Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-‘Ankabūt   Verse:
وَلَا تُجَادِلُوْۤا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ؗ— اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْۤا اٰمَنَّا بِالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْنَا وَاُنْزِلَ اِلَیْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
29.46. -நம்பிக்கையாளர்களே!- வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் அறிவுரை மற்றும் தெளிவான ஆதாரங்களைக்கொண்டு அவர்களை அழைத்தல், உரையாடல் ஆகிய அழகிய முறையில் அன்றி விவாதம் செய்யாதீர்கள். ஆயினும் அவர்களில் பிடிவாதம் கொண்டு அநீதியிழைத்து உங்களுக்கு எதிராக போரை அறிவித்தவர்களைத்தவிர. அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை அல்லது இழிவடைந்து தங்களின் கைகளால் ஜிஸ்யா வரி கட்டும்வரை அவர்களுடன் போரிடுங்கள். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் கூறுங்கள்: “அல்லாஹ் எங்கள் மீது இறக்கிய குர்ஆனின் மீதும், உங்கள் மீது இறக்கிய தவ்ராத் மற்றும் இன்ஜீலின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்களின் இறைவனும் உங்களின் இறைவனும் ஒருவன்தான். அவனை வணங்குவதிலும் அவனது இறைவல்லமையிலும் பூரணத்தன்மையிலும் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நாங்கள் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகவும் அடிபணிந்தவர்களாகவும் இருக்கின்றோம்.
Arabic Tafsirs:
وَكَذٰلِكَ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ ؕ— فَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یُؤْمِنُوْنَ بِهٖ ۚ— وَمِنْ هٰۤؤُلَآءِ مَنْ یُّؤْمِنُ بِهٖ ؕ— وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الْكٰفِرُوْنَ ۟
29.47. உமக்கு முன்னுள்ளவர்கள் மீது வேதங்களை இறக்கியவாறே நாம் உம்மீதும் குர்ஆனை இறக்கினோம். அவர்களில் தவ்ராத்தைப் படிக்கும் சிலர் - அப்துல்லாஹ் இப்னு சலாம் போன்றோர் - தங்களின் வேதங்களில் குர்ஆனைக்குறித்து வர்ணிக்கப்பட்டிருப்பதைக் காண்பதால் அதன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள். இணைவைப்பாளர்களில் சிலரும் அதன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள். சத்தியம் தெளிவான பின்னரும் மறுப்பதையும் நிராகரிப்பதையும் வழமையாகக் கொண்டோரே நம்முடைய வசனங்களை மறுக்கிறார்கள்.
Arabic Tafsirs:
وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِیَمِیْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ ۟
29.48. -தூதரே!- குர்ஆனுக்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் படித்துக் கொண்டிருக்கவில்லை. உம் வலக்கரத்தால் எழுதக்கூடியவராக நீர் இருந்ததில்லை. நிச்சயமாக நீர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீயாக இருந்தீர். நீர் படிக்கக்கூடியவராக, எழுதக்கூடியவராக இருந்திருந்தால் மக்களில் மூடர்கள் உம் தூதுத்துவத்தில் சந்தேகம் கொண்டிருப்பார்கள்; நீர் முந்தைய வேதங்களிலிருந்துதான் எடுத்து எழுதுகின்றீர் என்று கூறியிருப்பார்கள்.
Arabic Tafsirs:
بَلْ هُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیْ صُدُوْرِ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ ؕ— وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ ۟
29.49. மாறாக உம்மீது இறக்கப்பட்ட குர்ஆன் அறிவு வழங்கப்பட்ட நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாகத் திகழ்கின்றது. அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள்தாம் நம்முடைய சான்றுகளை மறுப்பார்கள்.
Arabic Tafsirs:
وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیٰتٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ ؕ— وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
29.50. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “முந்தைய தூதர்களின் மீது இறக்கப்பட்டது போன்று இறைவனிடமிருந்து முஹம்மதின் மீதும் அற்புதங்கள் இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக அற்புதங்கள் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் அவற்றை நாடியபோது இறக்குகின்றான். என்னால் அவற்றை கொண்டுவர முடியாது. மாறாக நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து தெளிவாக எச்சரிப்பவன் மாத்திரமே.”
Arabic Tafsirs:
اَوَلَمْ یَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ یُتْلٰی عَلَیْهِمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰی لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
29.51. -தூதரே!- அவர்களிடம் ஓதிக்காட்டப்படக்கூடிய குர்ஆனை நாம் உம்மீது இறக்கியிருப்பது அற்புதங்களைக் கோருவோருக்கு போதுமானதில்லையா? நிச்சயமாக அவர்கள் மீது இறக்கப்பட்ட குர்ஆன் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அருளாகவும் அறிவுரையாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதிலுள்ளதன் மூலம் பயனடைவார்கள். முன்னைய தூதர்கள் மீது இறக்கப்பட்டது போன்ற அவர்கள் கோரும் அற்புதங்களை விட அவர்கள் மீது இறக்கப்பட்டது சிறந்ததாகும்.
Arabic Tafsirs:
قُلْ كَفٰی بِاللّٰهِ بَیْنِیْ وَبَیْنَكُمْ شَهِیْدًا ۚ— یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ ۙ— اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
29.52. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் கொண்டுவந்தது உண்மையானது என்பதற்கும் அதனை நீங்கள் மறுத்ததற்கும் சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிவான். அவை இரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அசத்தியத்தின் மீது நம்பிக்கைகொண்டு வணக்கத்திற்குத் தகுதியான அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள்தாம் ஈமானுக்குப் பகரமாக நிராகரிப்பை மாற்றிக்கொண்டதனால் நஷ்டமடைந்தவர்களாவர்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• مجادلة أهل الكتاب تكون بالتي هي أحسن.
1. வேதக்காரர்களுடன் அழகிய முறையில் விவாதம் புரியவேண்டும்.

• الإيمان بجميع الرسل والكتب دون تفريق شرط لصحة الإيمان.
2. தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டுவந்த வேதங்கள் அனைத்தின் மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்வது ஈமான் செல்லுபடியாவதற்கான ஒரு நிபந்தனையாகும்.

• القرآن الكريم الآية الخالدة والحجة الدائمة على صدق النبي صلى الله عليه وسلم.
3. புனித குர்ஆன் நபியவர்களின் உண்மைத் தன்மைக்கான நிரந்தரமான சான்றாகும்.

 
Translation of the Meanings Surah: Al-‘Ankabūt
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close