Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አዕራፍ   አንቀፅ:
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ— اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
7.82. அருவருப்பான இந்த காரியத்தை விட்டும் அவர் தம் சமூகத்தினரைத் தடுத்த போது சத்தியத்தைப் புறக்கணித்தவர்களாகக் கூறினார்கள்: “லூத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நம்முடைய இந்த செயலை விட்டும் அவர்கள் பரிசுத்தமானவர்களாம். எனவே நம்மிடையே தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.”
ዓረብኛ ተፍሲሮች:
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖؗ— كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
7.83. இரவு நேரத்தில் வேதனை நிகழும் ஊரிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டு அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம். ஆனால் அவருடைய மனைவியைத் தவிர. அவளும் தனது சமூகத்துடன் எஞ்சியிருந்தாள். வேதனை அவளையும் சூழ்ந்துகொண்டது. எனவே அவர்களைத் தாக்கிய வேதனை இவளையும் தாக்கியது.
ዓረብኛ ተፍሲሮች:
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ؕ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟۠
7.84. நாம் அவர்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்தோம். களி மண்ணாலான கற்களைக் கொண்டு அவர்களை எறிந்தோம். அந்த ஊரை தலைகீழாக்கிவிட்டோம். தூதரே! குற்றவாளிகளான லூத்தின் சமூகத்தினரின் முடிவு என்னவாயிற்று? என்பதை சிந்தித்துப் பாரும். அழிவும் நிரந்தர இழிவுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
7.85. மத்யன் சமூகத்தாரிடம் அவர்களது சகோதரர் ஸுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் தெளிவான ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து உங்களிடம் வந்துள்ளது. அளவையும் நிறுவையையும் நிறைவாக்கி மக்களின் உரிமைகளை முழுமையாக அவர்களுக்கு வழங்கிவிடுங்கள். குறையுடைய பொருட்களை மக்களுக்கு வழங்கி அதில் குறைத்து அல்லது அவர்களை ஏமாற்றி குறை செய்து விடாதீர்கள். தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்திய பிறகு நிராகரிப்பைக் கொண்டும் பாவங்களைக் கொண்டும் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால் மேற்கூறப்பட்டவை அனைத்தும் உங்களுக்குச் சிறந்ததும் பயனளிக்கக்கூடியதுமாகும். ஏனெனில் அல்லாஹ் தடுத்துள்ளான் என்பதற்காக விலகி பாவங்களை விட்டு விடுவதும், ஏவப்பட்டதைச் செய்து அல்லாஹ்வை நெருங்குவதும் அதில் உள்ளது.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ— وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِیْلًا فَكَثَّرَكُمْ ۪— وَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
7.86. மக்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோணலை ஏற்படுத்த நாடியவர்களாக நேர்வழியை விரும்புபவர்களை மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காகவும் அவர்களைப் பயமுறுத்தியவாறு, வழிகளில் அமராதீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் குறைவான எண்ணிக்கையினராக இருந்தீர்கள். அவனே உங்களை அதிகப்படுத்தினான். உங்களுக்கு முன்னர் பூமியில் குழப்பம் செய்தோரின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அழிவும் நாசமுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِنْ كَانَ طَآىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِیْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآىِٕفَةٌ لَّمْ یُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰی یَحْكُمَ اللّٰهُ بَیْنَنَا ۚ— وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
7.87. உங்களில் ஒரு கூட்டத்தினர் என் இறைவனிடமிருந்து நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியும் மற்றொரு கூட்டத்தினர் அதனை உண்மைப்படுத்தவில்லையென்றால். நிராகரிப்பாளர்களே! இரு பிரிவினருக்கும் அல்லாஹ் என்ன தீர்ப்பை அளிக்கப் போகின்றான் என்பதை எதிர்பாருங்கள். அவனே தீர்ப்புக் கூறுவதில் சிறந்தவனும் மிகவும் நீதமானவனுமாவான்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• اللواط فاحشة تدلُّ على انتكاس الفطرة، وناسب أن يكون عقابهم من جنس عملهم فنكس الله عليهم قُراهم.
1. ஓரினச் சேர்க்கை அருவருப்பான காரியம், அது இயல்பு தலைகீழாக மாறிவிட்டது என்பதற்கு சான்றாக இருக்கிறது. எனவே அவர்களது செயலுக்குப் பொருத்தமான தண்டனையாக அவர்களது கிராமங்கள் தலைகீழாகப் புரட்டப்பட்டன.

• تقوم دعوة الأنبياء - ومنهم شعيب عليه السلام - على أصلين: تعظيم أمر الله: ويشمل الإقرار بالتوحيد وتصديق النبوة. والشفقة على خلق الله: ويشمل ترك البَخْس وترك الإفساد وكل أنواع الإيذاء.
2. இறைத்தூதர்களின் அழைப்பு -அவர்களில் உள்ளவர்தான் ஸுஐப் அலை- இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, அல்லாஹ்வின் கட்டளைகளைக் கண்ணியப்படுத்துவது. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல், தூதை உண்மைப்படுத்துதல் ஆகியவற்றை அது உள்ளடக்கும். இரண்டு, அல்லாஹ்வின் அடியார்கள் மீது அன்பு செலுத்துவது. அது அளவை நிறுவைகளில் மோசடி செய்யாமை, குழப்பம் மற்றும் அனைத்துவிதமான தீங்கு தரும் காரியங்களையும் விட்டு விடுவதையும் உள்ளடக்கும்.

• الإفساد في الأرض بعد الإصلاح جُرْم اجتماعي في حق الإنسانية؛ لأن صلاح الأرض بالعقيدة والأخلاق فيه خير للجميع، وإفساد الأرض عدوان على الناس.
3. சீர்திருத்தத்தின் பிறகு பூமியில் குழப்பம் விளைவிப்பது மனிதர்களின் உரிமையில் இழைக்கப்படும் சமூகக் குற்றமாகும். ஏனெனில் கொள்கை, ஒழுக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு பூமி சீராகுவது அனைவருக்கும் நன்மையே. பூமியில் குழப்பம் விளைவிப்பது மனிதர்கள் மீது செய்யப்படும் வரம்புமீறலாகும்.

• من أعظم الذنوب وأكبرها وأشدها وأفحشها أخذُ ما لا يحقُّ أخذه شرعًا من الوظائف المالية بالقهر والجبر؛ فإنه غصب وظلم وعسف على الناس وإذاعة للمنكر وعمل به ودوام عليه وإقرار له.
4. பாவங்களில் மிகப் பெரியது, அருவருப்பானது ஒருவர் மார்க்கம் அனுமதிக்காத தனக்கு உரிமையில்லாத செல்வங்களை அத்துமீறி பலவந்தமாக பெற்றுக் கொள்வதாகும். அது அபகரிப்பும், அநீதியுமாகும்.மேலும் அது தீமையைப் பரப்புவதும் அதன்படி செயல்படுவதும் அதில் நிலைத்திருப்பதுமாகும். அதை ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አዕራፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት