Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Yūnus   Verse:
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ— وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ— یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
10.107. -தூதரே!- அல்லாஹ் உமக்கு எதேனும் துன்பத்தை அளித்து அது நீங்க வேண்டுமென நீர் வேண்டினால் அவனைத் தவிர யாராலும் அதனை நீக்க முடியாது. அவன் உமக்கு வளமான வாழ்க்கையை நாடினால் அவனது அருளை ஒருவராலும் தடுக்க முடியாது. அவன் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு தன் அருளை வழங்குகிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
Arabic Tafsirs:
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ— فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ؕ— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ
10.108. -தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆன் உங்களிடம் வந்துள்ளது. யார் நேர்வழி பெற்று அதன் மீது நம்பிக்கை கொண்டாரோ அதன் பயன் அவருக்கே. ஏனெனில் அடியார்களின் கீழ்ப்படிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் வழிதவறினால் அதன் கேடு அவரை மட்டுமே சாரும். அடியார்களின் பாவங்களால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு பாதுகாப்பவன் அல்ல.”
Arabic Tafsirs:
وَاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَاصْبِرْ حَتّٰی یَحْكُمَ اللّٰهُ ۚ— وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟۠
10.109. -தூதரே!- உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக. அதன்படி செயல்படுவீராக. உம்மை எதிர்ப்பவர்களின் தொல்லைகளின் போதும் உமக்கு ஏவப்பட்டதை நீர் எடுத்துரைப்பதிலும் பொறுமையைக் கையாளவீராக! இவ்வுலகில் அவர்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்வதன் மூலமும் நிராகரித்த நிலையிலேயே அவர்கள் மரணித்தால் மறுமையில் அவர்களைத் தண்டிப்பதன் மூலமும் அல்லாஹ் அவர்கள் விடயத்தில் தீர்ப்பளிக்கும் வரை அதே நிலையிலேயே நிலைத்திருப்பீராக.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• إن الخير والشر والنفع والضر بيد الله دون ما سواه.
1. நலவும், கெடுதியும், பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. வேறுயாராலும் முடியாது.

• وجوب اتباع الكتاب والسُّنَّة والصبر على الأذى وانتظار الفرج من الله.
2. குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதும் அதில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ்விடம் விடுதலையை எதிர்பார்ப்பதும் கட்டாயமாகும்.

• آيات القرآن محكمة لا يوجد فيها خلل ولا باطل، وقد فُصِّلت الأحكام فيها تفصيلًا تامَّا.
3. குர்ஆனின் வசனங்கள் தீர்க்கமானவை. அதில் குறைகளோ அசத்தியமோ காணப்படாது. அதில் சட்டங்கள் மிகவும் விபரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

• وجوب المسارعة إلى التوبة والندم على الذنوب لنيل المطلوب والنجاة من المرهوب.
4.எதிர்பார்ப்பதை அடைந்து அஞ்சுவதை விட்டும் தப்புவதற்காக தவ்பாவின் பக்கமும் பாவங்களை விட்டு வருந்துவதன் பக்கமும் விரைவது அவசியமாகும்.

 
Translation of the Meanings Surah: Yūnus
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close