Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አዕራፍ   አንቀፅ:
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ— اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
7.131. செழிப்பு, விளைச்சல், விலை குறைவு ஆகிய நன்மைகள் பிர்அவ்னின் கூட்டத்தாருக்கு ஏற்பட்ட போது, “இவையனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதென்றால் நாங்கள் அவற்றிற்குத் தகுதியானவர்கள் மற்றும் அவை எங்களுக்குரியது என்பதனால்தான்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு வறுமையோ பஞ்சமோ நோய்களோ வேறு சோதனைகளோ ஏற்பட்டால் மூஸாவினாலும் அவருடன் உள்ள இஸ்ரவேலர்களாலும் ஏற்பட்ட துர்ச்சகுனமாகக் கருதினார்கள். உண்மையில் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ் விதிப்படியே ஏற்படுகிறது. மூஸா அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை புரிந்ததைத் தவிர மூஸாவுக்கும் அவர்களின் விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவேதான் அல்லாஹ் அல்லாதவர்களின்பால் அதனைத் தொடர்புபடுத்துகிறார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ— فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
7.132. பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் சத்தியத்தை விட்டு பிடிவாதமாகக் கூறினார்கள்: “நீர் எங்களிடம் எத்தகைய சான்றுகளையம், ஆதாரங்களையும் கொண்டுவந்தாலும், எங்களிடமுள்ளவற்றை விட்டும் எம்மைத் திருப்புவதற்கு அவை அசத்தியம், நீர் கொண்டுவந்ததே உண்மை என்பதை நிரூபிக்க எத்தகைய ஆதாரங்களை நீர் கொண்டுவந்தாலும் நாங்கள் ஒருபோதும் உம்மை உண்மைப்படுத்த மாட்டோம்.
ዓረብኛ ተፍሲሮች:
فَاَرْسَلْنَا عَلَیْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۫— فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
7.133. அவர்களின் நிராகரிப்பு மற்றும் பிடிவாதத்தின் காரணமாக அவர்கள் மீது பெருமழையைத் தண்டனையாக அனுப்பினோம். அது அவர்களின் வயல்களையும் விளைச்சல்களையும் மூழ்கடித்தது. அவர்களின் மீது வெட்டுக்கிளிகளை அனுப்பினோம். அவை அவர்களின் விளைச்சல்களை தின்றுவிட்டன. அவர்களது பயிர்களைத் தாக்கும் அல்லது அவர்களது முடியில் தொந்தரவு கொடுக்கும் பேன்களை அனுப்பினோம். இன்னும் தவளைகளையும் அவர்களின் மீது அனுப்பினோம். அவை அவர்களின் பாத்திரங்களில் நிரம்பி, உணவுப் பொருள்களை நாசமாக்கி விட்டன. தூக்கத்தைக் கெடுத்துவிட்டன. அவர்களின் மீது இரத்தத்தை அனுப்பி கிணறுகளையும் ஆறுகளையும் இரத்தமாக மாற்றினோம். அனைத்தையும் தனித் தனியான தெளிவான சான்றுகளாக,ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பினோம். இத்தனை தண்டனைகளைக் கண்ட பின்னரும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மூஸா கொண்டுவந்ததை உண்மைப்படுத்தாமல் கர்வம் கொண்டார்கள். பாவங்கள் புரியும், அசத்தியத்தை விட்டும் விலகாத, நேர்வழிபெறாத மக்களாக அவர்கள் இருந்தார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ— لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
7.134. இந்த வேதனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்ட போது மூஸாவிடம் வந்து, “மூஸாவே! உமக்கு இறைவன் வழங்கிய தூதுத்துவத்தைக் கொண்டு, தவ்பாவின் மூலம் வேதனையை நீக்குவதாக உமக்கு அவன் வழங்கிய வாக்குறுதியைக் கொண்டு எங்களை விட்டும் வேதனையை அகற்றும்படி எங்களுக்காக பிரார்த்தனை புரிவீராக. எங்களை விட்டும் வேதனையை நீர் அகற்றினால் நாங்கள் உம்மீது நம்பிக்கைகொள்வோம்; இஸ்ராயீலின் மக்களுக்கும் விடுதலையளித்து உம்முடன் அனுப்புவோம்.
ዓረብኛ ተፍሲሮች:
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰۤی اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
7.135. அவர்களை மூழ்கடித்து அழிப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட காலகட்டம் வரை அவர்களை விட்டும் வேதனையை அகற்றியபோது, ஏற்றுக் கொள்வதாகவும் இஸ்ரவேலர்களை விடுதலை செய்வதாகவும் அளித்த தமது வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டார்கள். அவர்கள் தமது நிராகரிப்பில் நிலைத்திருந்து, இஸ்ராயீலின் மக்களை மூஸாவுடன் அனுப்பாமல் தடுத்துக் கொண்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِی الْیَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
7.136. அவர்களை அழிப்பதற்கான குறிப்பிட்ட தவணை நெருங்கிய போது, சந்தேகமற்ற சத்தியத்தை புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்ததனாலும் அவர்களைக் கடலில் மூழ்கடித்து நம்முடைய வேதனையை அவர்கள் மீது இறக்கினோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِیْنَ كَانُوْا یُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰی عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— بِمَا صَبَرُوْا ؕ— وَدَمَّرْنَا مَا كَانَ یَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا یَعْرِشُوْنَ ۟
7.137. பிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அடிமைப்படுத்தி வைத்திருந்த இஸ்ராயீலின் மக்களை பூமியின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உரிமையாளர்களாக்கினோம். இங்கு பூமி என்பது ஷாம் தேசத்தைக் குறிக்கும். அங்கு பயிர்களையும் பழங்களையும் முழுமையாக விளையச் செய்து அல்லாஹ் அருள் செய்திருந்தான். தூதரே! (“பூமியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நாம் கிருபை செய்து அவர்களை வழிகாட்டிகளாக்கவும், வாரிசுகளாக்கவும் நாடுகிறோம்”) (28:5) என்ற உம் இறைவனின் அழகிய வார்த்தை நிறைவேறிவிட்டது. பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையாக எதிர்கொண்டதனால் அவர்களுக்கு அல்லாஹ் பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். பிர்அவ்ன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பயிர் நிலங்களையும் வசிப்பிடங்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிந்த மாளிகைகளையும் நாம் அழித்துவிட்டோம்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الخير والشر والحسنات والسيئات كلها بقضاء الله وقدره، لا يخرج منها شيء عن ذلك.
1. நலவு, கெடுதி, நன்மைகள், தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன. எதுவும் அவனது விதியைவிட்டு வெளியேற முடியாது.

• شأن الناس في وقت المحنة والمصائب اللجوء إلى الله بدافع نداء الإيمان الفطري.
2. சோதனைகள் மற்றும் துன்பங்களின் போது இயல்பாகவே காணப்படும் நம்பிக்கையின் பிரகாரம் அல்லாஹ்விடம் திரும்புவது மனிதர்களின் பண்பாகும்.

• يحسن بالمؤمن تأمل آيات الله وسننه في الخلق، والتدبر في أسبابها ونتائجها.
3. நம்பிக்கையாளன் அல்லாஹ்வின் சான்றுகளையும், படைப்புகளில் அவன் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளையும் உற்றுநோக்குவதோடு அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

• تتلاشى قوة الأفراد والدول أمام قوة الله العظمى، والإيمان بالله هو مصدر كل قوة.
4. தனிமனித பலமும் நாட்டின் பலமும் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வது பலத்தின் மூலமாகும்.

• يكافئ الله تعالى عباده المؤمنين الصابرين بأن يمكِّنهم في الأرض بعد استضعافهم.
5. நம்பிக்கைகொண்ட, பொறுமையைக் கடைப்பிடித்த தன் அடியார்களுக்கு பலவீனத்துக்குப் பின் அல்லாஹ் பூமியில் ஆட்சியதிகாரம் வழங்கி வெகுமதி வழங்குகிறான்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አዕራፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት