Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Ġāfir   Vers:
اِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا ؗ— وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
40.59. நிச்சயமாக மரணித்தவர்களுக்கு விசாரணைக்காக, கூலி கொடுப்பதற்காக மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் சந்தேகம் இல்லாமல் வந்தே தீரும். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதன் வருகையை நம்புவதில்லை. எனவேதான் அதற்காகத் தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ— اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
40.60. -மனிதர்களே!- உங்களின் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் மட்டுமே கேளுங்கள். என்னை மட்டுமே வணங்குங்கள். உங்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கிறேன். உங்களை மன்னித்து உங்களுக்குக் கருணை காட்டுகிறேன். நிச்சயமாக என்னை மாத்திரம் வணங்காமல் கர்வம் கொள்பவர்கள் மறுமை நாளில் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
Arabische Interpretationen von dem heiligen Quran:
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
40.61. அல்லாஹ்வே நீங்கள் நிம்மதியடைந்து, ஓய்வெடுப்பதற்காக இரவை இருளாகவும் நீங்கள் வேலை செய்வதற்காக பகலை பிரகாசமானதாகவும் ஆக்கித்தந்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிபவன். அவன் அவர்களின்மீது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தன் அருட்கொடைகளை முழுமைப்படுத்தியுள்ளான். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அவற்றிலிருந்து அவன் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَیْءٍ ۘ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؗ— فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
40.62. உங்களின் மீது அருட்கொடைகளைப் பொழிந்த அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை. அவனை வணங்குவதை விட்டும் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற மற்றவர்களை வணங்குவதன் பக்கம் எவ்வாறு நீங்கள் செல்லலாம்?
Arabische Interpretationen von dem heiligen Quran:
كَذٰلِكَ یُؤْفَكُ الَّذِیْنَ كَانُوْا بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
40.63. இவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனை மாத்திரம் வணங்குவதை விட்டு திருப்பப்பட்டதைப் போன்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் சான்றுகளை மறுக்கக்கூடியவர்களை சத்தியத்தின்பால் நேர்வழி பெறாமல் திருப்பி விடுகின்றோம். நேர்வழியின்பால் பாக்கியம் அளிக்கப்பட மாட்டார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ— فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
40.64. -மனிதர்களே!- அல்லாஹ்தான் உங்களுக்காக பூமியை நீங்கள் வசிப்பதற்கேற்ற இடமாகவும் வானத்தை விழுந்துவிடாமல் இருக்கும் உறுதியான முகடாகவும் ஆக்கினான். அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் உங்களை அழகிய முறையில் வடிவமைக்கிறான். தூய்மையான உணவிலிருந்து உங்களுக்கு உணவளிக்கிறான். இவ்வாறு உங்களின் மீது அருட்கொடைகளை பொழிந்தவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் பாக்கியம்மிக்கவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
هُوَ الْحَیُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ— اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
40.65. அவன் மரணிக்காத நித்திய ஜீவன். அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை. அவனுடைய திருப்தியை மட்டும் நாடியவர்களாக பிரார்த்தித்தவாறும் வணங்கியவாறும் அவனையே அழையுங்கள். அவனுடைய படைப்புகளில் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடாதீர்கள். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ— وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
40.66. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடிய பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளை நான் வணங்குவதைவிட்டும் அல்லாஹ் என்னைத் தடுத்துள்ளான். அவ்வாறு வணங்குவது தவறானது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என்னிடம் வந்துள்ளன. நான் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• دخول الدعاء في مفهوم العبادة التي لا تصرف إلا إلى الله؛ لأن الدعاء هو عين العبادة.
1. பிரார்த்தனை செய்வதும் வணக்க வழிபாட்டில் உள்ளவையாகும். பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஏனெனில் பிரார்த்தனை செய்வது வணக்கமாகும்.

• نعم الله تقتضي من العباد الشكر.
2. அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவனுக்கு நன்றிசெலுத்துவதை அடியானுக்கு வலியுறுத்துகின்றன.

• ثبوت صفة الحياة لله.
3. வாழ்வு என்னும் பண்பு அல்லாஹ்வுக்கு உள்ளது என்பது உறுதியாகிறது.

• أهمية الإخلاص في العمل.
4. உளத்தூய்மையுடன் செயல்படுவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Ġāfir
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen