Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Ibrāhīm   Verse:
قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَمُنُّ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَمَا كَانَ لَنَاۤ اَنْ نَّاْتِیَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
14.11. அவர்களின் தூதர் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எல்லா விஷயங்களிலும் நாங்கள் உங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு பிரத்யேகமான அருளை வழங்கி, அவர்களை மக்களுக்குத் தூதர்களாகத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் நாட்டமின்றி நீங்கள் வேண்டும் ஆதாரங்களை எங்களால் கொண்டுவர முடியாது. அதற்கு எமக்கு ஆற்றலும் இல்லை. மாறாக அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அவனை நம்பிக்கை கொண்டோர் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
Arabic Tafsirs:
وَمَا لَنَاۤ اَلَّا نَتَوَكَّلَ عَلَی اللّٰهِ وَقَدْ هَدٰىنَا سُبُلَنَا ؕ— وَلَنَصْبِرَنَّ عَلٰی مَاۤ اٰذَیْتُمُوْنَا ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟۠
14.12. நாங்கள் அல்லாஹ்வை சார்ந்திருப்பதற்கு எதுதான் நமக்குத் தடையாக அமையமுடியும்? அவன்தானே எங்களுக்கு சரியான, தெளிவான பாதையின்பால் எங்களுக்கு வழிகாட்டினான். மறுத்து, பரிகாசம் செய்து நீங்கள் எங்களுக்குத் தரும் தொல்லைகளை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.
Arabic Tafsirs:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ— فَاَوْحٰۤی اِلَیْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظّٰلِمِیْنَ ۟ۙ
14.13. தங்களின் தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களுடன் விவாதிக்க இயலாமல் அவர்களிடம் கூறினார்கள்: “நாங்கள் உங்களை எங்களின் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம் அல்லது நீங்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு விட்டு எங்கள் மார்க்கத்தின்பால் திரும்பிவிட வேண்டும்.” அல்லாஹ் தூதர்களை உறுதிப்படுத்தியவாறு வஹி அறிவித்தான்: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்த அநியாயக்காரர்களை நிச்சயம் நாம் அழித்தே தீருவோம்.”
Arabic Tafsirs:
وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْ بَعْدِهِمْ ؕ— ذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِیْ وَخَافَ وَعِیْدِ ۟
14.14. -தூதர்களே!, உங்களைப் பின்பற்றியோரே- அவர்களை அழித்த பிறகு பூமியில் நாம் உங்களை வசிக்கச் செய்வோம். மறுப்பவர்களான நிராகரிப்பாளர்களை அழித்து, அதன் பிறகு தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் அந்தப் பூமியில் நாம் வசிக்கச் செய்வது, எனது கண்ணியத்தையும் கண்காணிப்பையும் கவனத்தில் கொண்டு, வேதனை ஏற்படும் என்ற எனது எச்சரிக்கையை அஞ்சியவருக்கேயாகும்.
Arabic Tafsirs:
وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِیْدٍ ۟ۙ
14.15. தூதர்கள் தங்கள் இறைவனிடம் எதிரிகளுக்கு எதிராக தங்களுக்கு உதவி புரியும்படி வேண்டினார்கள். கர்வம் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதம் மிக்க ஒவ்வொருவரும் நஷ்டமடைந்து விட்டார்கள். அது தெளிவாக இருந்தும் அவர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை.
Arabic Tafsirs:
مِّنْ وَّرَآىِٕهٖ جَهَنَّمُ وَیُسْقٰی مِنْ مَّآءٍ صَدِیْدٍ ۟ۙ
14.16. மறுமையில் இந்த கர்வம் கொண்டவர்களுக்கு முன்னால் நரகமே இருக்கின்றது. அது அவர்களுக்காக காத்திருக்கின்றது. அங்கு நரகவாசிகளின் உடல்களிலிருந்து வழியும் சீழ்களிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அது அவர்களின் தாகத்தை தணிக்காது. தாகத்தாலும் இன்னபிற வேதனைகளாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
Arabic Tafsirs:
یَّتَجَرَّعُهٗ وَلَا یَكَادُ یُسِیْغُهٗ وَیَاْتِیْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَیِّتٍ ؕ— وَمِنْ وَّرَآىِٕهٖ عَذَابٌ غَلِیْظٌ ۟
14.17. அதன் கசப்பு, சூடு, துர்நாற்றம் ஆகியவற்றின் காரணமாக தொடராக அதனைப் பருகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களால் அதனை விழுங்க முடியாது. அவர்களை சுற்றி காணப்படும் கடுமையான வேதனையினால், மரணம் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களை வந்தடையும். அவன் ஓய்வு பெறுவதற்கு மரணிக்கவும் மாட்டான். மாறாக உயிரோடு இருந்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு முன்னால் வேறொரு கடுமையான வேதனையும் காத்திருக்கின்றது.
Arabic Tafsirs:
مَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ اَعْمَالُهُمْ كَرَمَادِ ١شْتَدَّتْ بِهِ الرِّیْحُ فِیْ یَوْمٍ عَاصِفٍ ؕ— لَا یَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰی شَیْءٍ ؕ— ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟
14.18. தர்மம் செய்தல், உபகாரம் செய்தல், பலவீனர்கள் மீது இரக்கம் காட்டுதல் போன்ற நிராகரிப்பாளர்கள் செய்யும் நற்செயல்கள், புயல் வீசும் நாளில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாம்பலைப் போன்றதாகும். அது அதனை தூக்கி வீசி நாலா புறமும் அடையாளம் தெரியாதவாறு சிதறடித்து விட்டது. இது போன்று நிராகரிப்பாளர்களின் செயல்களை நிராகரிப்பு ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டது. மறுமை நாளில் அவர்களுக்கு அவை பலனளிக்காது. ஈமானின் அடிப்படையில் அமையாத அச்செயல்கள் சத்திய பாதையை விட்டும் தூரமான வழிகேடாகும்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• أن الأنبياء والرسل بشرٌ من بني آدم، غير أن الله تعالى فضلهم بحمل الرسالة واصطفاهم لها من بين بني آدم.
1. இறைத்தூதர்கள் அனைவரும் ஆதமின் சந்ததியில் வந்த மனிதர்கள்தாம். ஆயினும் அல்லாஹ் மற்ற மனிதர்களைவிட அவர்களை தேர்ந்து எடுத்து தூதுப்பணியை அளித்து சிறப்பித்துள்ளான்.

• على الداعية الذي يريد التغيير أن يتوقع أن هناك صعوبات جَمَّة سوف تقابله، ومنها الطرد والنفي والإيذاء القولي والفعلي.
2. மாற்றம் ஏற்படுத்த விரும்பும் அழைப்பாளன் அவனை எதிர்கொள்ளும் பல சிரமங்கள் வரும் என எதிர்பார்க்க வேண்டும். அவற்றுள் துரத்தல், ஊர்விலக்கம், சொல், செயல் ரீதியான தொல்லை ஆகியவையும் உள்ளடங்கும்.

• أن الدعاة والصالحين موعودون بالنصر والاستخلاف في الأرض.
3.அழைப்பாளர்களும் நல்லவர்களும் உதவி, பூமியில் ஆட்சி செய்தல் ஆகியவற்றைக் கொண்டு வாக்களிக்கப்பட்டுள்ளனர்.

• بيان إبطال أعمال الكافرين الصالحة، وعدم اعتبارها بسبب كفرهم.
4. நிராகரிப்பாளர்களின் நற்செயல்கள் வீணாக்கப்படும் என்பதும் அவர்களது நிராகரிப்பினால் அவைகள் கவனத்தில் கொள்ளப்படாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
Translation of the Meanings Surah: Ibrāhīm
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close