Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Aʿrāf   Vers:
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ— قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ— قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
7.138. மூஸா தம் கைத்தடியால் கடலை அடித்து அது பிளந்த போது இஸ்ராயீலின் மக்களை நாம் அதனை கடக்கச் செய்தோம். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை கடந்து சென்ற போது மூஸாவிடம் கூறினார்கள்: “மூஸாவே! இவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வணங்கும் சிலைகள் இருப்பதைப் போல எங்களுக்கும் ஒரு வணங்கும் சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வுக்குரிய மகத்துவத்தையும் ஏகத்துவத்தையும் அவனுக்குப் பொருந்தாத இணைவைப்பையும், மற்றவர்களை வணங்குtதையும் அறியாத கூட்டமாக உள்ளீர்கள்.”
Arabische Interpretationen von dem heiligen Quran:
اِنَّ هٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِیْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
7.139. சிலை வணக்கத்தில் ஈடுபடும் இவர்களிள் வழிபாடு அழிவுக்குள்ளாகிவிடும். அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணக்கத்தில் இணையாக்கியதால் அவர்கள் செய்து கொண்டிருந்த அனைத்து நல்ல விடயங்களும் அழிந்துவிடும்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
قَالَ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
7.140. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வின் மிகப் பெரிய சான்றுகளைப் பார்த்து விட்டீர்கள். உங்களின் எதிரிகளை அழித்து, பூமியில் உங்களுக்கு அதிகாரம் வழங்கி, இக்காலத்திலுள்ள உலகமக்களை விடவும் உங்களைச் சிறப்பித்துள்ளான். இவ்வாறிருக்கும் போது, என் சமூகமே! நீங்கள் வணங்குவதற்கு அல்லாஹ் அல்லாத ஒரு இறைவனை நான் எவ்வாறு தேடுவேன்?
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ— یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
7.141. இஸ்ராயீலின் மக்களே! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரின் அடிமைத்தனத்திலிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களின் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்து பெண் பிள்ளைகளை தங்களின் பணிவிடைக்காக உயிருடன் விட்டுவைத்து உங்களுக்கு விதவிதமான இழிவுகளை அளித்துக் கொண்டிருந்தார்கள். பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றியதில் உங்கள் இறைவனிடமிருந்து மிகப் பெரும் நன்றியை வேண்டி நிற்கும் சோதனை இருக்கின்றது.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ— وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
7.142. அல்லாஹ் தன் தூதர் மூஸாவுடன் இரகசியமாக உரையாட அவருக்கு முப்பது இரவுகளை வாக்களித்திருந்தான். பின்னர் பத்து இரவுகளை அதிகப்படுத்தி நாற்பது இரவுகளாக அதனை முழுமைப்படுத்தினான். மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற போது தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “ஹாரூனே! என் சமூகத்தில் என் பிரதிநிதியாக இருப்பீராக. அவர்களது விவகாரங்களை சிறந்த நிர்வாகம் மூலமும் மிருதுவான தன்மை மூலமும் சீர்படுத்துவீராக. பாவங்கள் புரிந்து குழப்பவாதிகளின் பாதையில் சென்றுவிடாதீர். பாவிகளுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர்.”
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ— قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ— قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ— فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ— فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟
7.143. மூஸா குறிப்பிட்ட நேரத்தில் தம் இறைவனுடன் உரையாட வந்து, அது முழுமையான நாற்பது இரவுகளாகும் அவருடைய இறைவன் ஏவல்கள், விலக்கல்கள் மற்றும் ஏனைய விடயங்களை அவருடன் பேசிய போது, அவரது உள்ளம் தனது இறைவனைக் காண ஆவல் கொண்டது. எனவே அவனைப் பார்க்கவேண்டுமெனக் கோரினார். அதற்கு அல்லாஹ் பின்வருமாறு விடையளித்தான், “இவ்வுலக வாழ்வில் நீர் அதற்குச் சக்தி பெறாததால் என்னை ஒருபோதும் காண முடியாது. ஆயினும் அந்த மலையைப் பாரும். அதில் என் பேரொளி வெளிப்பட்டும் அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காணலாம். அது பூமியோடு தரைமட்டமாகிவிட்டால் என்னைக் காணமுடியாது” என்றான். அல்லாஹ் அந்த மலையில் தன் பேரொளியை வெளிப்படுத்தியபோது அது தூள் தூளாகிவிட்டது. மூஸா மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த போது அவர் கூறினார்: “என் இறைவா, உனக்குப் பொருத்தமற்ற எல்லாவற்றையும் விட்டு நான் உன்னைத் தூய்மைப்படுத்துகிறேன். இவ்வுலகில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டதற்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். என் சமூகத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் நானே முதலாமவனாவேன்.”
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• تؤكد الأحداث أن بني إسرائيل كانوا ينتقلون من ضلالة إلى أخرى على الرغم من وجود نبي الله موسى بينهم.
1. இஸ்ரவேலர்கள் - அல்லாஹ்வின் தூதர் மூஸா அலை அவர்கள் அவர்களிடையே இருந்த போதும் ஒரு வழிகேட்டிலிருந்து இன்னொரு வழிகேட்டை நோக்கிச் செல்பவர்களாக இருந்தார்கள் என்பதை நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.

• من مظاهر خذلان الأمة أن تُحَسِّن القبيح، وتُقَبِّح الحسن بمجرد الرأي والأهواء.
2. சமூகத்தின் பலவீனுத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று, வெறும் சிந்தனை மற்றும் மனஇச்சையின் அடிப்படையில் கெட்டவற்றை நல்லவையாகவும் நல்லவற்றைக் கெட்டவையாகவும் அச்சமுதாயம் கருதுவதாகும்.

• إصلاح الأمة وإغلاق أبواب الفساد هدف سام للأنبياء والدعاة.
3. சமூகத்தை சீர்படுத்துவதும் குழப்பங்களின் வாயில்களை அடைப்பதும் தூதர்கள் மற்றும் அழைப்பாளர்களின் ஓர் உயரிய இலக்காகும்.

• قضى الله تعالى ألا يراه أحد من خلقه في الدنيا، وسوف يكرم من يحب من عباده برؤيته في الآخرة.
4. இந்த உலகில் தன்னை எந்தப் படைப்பினமும் காணமுடியாது என்று அல்லாஹ் முடிவுசெய்துள்ளான். மறுமையில் தான் விரும்பும் அடியார்களை அவனைப் பார்ப்பதன் மூலம் கண்ணியப்படுத்துவான்.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Aʿrāf
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen