Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Verse: (110) Surah: Al-Isrā’
قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ— اَیًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ۚ— وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۟
17.110. -தூதரே!- “அல்லாஹ்வே, ரஹ்மானே” என்று நீர் பிரார்த்தனை செய்வதை எதிர்ப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ், ரஹ்மான் இரண்டும் அவனுடைய பெயர்கள்தாம். அவையிரண்டில் எதைக்கொண்டும் அல்லது அவனுடைய மற்ற பெயர்களைக் கொண்டும் அவனை அழையுங்கள். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. இந்த இரண்டும் அவனுடைய பெயர்களில் உள்ளவைதாம். நீங்கள் அவற்றைக் கொண்டோ மற்ற அவனுடைய அழகிய பெயர்களைக்கொண்டோ அவனை அழையுங்கள். நீர் இணைவைப்பாளர்கள் கேட்குமளவுக்கு தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர். நம்பிக்கையாளர்கள் செவியுறாதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழியைக் கடைப்பிடிப்பீராக.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• أنزل الله القرآن متضمنًا الحق والعدل والشريعة والحكم الأمثل .
1. சத்தியம், நீதி, ஷரீஅத், சிறந்த தீர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக குர்ஆனை அல்லாஹ் இறக்கியுள்ளான்.

• جواز البكاء في الصلاة من خوف الله تعالى.
2. அல்லாஹ்வின் பயத்தால் தொழுகையில் அழலாம்.

• الدعاء أو القراءة في الصلاة يكون بطريقة متوسطة بين الجهر والإسرار.
3. தொழுகையில் குர்ஆன் ஓதுவதும், பிரார்த்தனை செய்வதும் சப்தமாகவோ, மெதுவாகவோ அல்லாமல் நடுநிலையான முறையில் அமைய வேண்டும்.

• القرآن الكريم قد اشتمل على كل عمل صالح موصل لما تستبشر به النفوس وتفرح به الأرواح.
4. உள்ளங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கும், ஆன்மாக்கள் மகிழ்வுறும் எல்லா நற்செயல்களையும் சங்கையான அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ளது.

 
Translation of the Meanings Verse: (110) Surah: Al-Isrā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close