Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Isrā’   Verse:
اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ— اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَیْكَ كَبِیْرًا ۟
17.87. ஆயினும் உம் இறைவனின் அருளால் நாம் அதனை நீக்கவில்லை. நாம் அதனைப் பாதுகாப்பாக விட்டுவிட்டோம். நிச்சயமாக உம் இறைவன் உம்மை இறுதித் தூதராக ஆக்கி, உம்மீது குர்ஆனை இறக்கி பேரருள் புரிந்துள்ளான்.
Arabic Tafsirs:
قُلْ لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰۤی اَنْ یَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا یَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِیْرًا ۟
17.88. -தூதரே!- நீர் கூறுவீராக: “உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைப் போன்று அதன் இலக்கிய நயத்தில், அழகிய அமைப்பில், தரத்தில் ஒன்றைக் கொண்டுவருவதற்கு மனிதர்கள், ஜின்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்தாலும் அவர்களால் ஒருபோதும் கொண்டுவர முடியாது.
Arabic Tafsirs:
وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ ؗ— فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟
17.89. அவர்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக ஏவல்களையும், விலக்கல்களையும், சம்பவங்களையும், படிப்பினைக்குரிய அறிவுரைகளையும் விதம்விதமாக நாம் மக்களுக்கு இந்த குர்ஆனில் தெளிவுபடுத்தி விட்டோம். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் இந்தக் குர்ஆனை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள்.
Arabic Tafsirs:
وَقَالُوْا لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ یَنْۢبُوْعًا ۟ۙ
17.90. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காக மக்காவின் பூமியிலிருந்து வற்றாத ஓடும் நீருற்றை வெளிப்படுத்தும்வரை நாங்கள் உம்மை நம்ப மாட்டோம்.
Arabic Tafsirs:
اَوْ تَكُوْنَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِیْرًا ۟ۙ
17.91. அல்லது பேரீத்தம்பழம், திராட்சை தோட்டம் உமக்கு இருக்க வேண்டும். அவற்றில் ஆறுகள் நன்றாக ஓட வேண்டும்.
Arabic Tafsirs:
اَوْ تُسْقِطَ السَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَیْنَا كِسَفًا اَوْ تَاْتِیَ بِاللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ قَبِیْلًا ۟ۙ
17.92. -அல்லது நீர் கூறுவதுபோல- வானத்தை வேதனையின் ஒரு பகுதியாக எங்கள்மீது விழச் செய்ய வேண்டும். அல்லது நீர் கூறுவது உண்மையே என உமக்காக சாட்சி கூற அல்லாஹ்வையும் வானவர்களையும் எங்கள் கண்முன்னால் கொண்டுவர வேண்டும்.
Arabic Tafsirs:
اَوْ یَكُوْنَ لَكَ بَیْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰی فِی السَّمَآءِ ؕ— وَلَنْ نُّؤْمِنَ لِرُقِیِّكَ حَتّٰی تُنَزِّلَ عَلَیْنَا كِتٰبًا نَّقْرَؤُهٗ ؕ— قُلْ سُبْحَانَ رَبِّیْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا ۟۠
17.93. அல்லது உமக்கு தங்கத்தால் அல்லது அது போன்ற வேறொன்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது நீர் வானத்தில் ஏற வேண்டும். நீர் வானத்தில் ஏறினால் மட்டும் போதாது. அங்கு சென்று அல்லாஹ்விடமிருந்து ஒரு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அதில் நீர் அவனுடைய தூதர் என்று எழுதப்பட்டிருப்பதை நாங்கள் படிக்க வேண்டும். அதுவரை நிச்சயமாக உம்மை ஒருபோதும் தூதர் என நம்ப மாட்டோம். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் பரிசுத்தமானவன். மற்ற தூதர்களைப்போல நானும் ஒரு மனித தூதரே. எதையும் கொண்டுவர நான் சக்திபெற மாட்டேன். பிறகு எப்படி நீங்கள் கூறியதையெல்லாம் என்னால் கொண்டுவர முடியும்?
Arabic Tafsirs:
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰۤی اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا ۟
17.94. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு தூதர் கொண்டுவந்ததன்படி செயல்படுவதைவிட்டும் நிராகரிப்பாளர்களைத் தடுப்பது தூதர் மனித இனத்திலிருந்து வந்துள்ளார் என்பதே. “அல்லாஹ் ஒரு மனிதரையா எங்களுக்குத் தூதராக அனுப்பினான்?” என்று அவர்கள் மறுத்தவாறு கூறினார்கள்.
Arabic Tafsirs:
قُلْ لَّوْ كَانَ فِی الْاَرْضِ مَلٰٓىِٕكَةٌ یَّمْشُوْنَ مُطْمَىِٕنِّیْنَ لَنَزَّلْنَا عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَكًا رَّسُوْلًا ۟
17.95. -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்புக் கூறுவீராக: “பூமியில் வானவர்கள் வாழ்ந்து உங்களைப்போன்று நிம்மதியாக அதில் நடந்து செல்பவர்களாக இருந்தால் நாம் அவர்களின்பால் வானவர்களைத் தூதர்களாக அனுப்பியிருப்போம். நிச்சயமாக அப்போதுதான் அவரால் தன் தூதை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நாம் அவர்களின்பால் மனித இனத்தைச் சார்ந்த ஒருவரை தூதராக அனுப்புவது அறிவுபூர்வமானதல்ல. அதுபோன்றுதான் உங்களின் நிலைமையும்.
Arabic Tafsirs:
قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
17.96. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கும் உங்களுக்கு எத்திவைக்குமாறு கூறப்பட்ட தூதை நான் எடுத்துரைத்துவிட்டேன் என்பற்கு, எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை சூழ்ந்தவனாக இருக்கின்றான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் அனைத்தையும் அவன் பார்க்கக்கூடியவன்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• بيَّن الله للناس في القرآن من كل ما يُعْتَبر به من المواعظ والعبر والأوامر والنواهي والقصص؛ رجاء أن يؤمنوا.
1. மக்கள் நம்பிக்கைகொள்ளும்பொருட்டு அறிவுரைகள், ஏவல்கள், விலக்கல்கள், சம்பவங்கள் என படிப்பினைக்குரிய அனைத்தையும் அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்திவிட்டான்.

• القرآن كلام الله وآية النبي الخالدة، ولن يقدر أحد على المجيء بمثله.
2. குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகவும் தூதருக்கு வழங்கப்பட்ட நிரந்தர அற்புதமாகவும் இருக்கின்றது. அதனைப் போன்ற ஒன்றைக் கொண்டுவர எவனும் சக்திபெறமாட்டான்.

• من رحمة الله بعباده أن أرسل إليهم بشرًا منهم، فإنهم لا يطيقون التلقي من الملائكة.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு மனித இனத்திலிருந்தே தூதர்களை அனுபுவது அல்லாஹ்வின் அருளாகும். ஏனெனில் நிச்சயமாக வானவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் சக்தி அவர்களிடம் இல்லை.

• من شهادة الله لرسوله ما أيده به من الآيات، ونَصْرُه على من عاداه وناوأه.
4. அல்லாஹ் தனது தூதரை உறுதிப்படுத்த வழங்கிய அத்தாட்சிகள், அவரை எதிர்த்தோருக்கு எதிராக அவருக்கு உதவுதல் ஆகியவை அல்லாஹ் தனது தூதருக்குக் கூறும் சாட்சியாகும்.

 
Translation of the Meanings Surah: Al-Isrā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close