Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: আল-মুতাফ্ফিফীন   আয়াত:

அல்முதப்பிபீன்

وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ ۟ۙ
மோசடிக்காரர்களுக்குக் கேடுதான்.
আৰবী তাফছীৰসমূহ:
الَّذِیْنَ اِذَا اكْتَالُوْا عَلَی النَّاسِ یَسْتَوْفُوْنَ ۟ؗۖ
அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (அளவையில் பொருளை) நிறைவாக வாங்குகின்றனர்.
আৰবী তাফছীৰসমূহ:
وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ یُخْسِرُوْنَ ۟ؕ
அவர்களுக்காக (இவர்கள்) அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்காக நிறுத்துக் கொடுக்கும் போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக் கிறார்கள். (நஷ்டப்படுத்துகிறார்கள்.)
আৰবী তাফছীৰসমূহ:
اَلَا یَظُنُّ اُولٰٓىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَ ۟ۙ
“நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா?
আৰবী তাফছীৰসমূহ:
لِیَوْمٍ عَظِیْمٍ ۟ۙ
மகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்).
আৰবী তাফছীৰসমূহ:
یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍ ۟ؕ
அவ்வாறல்ல, நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَاۤ اَدْرٰىكَ مَا سِجِّیْنٌ ۟ؕ
இன்னும் சிஜ்ஜீன் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
আৰবী তাফছীৰসমূহ:
كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ؕ
(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.
আৰবী তাফছীৰসমূহ:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
আৰবী তাফছীৰসমূহ:
الَّذِیْنَ یُكَذِّبُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟ؕ
(அவர்கள்) கூலி நாளைப் பொய்ப் பிக்கின்றனர்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
பெரும் பாவி, வரம்பு மீறுகிறவன் எல்லோரையும் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
আৰবী তাফছীৰসমূহ:
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ؕ
அவன் மீது நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்.
আৰবী তাফছীৰসমূহ:
كَلَّا بَلْ ٚ— رَانَ عَلٰی قُلُوْبِهِمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
அவ்வாறல்ல, மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடின.
আৰবী তাফছীৰসমূহ:
كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ یَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ ۟ؕ
அவ்வாறல்ல, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் தடுக்கப்பட்டவர்கள்தான். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.)
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِیْمِ ۟ؕ
பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ؕ
பிறகு, “நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும்.
আৰবী তাফছীৰসমূহ:
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَ ۟ؕ
அவ்வாறல்ல, நிச்சயமாக நல்லோரின் பதிவேடு இல்லிய்யூனில் தான் இருக்கும்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَ ۟ؕ
(நபியே!) ‘இல்லிய்யூன்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
আৰবী তাফছীৰসমূহ:
كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ۙ
(அது நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.
আৰবী তাফছীৰসমূহ:
یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَ ۟ؕ
நெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
நிச்சயமாக நல்லோர் ’நயீம்’ என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
عَلَی الْاَرَآىِٕكِ یَنْظُرُوْنَ ۟ۙ
கட்டில்கள் மீது (அமர்ந்தவாறு) பார்ப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
تَعْرِفُ فِیْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِیْمِ ۟ۚ
அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (நபியே! நீர்) அறிவீர்.
আৰবী তাফছীৰসমূহ:
یُسْقَوْنَ مِنْ رَّحِیْقٍ مَّخْتُوْمٍ ۟ۙ
முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து புகட்டப்படுவார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
خِتٰمُهٗ مِسْكٌ ؕ— وَفِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنٰفِسُوْنَ ۟ؕ
அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمِزَاجُهٗ مِنْ تَسْنِیْمٍ ۟ۙ
இன்னும் அதன் கலவை ’தஸ்னீம்’ லிருந்து (இருக்கும்).
আৰবী তাফছীৰসমূহ:
عَیْنًا یَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَ ۟ؕ
(தஸ்னீம் அது) ஒரு நீரூற்று, நெருக்கமாக்கப்பட்டவர்கள் அதில் பருகுவார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الَّذِیْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا یَضْحَكُوْنَ ۟ؗۖ
நிச்சயமாக குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَاِذَا مَرُّوْا بِهِمْ یَتَغَامَزُوْنَ ۟ؗۖ
இன்னும் அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கண் ஜாடை காட்டுகிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِیْنَ ۟ؗۖ
இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் அவர்கள் திரும்பும்போது மகிழ்ச்சியாளர் களாகத் திரும்புகிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوْنَ ۟ۙ
அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைப் பார்க்கும்போது “நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்தான்” எனக் கூறுகிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَاۤ اُرْسِلُوْا عَلَیْهِمْ حٰفِظِیْنَ ۟ؕ
(இப்பாவிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!
আৰবী তাফছীৰসমূহ:
فَالْیَوْمَ الَّذِیْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ یَضْحَكُوْنَ ۟ۙ
ஆகவே, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
عَلَی الْاَرَآىِٕكِ ۙ— یَنْظُرُوْنَ ۟ؕ
கட்டில்கள் மீது (அமர்ந்தவர்களாக பாவிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟۠
நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா?
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: আল-মুতাফ্ফিফীন
ছুৰাসমূহৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

বন্ধ