Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: An-Nahl   Verse:
وَاَلْقٰی فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙ
16.15. பூமி உங்களைக் கொண்டு ஆட்டம் கண்டு சரிந்து விடாமல் இருக்க அவன் அதில் உறுதியான மலைகளை ஊன்றி நீங்களும், உங்கள் கால்நடைகளும், பயிர்களும் அருந்துவதற்காக ஆறுகளையும், நீங்கள் செல்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தியுள்ளான். அவன் ஏற்படுத்திய வழிகளின் மூலமே நீங்கள் வழி தவறி விடாமல் விரும்பும் இடங்களை அடைகின்றீர்கள்.
Arabic Tafsirs:
وَعَلٰمٰتٍ ؕ— وَبِالنَّجْمِ هُمْ یَهْتَدُوْنَ ۟
16.16. நீங்கள் பகலில் பயணம் செய்யும் போது பாதைகளை அறிவதற்காக வெளிப்படையான அடையாளங்களையும் இரவில் பாதைகளை அறிவதற்காக வானத்தில் நட்சத்திரங்களையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
Arabic Tafsirs:
اَفَمَنْ یَّخْلُقُ كَمَنْ لَّا یَخْلُقُ ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
16.17. இவற்றையும் இவையல்லாதவற்றையும் படைத்தவன் எதையும் படைக்காதவனுக்குச் சமமாவானா? எல்லாவற்றையும் படைக்கும் அல்லாஹ்வின் மகத்துவத்தைச் சிந்தித்து, எதையும் படைக்காதவற்றை அவனுக்கு இணையாக்காமல் அவனை மாத்திரம் வணங்கமாட்டீர்களா?.
Arabic Tafsirs:
وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ— اِنَّ اللّٰهَ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
16.18. -மனிதர்களே!- அவன் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளை நீங்கள் எண்ணி முடிக்க முயற்சித்தால் அது உங்களால் முடியாது. அந்தளவுக்கு அவை அதிகமானவையும், பலதரப்பட்டவையுமாகும். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடியவன். அதனால்தான் அவைகளுக்கு நன்றி செலுத்தாமல் அலட்சியமாக இருந்த உங்களை அவன் தண்டிக்கவில்லை. உங்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளன். அதனால்தான் நீங்கள் பாவங்களினாலும் நன்றி செலுத்துவதில் குறைசெய்திருந்தும் அருட்கொடைகளை உங்களை விட்டும் அவன் நிறுத்தவில்லை.
Arabic Tafsirs:
وَاللّٰهُ یَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟
16.19. -அடியார்களே!- நீங்கள் மறைவாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் அவன் அறிவான். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ؕ
16.20. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்கும் தெய்வங்கள் எதையும் படைக்க மாட்டாது. அது அற்பமாக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வை விடுத்து அவைகளை வணங்கியவர்களே அவைகளை உருவாக்கினார்கள். தங்கள் கைகளால் உருவாக்கிய சிலைகளை எவ்வாறு அவர்கள் வணங்கலாம்?
Arabic Tafsirs:
اَمْوَاتٌ غَیْرُ اَحْیَآءٍ ؕۚ— وَمَا یَشْعُرُوْنَ ۙ— اَیَّانَ یُبْعَثُوْنَ ۟۠
16.21. அவற்றை வணங்கியோரே தமது கைகளால் அவற்றைச் செதுக்கியது மாத்திரமின்றி அவை உயிரோ அறிவோ அற்ற ஜடங்களாகவும் உள்ளன. அவை மறுமை நாளில் தங்களை வணங்கியவர்களுடன் நரக நெருப்பில் எறியப்படுவதற்காக எப்போது எழுப்பப்படும் என்பதைக்கூட அறியாது.
Arabic Tafsirs:
اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
16.22. உங்களின் உண்மையான வணக்கத்திற்குரியவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். மறுமையில் கூலி கொடுக்கப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்களின் உள்ளங்கள் அல்லாஹ் ஒருவனே என்பதை மறுக்கின்றன. ஏனெனில் அவைகள் அஞ்சுவதில்லை, கூலி கொடுக்கப்படுவதையோ விசாரணை செய்யப்படுவதையோ நம்புவதில்லை. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத, அதற்கு அடிபணியாத கர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
Arabic Tafsirs:
لَا جَرَمَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْتَكْبِرِیْنَ ۟
16.23. நிச்சயமாக இவர்கள் இரகசியமாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் உண்மையாக அல்லாஹ் அறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். தன்னை வணங்குவதை விட்டும், தனக்குக் கட்டுப்படுவதை விட்டும் கர்வம் கொள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவன் அவர்களை கடுமையாக வெறுக்கிறான்.
Arabic Tafsirs:
وَاِذَا قِیْلَ لَهُمْ مَّاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْ ۙ— قَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
16.24. படைத்தவனின் ஏகத்துவத்தையும் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் பொய்பிக்கும் இவர்களிடம், “உங்கள் இறைவன் முஹம்மதின் மீது எதை இறக்கினான்?” என்று கேட்கப்பட்டால், “அவன் அவர் மீது எதையும் இறக்கிவைக்கவில்லை. நிச்சயமாக அவர் முன்னோர்களின் கட்டுக்கதைகளை சுயமாக புனைந்து கூறுகிறார்” என்று கூறுகிறார்கள்.
Arabic Tafsirs:
لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ ۙ— وَمِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ ؕ— اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ ۟۠
16.25. அவர்களின் பாவங்களை அவர்கள் குறைவின்றி சுமப்பதற்காகவும் அறியாமை, கண்மூடித்தனமான பின்பற்றுதல் ஆகியவற்றால் இஸ்லாத்தை விட்டு அவர்கள் யாரை வழிகெடுத்தார்களோ அவர்களின் பாவங்களையும் சுமப்பதே அவர்களின் முடிவாக அமையும். தங்களின் பாவங்களையும் தங்களைப் பின்பற்றியவர்களின் பாவங்களையும் சுமக்கும் இவர்களின் சுமைகள் எத்துணை மோசமானது!
Arabic Tafsirs:
قَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتَی اللّٰهُ بُنْیَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَیْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟
16.26. இவர்களுக்கு முன்னால் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் கட்டடங்களை அடியோடு தகர்த்து விட்டான். மேலிருந்து முகடுகள் அவர்களின் மீது விழுந்து விட்டன. அவர்கள் எதிர்பார்க்காத புறத்திலிருந்து வேதனை அவர்களிடம் வந்தது. அவர்களின் கட்டடங்கள் அவர்களைப் பாதுகாக்கும் என்றே அவர்கள் எண்ணியிருந்தார்கள். எனவே அவற்றைக் கொண்டே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• في الآيات من أصناف نعم الله على العباد شيء عظيم، مجمل ومفصل، يدعو الله به العباد إلى القيام بشكره وذكره ودعائه.
1. மேலுள்ள வசனங்களிலே அல்லாஹ் அடியார்கள் மீது பொழிந்த அருட்கொடைகள் ஏராளமானவை சுருக்கமாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இதன் மூலம் அடியார்கள் தனக்கே நன்றி செலுத்த வேண்டும், தன்னை நினைவு கூற வேண்டும், தன்னிடமே பிரார்த்திக்க வேண்டும் என்பதன் பக்கம் அவன் அழைப்பு விடுக்கிறான்.

• طبيعة الإنسان الظلم والتجرُّؤ على المعاصي والتقصير في حقوق ربه، كَفَّار لنعم الله، لا يشكرها ولا يعترف بها إلا من هداه الله.
2. அநியாயமிழைத்தல், பாவங்களைத் துணிந்து செய்தல், அல்லாஹ்வின் உரிமைகளில் கறை செய்தல் ஆகியவை மனிதனின் இய்லபாகும். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாத, அதனை அருட்கொடையாக ஏற்றுக்கொள்ளாத நன்றி கெட்டவனாக இருக்கின்றான். ஆயினும் அல்லாஹ் நேர்வழிகாட்டியவர்களைத் தவிர.

• مساواة المُضِلِّ للضال في جريمة الضلال؛ إذ لولا إضلاله إياه لاهتدى بنظره أو بسؤال الناصحين.
3. வழிகெடுத்தவன் வழிகெட்டவனின் வழிகேட்டுக் குற்றத்தில் சமபங்காளியாவான். ஏனெனில் அவனது வழிகெடுக்காமலிருந்திருந்தால் தனது ஆய்வின் மூலம் அல்லது நல்லுபதேசிகளிடம் கேட்டு நேர்வழியை அவன் அடைந்திருப்பான்.

• أَخْذ الله للمجرمين فجأة أشد نكاية؛ لما يصحبه من الرعب الشديد، بخلاف الشيء الوارد تدريجيًّا.
4. பாவிகளை அல்லாஹ் திடீரெனத் தண்டிப்பது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் அதில் கடுமையான பீதி ஏற்படும். ஆனால் படிப்படியாக ஏற்படுவதில் அவ்வாறு இருக்காது.

 
Translation of the Meanings Surah: An-Nahl
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close