Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Verse: (1) Surah: Al-Isrā’

அல்இஸ்ரா

Objectives of the Surah:
تثبيت الله لرسوله صلى الله عليه وسلم وتأييده بالآيات البينات، وبشارته بالنصر والثبات.
பல்வேறு தெளிவான அத்தாட்சிகள் மூலம் அல்லாஹ் தனது தூதரை உறுதிப்படுத்துவதோடு வெற்றியை கொண்டு நன்மாராயம் கூறுதல்

سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
17.1. அல்லாஹ் தூய்மையானவன் மகத்தானவன். ஏனெனில் வேறு யாராலும் செய்வதற்கு ஆற்றலில்லாததை செய்வதற்கு அவன் ஆற்றலுள்ளவன். அவனே தன் அடியார் முஹம்மதை உடலோடும் ஆன்மாவோடும் விழித்த நிலையில் இரவின் ஒரு பகுதியில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பழங்களினாலும் பயிர்களினாலும் நபிமார்களின் இல்லங்களினாலும் நாம் அருள்செய்த பைத்துல் முகத்தஸை நோக்கி தன் வல்லமையை அறிவிக்கக்கூடிய சில சான்றுகளைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றான். நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். செவியேற்கப்படும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் பார்க்கக்கூடியவன். பார்க்கப்படக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• في قوله: ﴿الْمَسْجِدِ الْأَقْصَا﴾: إشارة لدخوله في حكم الإسلام؛ لأن المسجد موطن عبادةِ المسلمين.
1. (அல்மஸ்ஜிதுல் அக்ஸா) என்ற வார்ததைப் பிரயோகம் அது இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் பள்ளிவாயில்கள் முஸ்லிம்களின் வணங்கும் இடமாகும்.

• بيان فضيلة الشكر، والاقتداء بالشاكرين من الأنبياء والمرسلين.
2. நன்றிசெலுத்தல், நன்றிசெலுத்திய நபிமார்களை, இறைத்தூதர்களைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் சிறப்பு தெளிவாகிறது.

• من حكمة الله وسُنَّته أن يبعث على المفسدين من يمنعهم من الفساد؛ لتتحقق حكمة الله في الإصلاح.
3. அல்லாஹ்வின் இறைநியதி மற்றும் நோக்கத்தில் உள்ளவைதான், சீர்திருத்தத்தில் தனது நோக்கம் நிறைவேறுவதற்காக குழப்பவாதிகளை அவர்களின் குழப்பத்தை விட்டும் தடுக்கக் கூடியவர்களை அனுப்புகிறான்.

• التحذير لهذه الأمة من العمل بالمعاصي؛ لئلا يصيبهم ما أصاب بني إسرائيل، فسُنَّة الله واحدة لا تتبدل ولا تتحول.
4. இஸ்ராயீலின் மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்று இந்த சமுதாயத்துக்கும் ஏற்படாமலிருக்க பாவங்கள் செய்வதை விட்டும் அவர்களை எச்சரிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வழிமுறை ஒன்றே. அது மாறுவதில்லை.

 
Translation of the Meanings Verse: (1) Surah: Al-Isrā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close