للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: النحل   آية:
وَتَحْمِلُ اَثْقَالَكُمْ اِلٰی بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِیْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ ؕ— اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
16.7. நாம் உங்களுக்காக படைத்த இந்த கால்நடைகள் உங்களின் பயணங்களில் நீங்கள் கடும் சிரமத்துடனேயன்றி அடைய முடியாத இடங்களுக்கும் உங்களின் பாரமான பொருள்களை சுமந்து செல்கிறது. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் இறைவன் பரிவு மிக்கவனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் உங்களுக்காக இந்த கால்நடைகளை வசப்படுத்தித் தந்துள்ளான்.
التفاسير العربية:
وَّالْخَیْلَ وَالْبِغَالَ وَالْحَمِیْرَ لِتَرْكَبُوْهَا وَزِیْنَةً ؕ— وَیَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
16.8. நீங்கள் பயணம் செய்வதற்காகவும் உங்களின் பொருள்களை சுமந்து செல்வதற்காகவும் உங்களுக்கு அலங்காரமாக அமையும் பொருட்டும் அவன் குதிரை, கோவேரு கழுதை, கழுதை ஆகிய கால்நடைகளை உங்களுக்காக படைத்துள்ளான். தான் படைப்பதற்கு நாடியவற்றில் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.
التفاسير العربية:
وَعَلَی اللّٰهِ قَصْدُ السَّبِیْلِ وَمِنْهَا جَآىِٕرٌ ؕ— وَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟۠
16.9. தனது திருப்பொருத்தத்திற்கு இட்டுச்செல்லும் இஸ்லாம் என்னும் நேரான வழியைத் தெளிவுபடுத்துவது அல்லாஹ்வின் கடமையாகும். வழிகளில் சத்தியத்தை விட்டும் கோணலான ஷைத்தானிய வழிகளும் இருக்கின்றன. இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து வழிகளும் கோணலானவையே. அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஈமானை வழங்க வேண்டும் என நாடியிருந்தால் அவ்வாறு ஈமானை வழங்கியிருப்பான்.
التفاسير العربية:
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِیْهِ تُسِیْمُوْنَ ۟
16.10. அவனே உங்களுக்காக மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அந்த நீரிலிருந்தே நீங்கள் பருகுகிறீர்கள்; உங்கள் கால்நடைகளுக்கும் நீர் புகட்டுகிறீர்கள். அந்த நீரிலிருந்து உங்கள் கால்நடைகள் மேயும் புற்பூண்டுகளும் உண்டாகின்றன.
التفاسير العربية:
یُنْۢبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّیْتُوْنَ وَالنَّخِیْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
16.11. அந்த நீரைக்கொண்டு நீங்கள் உண்ணும் பயிர்களையும் ஸைதூன், பேரீச்சை, திராட்சை இன்னும் எல்லா வகையான பழங்களையும் அல்லாஹ் உங்களுக்காக முளைக்கச் செய்கிறான். அந்த நீரிலும் அதிலிருந்து விளையக் கூடியவைகளிலும் அல்லாஹ்வின் படைப்பைச் சிந்தித்து அதன் மூலம் அவனது மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் மக்களுக்கு அவனது வல்லமையை அறிவிக்கக்கூடிய அத்தாட்சிகள் இருக்கின்றன.
التفاسير العربية:
وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۙ— وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ— وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟ۙ
16.12. நீங்கள் ஓய்வெடுப்பதற்காகவும் அமைதி பெறுவதற்காகவும் இரவையும், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை சம்பாதிப்பதற்காக பகலையும் அவன் ஆக்கித் தந்துள்ளான். சூரியனை உங்களுக்காக வசப்படுத்தி அதனை ஒளிமிக்கதாகவும் சந்திரனை பிரகாசமானதாகவும் ஆக்கியுள்ளான். அவனது விதியின் பிரகாரம் நட்சத்திரங்கள் உங்களுக்கு வசப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழிகாட்டலைப் பெறுகின்றீர்கள். நேரங்களையும் இன்னுப் பலவற்றையும் அறிந்து கொள்கிறீர்கள். இவையனைத்தையும் வசப்படுத்தித் தந்துள்ளதில் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள்தாம் அவற்றின் நோக்கத்தை உணர்ந்து கொள்வார்கள்.
التفاسير العربية:
وَمَا ذَرَاَ لَكُمْ فِی الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّذَّكَّرُوْنَ ۟
16.13. அவன் பூமியில் படைத்த பல்வேறு நிறங்களுடைய கனிமங்கள், உயிரினங்கள், தாவரங்கள், பயிர்கள் ஆகியவற்றை அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேற்கூறப்பட்ட படைப்புகளிலும் அவற்றை வசப்படுத்தித் தந்திருப்பதிலும் படிப்பினை பெறக்கூடிய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்தக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள்தாம் அல்லாஹ் வல்லமையுடையவன், அருட்கொடையாளன் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
التفاسير العربية:
وَهُوَ الَّذِیْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ— وَتَرَی الْفُلْكَ مَوَاخِرَ فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
16.14. நீங்கள் புத்தம் புது கடல் மீனைப் பிடித்து உண்பதற்கும், நீங்களும் உங்களின் பெண்களும் அலங்காரத்திற்காக அணியும் முத்து போன்ற ஆபரணங்களை எடுப்பதற்கும் அவனே கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். எனவே உங்களுக்கு அதில் பயணம் செய்து அதிலுள்ளவற்றைக் கண்டடுப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தித்தந்தான். கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதை நீர் காண்பீர். வியாபார இலாபத்தில் கிடைக்கும் அல்லாஹ்வின் அருளைத் தேடியும் அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தி, அவன் ஒருவனையே வணங்குவதற்காகவும் நீங்கள் அந்த கப்பல்களில் பயணம் செய்கிறீர்கள்.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• من عظمة الله أنه يخلق ما لا يعلمه جميع البشر في كل حين يريد سبحانه.
1.அல்லாஹ் தான் நாடும் பொழுதெல்லாம் எந்த மனிதனும் அறியாததைப் படைப்பது அல்லாஹ்வின் மகத்துவத்தில் உள்ளதாகும்.

• خلق الله النجوم لزينة السماء، والهداية في ظلمات البر والبحر، ومعرفة الأوقات وحساب الأزمنة.
2. அல்லாஹ் நட்சத்திரங்களை வானத்தின் அலங்காரத்திற்காகவும், தரை மற்றும் கடலின் இருள்களில் வழிகளை அறிந்து கொள்வதற்காகவும், நேரங்களை அறிந்து, காலங்களை கணக்கிட்டுக் கொள்வதற்காகவும் படைத்துள்ளான்.

• الثناء والشكر على الله الذي أنعم علينا بما يصلح حياتنا ويعيننا على أفضل معيشة.
3. நமது வாழ்வைச் சீராக்கி சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு உதவி புரியும் வகையில் நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனை புகழ்தல்.

• الله سبحانه أنعم علينا بتسخير البحر لتناول اللحوم (الأسماك)، واستخراج اللؤلؤ والمرجان، وللركوب، والتجارة، وغير ذلك من المصالح والمنافع.
,4. மீன்களைச் சாப்பிடவும், முத்து பவளம் என்பவற்றைப் பெறவும், பயணம் செய்யவும், வியாபாரத்திற்காகவும், இன்னும் பல்வேறு நலன்கள் பயன்களுக்காகவும் கடலை வசப்படுத்தி எமக்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான்.

 
ترجمة معاني سورة: النحل
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق