Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Furqān   Verse:
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ وَلَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا یَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَیٰوةً وَّلَا نُشُوْرًا ۟
25.3. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு வணங்குபவைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். அவை சிறியதையோ பெரியதையோ எதையும் படைக்காது. மாறாக அவையே படைக்கப்பட்டவைதாம். ஒன்றுமே இல்லாமல் இருந்த அவர்களை அல்லாஹ்தான் படைத்தான். அவை தம்மைவிட்டு தீங்கினைத் தடுக்கவோ, தமக்கு பலனை ஏற்படுத்திக்கொள்ளவோ, உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்யவோ, மரணித்தவற்றை உயிர்ப்பிக்கவோ, இறந்தவர்களை அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவோ சக்தி பெறாது.
Arabic Tafsirs:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكُ ١فْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَیْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ— فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۟ۚۛ
25.4. அல்லாஹ்வையும் தூதரையும் நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “இந்த குர்ஆனை முஹம்மது சுயமாகப் புனைந்துகொண்டு அதனை அபாண்டமாக அல்லாஹ்வின்பால் இணைத்துவிட்டார். இதனைப் புனைவதற்கு வேறு சில மனிதர்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள்.” இந்த நிராகரிப்பாளர்கள் அபாண்டமாக இட்டுக் கட்டுகிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கே அன்றி வேறில்லை. மனிதர்கள் மற்றும் ஜின்களால் இதைப்போன்று ஒருபோதும் கொண்டுவர முடியாது.
Arabic Tafsirs:
وَقَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ اكْتَتَبَهَا فَهِیَ تُمْلٰی عَلَیْهِ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
25.5. குர்ஆனை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இது முன்னோர்களின் கட்டுக் கதைகளும் புராணங்களுமாகும். அவற்றை முஹம்மது பிரதிபன்னியுள்ளார். இது காலையிலும் மாலையிலும் அவருக்குப் படித்துக் காட்டப்படுகிறது.
Arabic Tafsirs:
قُلْ اَنْزَلَهُ الَّذِیْ یَعْلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
25.6. -தூதரே!- இந்த பொய்ப்பிப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்தான் குர்ஆனை இறக்கினான். நீங்கள் எண்ணுவது போல புனைந்து கூறப்பட்டதல்ல. அவர்களுக்கு பாவமன்னிப்பில் ஆர்வமூட்டிவனாக பின்பு கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Arabic Tafsirs:
وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ یَاْكُلُ الطَّعَامَ وَیَمْشِیْ فِی الْاَسْوَاقِ ؕ— لَوْلَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَلَكٌ فَیَكُوْنَ مَعَهٗ نَذِیْرًا ۟ۙ
25.7. தூதரை மறுக்கும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “தான் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் என்று எண்ணும் இவருக்கு என்னவாயிற்று? மற்ற மனிதர்கள் உண்பதைப்போலவே இவரும் உண்ணுகிறார். அவர்கள் கடைவீதிகளில் சம்பாதிப்பதற்காக சுற்றுவதைப்போலவே இவரும் சுற்றுகிறார். இவருடன் இவரை உண்மைப்படுத்தும், இவருக்கு உதவி புரிந்து தோழராக இருக்கும் ஒரு வானவரை அல்லாஹ் இறக்கியிருக்கக் கூடாதா?
Arabic Tafsirs:
اَوْ یُلْقٰۤی اِلَیْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ یَّاْكُلُ مِنْهَا ؕ— وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟
25.8. அல்லது வானத்திலிருந்து ஏதேனும் பொக்கிஷம் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதன் பழங்களிலிருந்து இவர் உண்ண வேண்டாமா? அதனால் வாழ்வாதாரம் தேடி கடைவீதிகளில் சுற்றித் திரியாமல் தேவையற்றிருக்கலாம் அல்லவா?” அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள்: “-நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஒரு தூதரைப் பின்பற்றவில்லை. மாறாக சூனியத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு புத்தி பேதலித்த ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்.”
Arabic Tafsirs:
اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟۠
25.9. -தூதரே!- அவர்கள் உம்மைப்பற்றி எவ்வாறெல்லாம் பொய்யான பண்புகளால் வர்ணிக்கிறார்கள் என்பதை ஆச்சரியமாக பாரும். “சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் பைத்தியக்காரர் என்றும் கூறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சத்தியத்தைவிட்டும் வழிதவறி விட்டார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதற்கு சக்திபெற மாட்டார்கள். உமது அமானிதம், நம்பகத் தன்மையில் எவ்வகையிலும் அவர்கள் குறைகாண முடியாது.
Arabic Tafsirs:
تَبٰرَكَ الَّذِیْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَیْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— وَیَجْعَلْ لَّكَ قُصُوْرًا ۟
25.10. அல்லாஹ் நலன் நிறைந்தவன். அவன் நாடினால் அவர்கள் உமக்கு ஆலோசனை கூறியதை விட சிறந்தவற்றை உமக்கு அளித்திடுவான். இவ்வுலகில் உமக்காக தோட்டங்களை ஏற்படுத்தி அவற்றின் மாளிகைக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகளை ஓடச் செய்திருப்பான். நீர் அவற்றிலிருந்து பழங்களை உண்டிருக்கலாம். நீர் சொகுசாக வசிப்பதற்காக கோட்டைகளையும் ஏற்படுத்தியிருப்பான்.
Arabic Tafsirs:
بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِیْرًا ۟ۚ
25.11. அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் சத்தியத்தை தேடியோ ஆதாரத்தை வேண்டியோ வெளிப்படவில்லை. மாறாக நடந்தது என்னவெனில் அவர்கள் மறுமை நாளை நிராகரித்துவிட்டனர். மறுமை நாளை மறுப்பவர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் பெரும் நெருப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• اتصاف الإله الحق بالخلق والنفع والإماتة والإحياء، وعجز الأصنام عن كل ذلك.
1. உண்மையான இறைவன் படைத்தல், பலனளித்தல், மரணிக்கச் செய்தல், உயிர்ப்பித்தல் ஆகிய பண்புகளையுடையவன், சிலைகள் இவற்றில் எதையும் செய்ய சக்தி பெறாது.

• إثبات صفتي المغفرة والرحمة لله.
2. மன்னித்தல், கருணைகாட்டுதல் ஆகிய இரு பண்புகள் அல்லாஹ்வுக்கு உள்ளன என்பது உறுதியாகிறது.

• الرسالة لا تستلزم انتفاء البشرية عن الرسول.
3. தூதுப் பணிக்கு தூதரை விட்டும் மனிதத் தன்மைகள் நீங்க வேண்டுமென்பது அவசியமல்ல.

• تواضع النبي صلى الله عليه وسلم حيث يعيش كما يعيش الناس.
4. மனிதர்களைப் போன்று வாழும் நபியவர்களின் பணிவு.

 
Translation of the Meanings Surah: Al-Furqān
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close