Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: মুহাম্মদ   আয়াত:
وَلَوْ نَشَآءُ لَاَرَیْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِیْمٰهُمْ ؕ— وَلَتَعْرِفَنَّهُمْ فِیْ لَحْنِ الْقَوْلِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ اَعْمَالَكُمْ ۟
30. (நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உமக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக்குறியைக் கொண்டே நீரும் அவர்களை அறிந்து கொள்வீர். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீர் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கறிவான்.
আৰবী তাফছীৰসমূহ:
وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ— وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟
31. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) சிரமங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவர்கள் என்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரை, உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدٰی ۙ— لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ— وَسَیُحْبِطُ اَعْمَالَهُمْ ۟
32. நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கிறார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான்.
আৰবী তাফছীৰসমূহ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ ۟
33. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்கள் நன்மைகளை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۟
34. எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்துவிடுகிறார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை.
আৰবী তাফছীৰসমূহ:
فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَی السَّلْمِ ۖۗ— وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ۖۗ— وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ یَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ۟
35. (நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியம் இழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கிறான். உங்கள் நன்மைகளில் ஒன்றையும் அவன் உங்களுக்கு குறைத்துவிட மாட்டான்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ— وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا یُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا یَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ۟
36. இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான். நீங்கள் மெய்யாகவே நம்பிக்கைகொண்டு அவனுக்குப் பயந்து நடந்துகொண்டால், உங்கள் நற்கூலிகளை உங்களுக்கு வழங்குவான்.உங்கள் பொருள்களை அவன் (தனக்காக) உங்களிடம் கேட்கவில்லை. (நன்மைக்காகவே கேட்கிறான்.)
আৰবী তাফছীৰসমূহ:
اِنْ یَّسْـَٔلْكُمُوْهَا فَیُحْفِكُمْ تَبْخَلُوْا وَیُخْرِجْ اَضْغَانَكُمْ ۟
37. அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்கள் கெட்ட எண்ணங்களை வெளியாக்கி விடுவான்.
আৰবী তাফছীৰসমূহ:
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ— فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ— وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ— وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ— وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ— ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠
38. (மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: মুহাম্মদ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

শ্বাইখ আব্দুল হামীদ আল-বাক্বৱী চাহাবে অনুবাদ কৰিছে।

বন্ধ