Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: An-Naḥl   Vers:
وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟۠
16.65. அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் காய்ந்த, வறண்ட பூமியில் தாவரங்களை வெளிப்படுத்தி அதனை உயிர்ப்பிக்கிறான் செழிப்பாக்குகிறான். அவன் வானத்திலிருந்து மழையை இறக்குவதிலும் அதன் மூலம் வறண்ட பூமியில் தாவரங்களை முளையச் செய்வதிலும் அல்லாஹ்வின் வசனங்களை செவியேற்று சிந்திக்கக் கூடியவர்களுக்கு அவனுடைய வல்லமையை எடுத்துரைக்கும் தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاِنَّ لَكُمْ فِی الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ— نُسْقِیْكُمْ مِّمَّا فِیْ بُطُوْنِهٖ مِنْ بَیْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآىِٕغًا لِّلشّٰرِبِیْنَ ۟
16.66. -மக்களே!- உங்களுக்கு ஆடு, மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகளில், படிப்பினை பெறுபவர்களுக்கு, படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் உடம்பிலுள்ள இரத்தத்திற்கும் மத்தியிலிருந்து வெளியேறும் பாலை அதன் மடியினூடாக நாம் உங்களுக்குப் புகட்டுகின்றோம். அவ்வாறிருந்தும் அருந்துவோருக்கு நல்ல, சுவையான, தூய்மையான சுத்தமான பாலாக வெளிவருகின்றது.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَمِنْ ثَمَرٰتِ النَّخِیْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ مِنْهُ سَكَرًا وَّرِزْقًا حَسَنًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
16.67. நாம் உங்களுக்கு உணவாக வழங்கும் பேரீச்சம் பழம் மற்றும் திராட்சை பழங்களிலும் உங்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. நீங்கள் அவற்றிலிருந்து அறிவை மழுங்கடிக்கும் போதைப் பொருளையும் பெறுகிறீர்கள். அது நல்லதல்ல. மேலும் அதிலிருந்து பேரீத்தம் பழம், காய்ந்த முந்திரி, வினாக்கிரி, பேரீத்தம்பானி போன்ற உங்களுக்குப் பயனுள்ள நல்ல ஆகாரத்தையும் நீங்கள் பெறுகிறீர்கள். நிச்சயமாக இதில் அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் அடியார்களுக்குப் புரிந்த அருட்கொடைகளையும் அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன. அவர்கள்தாம் படிப்பினை பெறுவார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاَوْحٰی رَبُّكَ اِلَی النَّحْلِ اَنِ اتَّخِذِیْ مِنَ الْجِبَالِ بُیُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا یَعْرِشُوْنَ ۟ۙ
16.68. -தூதரே!- உம் இறைவன் தேனீக்களுக்கு உள்ளுதிப்பை ஏற்படுத்தி பின்வருமாறு வழிகாட்டினான்: “நீ மலைகளிலும், மரங்களிலும் மக்கள் கட்டும் கட்டங்களிலும், கூரைகளிலும் உன் கூடுகளை அமைத்துக் கொள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
ثُمَّ كُلِیْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِیْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا ؕ— یَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِیْهِ شِفَآءٌ لِّلنَّاسِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
16.69. பின்னர் நீ விரும்பும் விளைச்சல்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள். உன் இறைவன் உனக்குக் காட்டிய வசப்படுத்தப்பட்ட பாதைகளில் செல். அந்த தேனீக்களின் வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களுடைய தேன் வெளிப்படைகிறது. அதிலே வெள்ளை, மஞ்சள், மற்றும் ஏனைய நிறங்களும் உண்டு. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கின்றது. அதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். தேனீக்கு அதனை உதிப்பாக்குவதிலும் அதன் வயிற்றிலிருந்து வெளிப்படும் தேனிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையையும் அவனது படைப்பினங்களின் காரியங்களை நிர்வகிப்பதை அறிவிக்கக்கூடிய அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள்தாம் படிப்பினை பெறக்கூடியவர்களாவர்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ یَتَوَفّٰىكُمْ وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْ لَا یَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌ قَدِیْرٌ ۟۠
16.70. அல்லாஹ் உங்களை முன்மாதிரியின்றி படைத்தான். பின்னர் உங்களின் தவணைகள் முடிந்து விட்டால் உங்களை மரணிக்கச் செய்கிறான். தாம் அறிந்துகொண்ட எதையும் அறிந்துகொள்ள முடியாதவாறு வாழ்வில் மிக மோசமான பருவமான தள்ளாத வயது வரை தள்ளப்படுபவரும் உங்களில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். அடியார்களின் செயல்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் வல்லமையுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ فِی الرِّزْقِ ۚ— فَمَا الَّذِیْنَ فُضِّلُوْا بِرَآدِّیْ رِزْقِهِمْ عَلٰی مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَهُمْ فِیْهِ سَوَآءٌ ؕ— اَفَبِنِعْمَةِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
16.71. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்தில் சிலரைவிட சிலரை சிறப்பித்துள்ளான். உங்களில் ஏழை, பணக்காரன், தலைவன், தொண்டன் ஆகியவர்களை ஏற்படுத்தியுள்ளான். யாருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தில் சிறப்பை வழங்கியுள்ளானோ அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதை தங்களின் அடிமைகளுக்கு அளித்து அவர்களையும் உரிமையில் சமமானவர்களாக ஆக்குவதில்லை. எனவே தங்களின் அடிமைகள் தங்களுக்கு இணையானவர்களாக இருப்பதை அவர்கள் விரும்பாத போது, எவ்வாறு அல்லாஹ்வின் அடிமைகள் அவனுக்கு இணையாக இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? இது எவ்வளவு பெரும் அநியாயம்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுப்பதற்கு இதை விட என்ன உள்ளது?!
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِیْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ— اَفَبِالْبَاطِلِ یُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ یَكْفُرُوْنَ ۟ۙ
16.72. -மக்களே- அல்லாஹ் உங்கள் இனத்திலிருந்தே துணைகளை உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவர்களைக் கொண்டு நீங்கள் நிம்மதியடைகிறீர்கள். உங்கள் மனைவியரிலிருந்து குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் வழங்கினான். தூய்மையான உணவுப் பொருள்களில் -மாமிசம், தானியங்கள், பழங்கள் போன்ற- நல்லவற்றை உங்களுக்கு வழங்கியுள்ளான். எண்ணிமுடிக்க முடியாத அல்லாஹ்வின் அதிகமான அருட்கொடைகளை நிராகரித்து, அவனை மாத்திரமே நம்பிக்கை கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தாது, தவறான சிலைகளையா, விக்கிரகங்களையுமா அவர்கள் நம்பிக்கைகொள்கின்றனர்?
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• جعل تعالى لعباده من ثمرات النخيل والأعناب منافع للعباد، ومصالح من أنواع الرزق الحسن الذي يأكله العباد طريًّا ونضيجًا وحاضرًا ومُدَّخَرًا وطعامًا وشرابًا.
1. அல்லாஹ் பேரீச்சை மற்றும் திராட்சை மரங்களிலிருந்து அடியார்களுக்கு பல பயன்களையும் நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளான். அடியார்கள் அவற்றிலிருந்து புத்தம்புதிய, பழுத்த பழங்களையும் உடனுக்குடன் உண்ணக்கூடிய, சேகரித்து வைத்து உண்ணக்கூடிய உணவுகளையும், உணவாகவும் பானமாகவும் இருக்கக்கூடிய பொருள்களையும் பெறுகின்றனர்.

• في خلق النحلة الصغيرة وما يخرج من بطونها من عسل لذيذ مختلف الألوان بحسب اختلاف أرضها ومراعيها، دليل على كمال عناية الله تعالى، وتمام لطفه بعباده، وأنه الذي لا ينبغي أن يوحَّد غيره ويُدْعى سواه.
2. அல்லாஹ் சிறிய தேனீக்களைப் படைத்து அவற்றின் வயிற்றிலிருந்து இடங்களுக்கேற்ப பல்வேறு நிறங்களுடைய சுவையான தேன் வெளிவருவதில், அடியார்கள் மீதான அல்லாஹ்வின் பராமரிப்பு மற்றும் அக்கறையும் வேறு எவரும் ஏகத்துவப்படுத்தப்படவோ அழைக்கப்படவோ கூடாது என்பதற்கான சான்றும் இருக்கின்றது.

• من منن الله العظيمة على عباده أن جعل لهم أزواجًا ليسكنوا إليها، وجعل لهم من أزواجهم أولادًا تقرُّ بهم أعينهم، ويخدمونهم ويقضون حوائجهم، وينتفعون بهم من وجوه كثيرة.
3. அல்லாஹ் அடியார்கள் மீது பொழிந்த பெரும் அருட்கொடைகளில் ஒன்று, அவன் அவர்கள் நிம்மதியடைவதற்காக அவர்களிலிருந்தே ஜோடிகளை ஏற்படுத்தியுள்ளான். அந்த ஜோடிகளின் மூலம் அவர்களுக்குக் குழந்தைகளையும் வழங்கியுள்ளான். அந்தக் குழந்தைகளைக்கொண்டு அவர்கள் கண்குளிர்ச்சியடைகிறார்கள். அந்தக் குழந்தைகள் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். பல வகைகளில் அவர்கள் மூலம் பயனடைகின்றார்கள்.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: An-Naḥl
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen