Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: আল-আম্বীয়া   আয়াত:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِیْۤ اِلَیْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ ۟
நிச்சயமாக விஷயமாவது: “என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. ஆகவே, என்னையே வணங்குங்கள்.” என்று நாம் வஹ்யி அறிவித்தே தவிர உமக்கு முன்னர் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை.
আৰবী তাফছীৰসমূহ:
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ— بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۟ۙ
“ரஹ்மான் (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் மகா தூயவன். மாறாக, (அந்த வானவர்கள்) அவனுடைய கண்ணியமான அடியார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
لَا یَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ یَعْمَلُوْنَ ۟
அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். அவர்கள் அவனுடைய கட்டளையைக் கொண்டே (எதையும்) செய்கின்றனர்.
আৰবী তাফছীৰসমূহ:
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یَشْفَعُوْنَ ۙ— اِلَّا لِمَنِ ارْتَضٰی وَهُمْ مِّنْ خَشْیَتِهٖ مُشْفِقُوْنَ ۟
அவர்களுக்கு (வானவர்களுக்கு) முன் உள்ளதையும் அவர்களுக்குப் பின் உள்ளதையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். அவர்கள் அவனுடைய அச்சத்தால் பயப்படுகிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَنْ یَّقُلْ مِنْهُمْ اِنِّیْۤ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِیْهِ جَهَنَّمَ ؕ— كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟۠
அவர்களில் யார் “நிச்சயமாக அவனை அன்றி நான்தான் கடவுள் என்று கூறுவாரோ அவருக்கு நரகத்தையே கூலியாக கொடுப்போம். இவ்வாறு தான் அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம்.
আৰবী তাফছীৰসমূহ:
اَوَلَمْ یَرَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ— وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَیْءٍ حَیٍّ ؕ— اَفَلَا یُؤْمِنُوْنَ ۟
அவர்கள் அறியவேண்டாமா? நிச்சயமாக வானங்களும் பூமியும் சேர்ந்து இருந்தன. நாம் தான் அவற்றைப் பிளந்தோம். இன்னும் தண்ணீரிலிருந்து உயிருள்ள எல்லா வஸ்துகளையும் ஏற்படுத்தினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா?
আৰবী তাফছীৰসমূহ:
وَجَعَلْنَا فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِهِمْ وَجَعَلْنَا فِیْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
பூமியில் நாம் மலைகளை ஏற்படுத்தினோம், அது (-பூமி) அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக. இன்னும் நாம் அவர்களுக்கு அதில் (-பூமியில்) விசாலமான பாதைகளை, அவர்கள் (அவற்றில் செல்ல) வழிபெறுவதற்காக ஏற்படுத்தினோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ— وَّهُمْ عَنْ اٰیٰتِهَا مُعْرِضُوْنَ ۟
வானத்தை பாதுகாக்கப்பட்ட (உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம் ஆக்கினோம். அவர்கள் அதன் அத்தாட்சிகளைப் (பார்த்தும் நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கின்றார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَهُوَ الَّذِیْ خَلَقَ الَّیْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
அவன்தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் (ஒரு) சுற்று வட்டத்தில் நீந்துகின்றன.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَ ؕ— اَفَاۡىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ ۟
உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் (இப்பூமியில்) நிரந்தரத்தை நாம் ஆக்கவில்லை. ஆகவே, நீர் மரணித்து விட்டால் அவர்கள் (இப்பூமியில்) நிரந்தரமானவர்களாக இருந்து விடுவார்களா?
আৰবী তাফছীৰসমূহ:
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ— وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً ؕ— وَاِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதாகும். சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: আল-আম্বীয়া
ছুৰাসমূহৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

বন্ধ