلْنَا عَلَیْهِمْ سُلْطٰنًا فَهُوَ یَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ یُشْرِكُوْنَ ۟
30.35. அவர்களிடம் எந்த ஆதாரமும் இன்றி அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு அவர்களைத் தூண்டியது என்ன? அவர்களது இணைவைப்புக்கு ஆதாரமாகக் கொள்ளும் எந்தவொரு வேதத்தையும் ஆதாரமாக நாம் இறக்கி வைக்கவில்லை. அவர்களின் இணைவைப்பைக் கூறும், அவர்களின் இருந்து கொண்டிருக்கும் நிராகரிப்பை சரியென்று ஏற்றுக்கொள்ளும் எந்த வேதமும் அவர்களிடம் இல்லை.
Arabic Tafsirs:
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا ؕ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ اِذَا هُمْ یَقْنَطُوْنَ ۟
30.36. ஆரோக்கியம், வசதி போன்ற நமது அருட்கொடைகளில் நாம் ஏதேனும் அருட்கொடையை மனிதர்களுக்கு சுவைக்கச் செய்தால் அவர்கள் பூரிப்படைகிறார்கள்; அதனைக் கொண்டு பெருமையடிக்கிறார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக நோய், வறுமை ஆகிய அவர்களைக் கவலையூட்டும் ஏதேனும் துன்பம் அவர்களை வந்தடைந்தால் அல்லாஹ்வின் அருளை விட்டும் விரக்தியடைந்து விடுகிறார்கள். அவர்களைத் தாக்கிய துன்பம் நீங்கிவிடாது என்று நம்பிக்கையிழந்துவிடுகிறார்கள்.
Arabic Tafsirs:
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
30.37. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியான் நன்றி செலுத்துகிறானா? நன்றி மறக்கிறானா? என்பதைச் சோதிக்கும் பொருட்டு தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குவதையும், அடியான் பொறுமையாக இருக்கிறானா? கோபப்படுகிறானா? என்பதைச் சோதிக்கும் பொருட்டு தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக சிலருக்கு தாராளமாக வழங்கப்படுவதிலும் சிலருக்கு நெருக்கடி அளிக்கப்படுவதிலும் அல்லாஹ்வின் அன்பு , இரக்கம் மீது நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.
Arabic Tafsirs:
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ؕ— ذٰلِكَ خَیْرٌ لِّلَّذِیْنَ یُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ ؗ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
30.38. -முஸ்லிமே!- உறவினர்களுக்குரிய தகுதியான நல்லுபகாரம், சேர்ந்து நடத்தல் போன்ற உரிமைகளை அளித்துவிடு; தேவையுடையவர்களின் தேவையை நிறைவேற்றுமளவு வழங்கிவிடு; தனது ஊரை விட்டு பயணிக்கும் வழிப்போக்கருக்கும் வழங்கிவிடு. அல்லாஹ்வின் திருப்தியை நாடுபவர்களுக்கு அந்த நற்காரியங்களில் செலவளிப்பது சிறந்ததாகும். இந்த உதவியையும் உரிமைகளையும் வழங்குபவர்கள்தான் தாம் வேண்டும் சுவனத்தைப் பெற்று அவர்கள் அஞ்சும் வேதனையிலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்கள்.
Arabic Tafsirs:
وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ رِّبًا لِّیَرْبُوَاۡ فِیْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا یَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚ— وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ ۟
30.39. மனிதர்களில் யாராவது ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் பணத்தை, அவர் மேலதிகமாகத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் வழங்கினால் அதன் கூலி அல்லாஹ்விடத்தில் அதிகரிக்காது. மக்களிடம் கூலியையோ, அந்தஸ்த்தையோ விரும்பாமல் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தேவையுடையோருக்கு அவர்களின் தேவை நீங்க கொடுப்பவர்களின் செல்வங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி பன்மடங்களாக அதிகரிக்கின்றன.
Arabic Tafsirs:
اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ— هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّفْعَلُ مِنْ ذٰلِكُمْ مِّنْ شَیْءٍ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا یُشْرِكُوْنَ ۟۠
30.40. உங்களைப் படைத்தவனும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவனும் அல்லாஹ் ஒருவனே. பின்னர் உங்களை மரணிக்கச் செய்து மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்கள் இவற்றில் எதையேனும் செய்கின்றனவா? இணைவைப்பாளர்கள் கூறுபவற்றை விட்டும், எண்ணுபவற்றை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
Arabic Tafsirs:
ظَهَرَ الْفَسَادُ فِی الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَیْدِی النَّاسِ لِیُذِیْقَهُمْ بَعْضَ الَّذِیْ عَمِلُوْا لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
30.41. மக்கள் செய்த பாவங்களின் காரணமாக நீரிலும் நிலத்திலும் வரட்சி, குறைவான மழை, பல வகையான நோய்கள், தொற்றுநோய்கள் போன்ற சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் திருந்தி அவனிடம் திரும்பும்பொருட்டு அவர்கள் உலக வாழ்வில் செய்த தீய செயல்களின் கூலியைச் சுவைப்பதற்காகவே இது ஏற்படுகிறது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• فرح البطر عند النعمة، والقنوط من الرحمة عند النقمة؛ صفتان من صفات الكفار.
1. மகிழ்ச்சியான சமயங்களில் கர்வம்கொள்வது, துன்பம் ஏற்படும் சமயங்களில் விரக்தியடைவது நிராகரிப்பாளர்களின் இரு பண்புகளாகும்.

• إعطاء الحقوق لأهلها سبب للفلاح.
2. உரிமைகளை அவற்றுக்குரியோருக்கு வழங்குவது வெற்றிக்கான காரணமாகும்.

• مَحْقُ الربا، ومضاعفة أجر الإنفاق في سبيل الله.
3. வட்டியின் அழிவும், அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பதற்கான கூலி பன்மடங்காகவதும்.

• أثر الذنوب في انتشار الأوبئة وخراب البيئة مشاهد.
4. தொற்று நோய்கள் பரவுதல், சூழல் கெட்டுவிடுதல் என்பற்றில் பாவங்களின் தாக்கம் கண்கூடானதே.

 
Translation of the Meanings Surah: Ar-Rūm
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close