Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: An-Noor   Verse:
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ— اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
24.32. -நம்பிக்கையாளர்களே!- மனைவியரில்லாத ஆண்களுக்கும் கணவர்கள் இல்லாத சுதந்திரமான பெண்களுக்கும் மணமுடித்து வையுங்கள். உங்கள் அடிமைகளில் நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் மணமுடித்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் அருளால் அவர்களைத் தன்னிறைவானவர்களாக்குவான். அவன் வாழ்வாதாரம் வழங்குவதில் தாராளமானவன்.ஒருவனை தன்னிறைவுள்ளவனாக்குவது அவனிடம் இருக்கும் வாழ்வாதாரத்தைக் குறைத்துவிடாது. தன் அடியார்களின் நிலமைகளைக் குறித்து நன்கறிந்தவன்.
Arabic Tafsirs:
وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ— وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ— وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ— وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
24.33. வறுமையின் காரணமாக மணமுடிக்காமல் இருப்பவர்கள் அல்லாஹ் தன் விசாலமான அருளால் அவர்களைத் தன்னிறைவானவர்களாக ஆக்கும்வரை விபச்சாரத்தை விட்டுத் தவிர்ந்து பக்குவமாக இருக்கட்டும். உங்களின் அடிமைகள் பணம் கொடுத்து சுதந்திரம் பெறுவதற்காக உங்களிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அதனை நிறைவேற்றுவதற்கான ஆற்றலையும் மார்க்கப் பற்றையும் அவர்களிடம் கண்டால் அவர்களின் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் வழங்குவதாக வாக்களித்த தொகையில் ஒரு பகுதியைக் குறைப்பதன் மூலம் அல்லாஹ் உங்களுக்கு அளித்த செல்வங்களிலிருந்து நீங்கள் அவர்களுக்கு அளியுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக உங்களின் அடிமைப் பெண்களை விபச்சாரம் செய்யும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். -நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை, தூய்மையையும், மானக்கேடான விடயங்களை விட்டும் தூரமாகவும் விரும்பிய தன் இரு அடிமைப் பெண்களை விபச்சாரம் புரிந்து சம்பாதிக்கும்படி வேண்டினான்-. நீங்கள் அவர்களை நிர்ப்பந்தம் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுவான். அவர்களோடு கிருபையாளனாகவும் இருக்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நிர்ப்பந்தித்தவர்களையே பாவம் சென்றடையும்.
Arabic Tafsirs:
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟۠
24.34. -மனிதர்களே!- நாம் உங்களின் மீது சந்தேகமற்ற தெளிவான சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டும் வசனங்களையும் முன்சென்ற நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களின் உதாரணங்களையும் இறக்கியுள்ளோம். தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் அறிவுரை பெறுவதற்காக அறிவுரையையும் உங்கள் மீது இறக்கியுள்ளோம்.
Arabic Tafsirs:
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِیْهَا مِصْبَاحٌ ؕ— اَلْمِصْبَاحُ فِیْ زُجَاجَةٍ ؕ— اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّیٌّ یُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَیْتُوْنَةٍ لَّا شَرْقِیَّةٍ وَّلَا غَرْبِیَّةٍ ۙ— یَّكَادُ زَیْتُهَا یُضِیْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ— نُوْرٌ عَلٰی نُوْرٍ ؕ— یَهْدِی اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟ۙ
24.35. அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாகவும் அவையிரண்டில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கின்றான். நம்பிக்கையாளின் உள்ளத்தில் அவனுடைய ஒளிக்கு உதாரணம் சுவரில் காணப்படும் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும். அவ்விளக்கு பிரகாசமான ஒரு கண்ணாடியில் உள்ளது. அது முத்தைப் போன்று மின்னக்கூடிய நட்சத்திரத்தைப் போன்றது. அவ்விளக்கு வளம்மிக்க சைத்தூன் மரத்திலுள்ள எண்ணெய்யால் எரிக்கப்படுகிறது. அந்த மரத்தை காலையிலோ மாலையிலோ சூரியனைவிட்டு எதுவும் மறைக்காது. அந்த எண்ணெயில் நெருப்பு சேராவிட்டாலும் அதன் தூய்மையினால் அது மின்னுகிறது. எனவே நெருப்பு சேர்ந்தால் எவ்வாறு மின்னும்? கண்ணாடி ஒளியின் மீது விளக்கின் ஒளி. இவ்வாறுதான் நேர்வழி என்னும் ஒளியால் பிரகாசமடைந்த நம்பிக்கையாளனின் உள்ளமும். அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு குர்ஆனைப் பின்பற்றும் பாக்கியத்தை அளிக்கிறான். அல்லாஹ் விஷயங்களை அதுபோன்ற உதாரணங்களைக்கொண்டு தெளிவுபடுத்துகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ— یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ
24.36. இந்த விளக்கு பள்ளிவாயில்களில் எரிக்கப்படுகிறது. அவற்றின் அந்தஸ்தை, கட்டிடத்தை உயர்த்துமாறும் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தொழுது, தொழுகை, பாங்கு, இறைநினைவு ஆகியவற்றைக் கொண்டு அவனின் பெயரை நினைவுகூருமாறும் அவன் கட்டளையிட்டுள்ளான்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الله عز وجل ضيق أسباب الرق (بالحرب) ووسع أسباب العتق وحض عليه .
1. போரின் மூலம் மாத்திரமே அடிமைப்படுத்த முடியும் என்பதன் மூலம் அல்லாஹ் அடிமைப்படுத்துவதன் காரணிகளை சுருக்கியுள்ளான். அதே வேளை உரிமையிடுவதற்கான காரணிகளை விரிவாக்கி அதனை ஆர்வமூட்டியுமுள்ளான்.

• التخلص من الرِّق عن طريق المكاتبة وإعانة الرقيق بالمال ليعتق حتى لا يشكل الرقيق طبقة مُسْتَرْذَلة تمتهن الفاحشة.
2. அடிமைகள் விபச்சாரத்தைத் தொழிலாக்கி செயற்படும் ஒரு வர்க்கமாக உருவெடுத்து விடக்கூடாது என்பதற்காக ‘முகாதபா’ எனப்படும் பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்த முறை மற்றும் உரிமை பெறுவதற்கு பணத்தினால் அடிமைகளுக்கு உதவுதல் போன்ற வழிகளின் மூலம் அடிமைத்துவத்திருந்து வெளிவருதல்.

• قلب المؤمن نَيِّر بنور الفطرة، ونور الهداية الربانية.
3. நம்பிக்கையாளரின் உள்ளம் இயல்பின் ஒளி மற்றும் இறைவழிகாட்டலின் ஒளி ஆகியவற்றால் ஒளிமயமுற்றுள்ளது.

• المساجد بيوت الله في الأرض أنشأها ليعبد فيها، فيجب إبعادها عن الأقذار الحسية والمعنوية.
4. பள்ளிவாயில்கள் பூமியில் உள்ள இறை இல்லங்களாகும். அவற்றில் அல்லாஹ்வை வணங்கப்பட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே வெளிரங்கமான, மறைமுகமான அசுத்தங்களை விட்டும் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

• من أسماء الله الحسنى (النور) وهو يتضمن صفة النور له سبحانه.
5. அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களில் ஒன்றே அந்நூர் என்பதாகும். அது அவனுக்கு ஒளி என்ற பண்பு உள்ளது என்பதை உள்ளடக்கியுள்ளது.

 
Translation of the Meanings Surah: An-Noor
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close